Friday, April 22, 2022

உள்நோக்குப் பயணம்

 c

0 
. *அண்டத்தில் இருந்து உருவான பிண்டமே👨இந்தமனித உடல்👨 !!! நிலம் நீர், தீக்காற்றாகாயம் என ஐந்து பூதங்களும் உருவாக்கிய *நம்முடலை இறுதியில், ஐம்பூதங்களே உண்ணுகின்றன !!!*
*ஏக்கர் கணக்கில், மண்ணை வளைத்துபோடுகிறான் 👨மனிதன்👨. *முடிவில், வெறும் 6 அடி மண்ணே 👨அவனை👨 அடக்கி மண்ணாக்கி விடுகின்றது.*

*மண்ணை விரும்பிய 👨மனிதனை👨, அந்த மண்ணே இறுதியில், தின்றுவிடுகின்றது !!! ஹஹ்ஹஹா இதிலென்ன வேடிக்கை தெரியுமா?* *இதையெல்லாம்👨நாம்👨" புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதுதான்* !!! *இந்த ஞானம் 👨நம்👨எல்லோர்க்கும் தெரியாமலில்லை !!!* *அது, நம்மனதில் நிலைக்க வில்லை* என்பதே உண்மை !!!
*வெட்டவெளியிலுள்ள விளக்கினை அனைப்பதற்கு, காற்று எத்திசையில் இருந்தும் வந்திடலாம்* !!! அதைப் போலவே,* *இறுமாப்போடு புலன் இன்பங்களில் மயங்கித் 👨திரிபவனுக்கு👨, எமன் எத்திசையில் இருந்தும் வந்திடலாம் !!!*
*ஆரோக்கியம், இளமை, வசதி, பாதுகாப்பு என நான்கும் *ஆனவமாக மாறி, 👨மனிதனது👨 அறிவுக்கண்ணை மறைக்கின்றன !!!*
*உன்னுடலை உன்னால் (காலனிடம் இருந்து) முழுவதுமாக, காப்பாற்ற முடியாது. எப்போதும் 👨உன்👨 மனதில் நிலைக்க வேண்டிய ஞானமிது*
*"நடைபாதை நடப்பதற்கே" என்று ஏன் சொல்ல வேண்டும்? ஏனெனில், அதை, நடப்பதற்குத் தவிர மற்ற எல்லா காரியங்களுக்கும் நாம் பயன்படுத்துவதால்தானே?*
*அதைப்போலவே, *வாழ்க்கை வாழ்வதற்கே* என்று ஏன் சொல்ல வேண்டும் ? ஏனெனில், *👨மனிதன்👨 எந்த நோக்கத்திற்காக படைக்கப் பட்டானோ ... *அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றான்.*
*விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர, *உலகில் 700 கோடி 👨மனிதர்களும்👨, மனித நோக்கத்தை (பிறவிப்பயனை) அடையாமலேயே இறந்து விடுகின்றனர்.*
*யார் 👨இவர்கள்👨 ? உண்டு உறங்கி உடல் வளர்த்து, *வாழ்ந்தும் வாழாமல் மறைகின்ற* இவர்கள், *பிறந்தும் பிறவாததற்கு சமம் !!!*
*கோவப் படாதீர்கள் !!! *இப்போது 👨உங்களுக்கு👨 வர வேண்டியது கோபம் அல்ல - சிந்தனை !!!
*அடுத்த கசப்பான உண்மையை சொல்லட்டுமா? 👨நீ👨 செய்யும் எல்லா தவறுகளுக்கும் காரணம், உன்மனதை நீ அதன்போக்கில் ஓட விடுவது தான்" !!! 👨உனக்கு👨 எதிரியே உன் மனம்தான்.*
*மனதை ஆள்பவனுக்கும் மனதால் ஆளப்படுபவனுக்கும்* ஒரு சிறிய வித்தியாசம் தான் !!!
*பேயோட்டுபவனுக்கும், 👿பேய்👿 பிடித்துக் கொண்டவனுக்கும்* உள்ள வித்தியாசம்தான் அது !!!*
ஆக, *👨நம்மில்👨 நிறைய பேருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா? ஒப்புக் கொள்ளாதவர்களே இங்கு அதிகம்* !!!
மனதை அதன் போக்கில் அனுமதிக்கும் இவர்களுக்கு *மிகமோசமான இன்னலைத் தரும் முக்கியமான 5 எதிரிகள்* உள்ளனர் !!!*
*காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம்* என்னும் ஐவரே அந்த எதிரிகள் !!! உன்மனதிற்கே தெரியதவாறு *உன்மனதினுள் நுழைவார்கள்.* இவர்கள் ரகசியமாக உன்னிடமுள்ள *ஞானத்தை திருடிக் கொள்வார்கள்.* உடனே, *நீ முட்டாளாகி, இன்னல்களைத் தேடிக் கொண்டு*, முடிவில் *உனக்கு மட்டும் தான் அதிகமான துன்பமென கடவுளை நொந்து கொள்வாய் !!!*
பிறர்மீதுள்ள *"பொறாமையும் கோவமும் கூட *திறமையாக உன்மனதினுள் நுழைவார்கள்.* உன்னைத்தான் *அதிகமாக தண்டிப்பார்கள்"* இதைப் புரிந்து கொண்டால், அதுவே உயர்ந்த ஞானம். *அதுவே, பொறாமை கோவம் என்கிற இரு மனநோய்களுக்கும் சிறந்த மருந்து*
அடுத்தபடியாக, நாக்கை அடக்கினால், *பிறர் வெறுப்புக்கு பலியாகாமல் இருக்கலாம்*
போறாத குறைக்கு பொன்னம்மா குறை என்பார்கள் !!! 👨நம்👨 மனதில் உள்ள 😏வெறுப்பு😏. *ஆம் !!! 👨நமது👨மனமும் சிலர்மீது வெறுப்பை வாரி உமிழ்கின்றது*
ஆனால், "👨 அவர்கள்👨 அவ்வாறு வாழ்வதற்குதான் படைக்கப் பட்டு இருக்கின்றார்கள் They are created to live their own way. *இந்த ஞானமே நம்மனதில் உள்ள வெறுப்புக்கு மருந்து*
*எல்லாவற்றையும் சொன்ன பின்பு எது பிறவிப்பயன்? எது உண்மையான வாழ்க்கைப் பாதை? என்று சொல்லா விட்டால், இப்பதிவு நிறைவடையாது !!!*
சாஸ்த்திரங்கள் மனிதனுக்கு கூறும் இரண்டு அறிவுரைகள்.
1. *வாழு*
2. *வாழவிடு*
*Live And Let Live*
*மொத்தமுள்ள 70 லட்சம் உயிரினங்களில், 👨மனிதன்👨 இதுவரை கண்டுபிடித்துள்ள 15 லட்சம் விலங்கு உயிர்களுக்கும் *எந்த ஹிம்சையும் செய்யாதிருத்தலே* "வாழவிடு" என்ற சொல்லுக்கு பொருளாகும்.*
*ஒரு பேரனாக, மகனாக, நண்பனாக, கணவனாக, அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்த ஆண்களும், ஒரு பேத்தியாக, மகளாக, தோழியாக, மனைவியாக, அம்மாவாக, பாட்டியாக வாழ்ந்த பெண்களும், *58வரை பிறருக்காக வாழ்கிறார்கள்* !!!
ஆனால், *அவன் வாழ்ந்து முடிச்சுட்டானப்பா* என்றல்லவா *இளைஞர்கள் எண்ணுகிறார்கள் ?*
ஆனால் உண்மை என்ன தெரியுமா? *அவர் இப்பொழுதுதான் தனக்காக வாழ ஆரம்பிக்கின்றார்*!!! அதாவது *இனிமேல் தான் அவர் தனது பிறவி நோக்கத்தை அடைய முற்படுகின்றார் !!!*
*அப்படியானால், 58 வயது வரை பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கை உண்மையான வாழ்க்கை இல்லையா*?
*உன் அப்பாவும் அம்மாவும் உனக்காக வாழ்ந்த குடும்ப வாழ்க்கையை தவிர்த்து இருந்தால், நீ பிறந்திருக்கவே மாட்டாய் !!! எனவே, பிறருக்காக வாழ்கின்ற குடும்ப வாழ்க்கை மனிதனுக்கு அவசியமே !!! இருப்பினும் அதைக் காட்டிலும் அவசியமானது அவர்கள் தன்னை உணர வாழும் வாழ்க்கை !!!*
*வேதங்களிலும், இதிகாசங்களிலும், குறிப்பிட்டுள்ள முறையில் மனதை உள்முகமாக செலுத்தி அதன்படி வாழ்தலே, "வாழு" என்ற சொல்லின் பொருளாகும்*!!!
