Showing posts with label கழுகு போதிக்கும் போதனைகள்:. Show all posts
Showing posts with label கழுகு போதிக்கும் போதனைகள்:. Show all posts

Friday, April 22, 2022

கழுகு போதிக்கும் போதனைகள்:

 வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்:

வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து கொண்டு வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.
கழுகு எப்போதும் இறந்த உயிரினத்தின் மாமிசத்தை உண்ணாது.. மாறாக அவை தன் இரையை ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக கணக்கிட கூரான பார்வை உடையது..
தன் இரையை உயிருடன் எடுத்து சென்று உண்ணும்..
கடும் புயல், தொடர் மழை, இடி, மின்னல் என எச்சுழலிலும் தன் வாழ்க்கை முறையை மாற்றி துணிவுடன் எதிர் நீச்சல் அடித்து வெல்லும்.
வியூகம் :
கழுகின் எதிரி பாம்பு தான்..
பாம்பிடம் நேரடியாக தரையில் போரிடமால், தன்னுடைய அலகால் பாம்பை தூக்கி க்கொண்டு மேலே உயரமான மேகக்கூட்டங்களுக்கு மேல் பறந்து சென்று, பாம்பிற்கு பயம் வரவைத்து, சோர்வு மற்றும் பலவீனப்படுத்தி மேலிருந்து கீழே பாம்பை போட்டுவிடும்..
கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை. ஆனால், அவற்றிற்கு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும்போது உடலில் பலவித மாற்றங்க்கள் நிகழ்கின்றன.
நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.
பலம் பொருந்திய அலகு, இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும். அதற்கும் மேலாகப், பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக்கொண்டு,
எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய்விடும்.
இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள்
ஒன்று, இந்த வேதனைகள் பொறுக்க முடியாமல் இறந்து போவது;
இரண்டாவது , முடிந்த வரையில் முயன்று பார்த்து, உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது....
வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா?
உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டுவிடும்.
பொறுமையுடன், புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும்.
பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு,
தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும். திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும்.
அடுத்ததாக, புதிய, கூரிய, வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன், நகங்களாலும், அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும்.
அடர்ந்த, கறுத்த, பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும்.
புது அலகு,
புது நகங்கள்,
புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் உருவாகிய மகிழ்ச்சியில் மேலே உயரே, உயரே பறக்க ஆரம்பிக்கும்…
நீங்கள் துவர்ந்து விடாமல்,சோர்ந்து விடாமல் நிதானமாக உங்கள் மனநிலையை திடமாக்கி,
உங்களது அன்றாட சிறு சிறு வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செயல்பட்டு வந்தால், உங்கள் பெரும் பிரச்சினைகள், சில நாட்கள் கழித்து உங்களுக்கு சிறியதாக தோன்றும்..
உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு உங்கள் தன்னம்பிக்கை என்ற சிறகால் நீங்கள் வாழ்வில் உயரே பறந்து மற்றவர்களுக்கும்,உங்களை ஏளனமாக பேசியவர்களும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக பேசுமளவிற்கு வாழ்வில் உயர்வீர்கள்...
இவையணைத்தும் கழுகிடமிருந்து
நாம் கற்ற வேண்டியவையாகும்..

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...