*இனி, சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டுகின்ற அந்த "வாழு" என்கிற வாழ்க்கையை 👨நாம்👨 உணர்ந்து விட்டால், இப்பதிவு நிறைவு பெற்றுவிடும் !!!*
அதற்கு இரண்டு மார்க்கங்கள் உள்ளன !!!
1. *வைராக்கியம். 2. கர்மயோகம்*
*👨நீ👨 உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகளோடு வாழுகின்ற தவ வாழ்க்கையை* (வைராக்கியம்) பின்பற்று !!!
*அதற்காக கார்-பங்களா, பணம்-பதவி, சொத்து-உறவு என்றெல்லாம் அனைத்தையும் விட்டுவிடு என்கிறாயா?*
*"ஆம் !!!" என்று உண்மையைச் சொன்னால்* என்னை முட்டாள் என்று சொல்லி விடுவீர்கள்.* உண்மைதானே?
ஏனெனில், ஒரு பொருளை பெருவதற்கு எவ்வளவு சிரமப் பட்டீர்களோ ... *இழக்கும்போது அதைவிட நீங்கள் சிரமப்படுவீர்கள்* !!!எனவே, அந்த உண்மையை வேறு சொற்களால், *மாற்றி சொல்லுகிறேன்.*
*எல்லாம் இருந்தும், மனதளவில் எதுவும் இல்லாதவனாக வாழ்ந்துவிடு* !!!
*இந்த வைராக்கிய வாழ்க்கையானது உனது மனதில் நற்குணங்களை நிலைக்கச் செய்து, தீய குணங்களில் இருந்து விடுதலை தரும் !!!*இதுவே, வைராக்கியத்தின் மூலம் பெறும் சித்த சுத்தி* !!! அப்படி வாழ்வது கடினமாக சிலருக்கு தோன்றினால், அவர்கள் *கர்ம யோகத்தின் மூலம், இந்த சித்த சுத்தியை பெறலாம்.*
கர்மயோகம் : *கீழே குறிப்பிட்ட எண்ணங்களை மனதில் முன்நிறுத்தி,செயல்களை செய்வதே, கர்மயோகம். மற்றவை கர்மம் எனப்படுகின்றன.*
*1. செயலுக்கு முன் 😘
*(a). எண்ணமும், சொல்லும், செயலும், ஒன்றாக இருத்தல்*
*(b). பொது நல நோக்கத்தோடு இருத்தல்,*
*(c). தர்ம காரியங்களில் மட்டுமே ஈடுபடுதல்*
*2. செயலின்போது 😘
*(a) பலன் நோக்கு இன்றி இருத்தல், அதாவது, தோள்வி பயமின்றியும், வெற்றிமோகம் இன்றியும் இருத்தல்.*
*(b). முழு முயற்சியுடனும் ஈடுபடுதல்.*
*3. செயலுக்குப் பின்*
*வெற்றி அல்லது தோள்வி ஆகிய விளைவுகள் எதுவாயினும், அதை இறைவனின் பிரசாதமாக விருப்பமுடன் ஏற்றுக் கொள்ளுதல்*
அதாவது, செயலுக்குமுன், *பலன் நோக்கமின்றியும்*, செயலின்போது *முழு முயற்சியோடும்*, செயலுக்குப்பின், *விளைவுகள் எதுவாயினும், விறுப்பு வெறுப்பின்றி, அவற்றை இறைவனின் பிரசாதமாக, ஏற்பதும்* என இவ்விதமான *நோக்கங்களோடு (ATTITUDE) செயலைச் செய்வது தான் கர்மயோகம் !!!*
வைராக்கியம், மற்றும் கர்மயோகம் மூலம், ஏன் சித்தத்தை சுத்தமாக்க வேண்டும்?
*உன் மனதை உள்முகமாக திசைதிருப்பி அதை சரியான பாதையில் பயணிக்கச் செய்வதற்கு சித்த சுத்தி என்கிற இந்த பயிற்சியே *அடிப்படைத் தகுதியாகும்*!!!
*இந்த அடிப்படைத் தகுதியை அடைந்த பின்பு நமது உள்நோக்குப் பயணம் மிகவும் சுலபமாகிவிடும் !!!*
*சுலபம் என்று குறிப்பிட்ட அந்த உள்நோக்கு பயணம் வெற்றி பெற்றால் அதன் பின் 🌏உலகமே🌏, உன் காலடியில் தான்*

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...