Friday, February 3, 2023

குரு கிடைத்து விடுவார்!!!


5.2.2023  ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  12.38 முதல் 6.2.2023 திங்கட் கிழமை அன்று மதியம் 3.07 வரை 
   அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் வருகிறது.   

உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம் 

"ஓம்   ஹ்ரீம் அகத்தியமகரிஷி  நமக" என்று அல்லது  " ஓம்  ஹ்ரீம் அகத்தீசாய நமஹ"   என்று ஜெபிக்கவும்.

முருக கடவுள் அவதாரம் எடுக்கும் முன்பே நமது தாய் தமிழ் மொழி தோன்றி விட்டது.

முருக கடவுள் அவதாரம் எடுத்த பிறகு அவருக்கு தாய் தமிழ் மொழியினை அண்ணாமலை  என்ற சிவ பெருமான் போதித்தார்!

அதன் பின்னர் அகத்தியர் சித்தருக்கு முருக கடவுள் தாய் தமிழ் மொழி சொல்லி கொடுத்தார் !!!

அகத்திய சித்தர் நாம் வாழ்ந்து வரும் பூமி முழுவதும் பயணம் செய்து எல்லா பகுதியிலும் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியை சொல்லி கொடுத்தார்!!!

கடந்த 28,55,124 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேசப் பட்டு வரும் ஒரே மொழி நமது தமிழ் மொழி !!!

இன்று பாரத நாட்டில் தமிழ்நாடு மாநிலத்திலும் இலங்கை நாட்டிலும் முழுமையாக இன்று வரையிலும்  ஆன்மீக தமிழ்  பேசப்பட்டு எழுதப்பட்டு வருகிறது.

இது தவிர உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வரும். தமிழ் மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் 22,000 தீவுகளுக்கு தமிழ் மக்களால் மட்டுமே சென்று வர. முடியும். வேறு யாராலும் அங்கே  போக முடியாது.இவை அனைத்தும் ஆன்மீக ரகசியம் சார்ந்த  தீவுகள் ஆகும் .

 இதனால் நம்முடைய ஆதிமூல முதல் குரு அகத்தியரின் அருள் நமக்கு கிடைக்கும்!!!

தகுந்த ஆன்மீக குரு வேண்டும் என்று தேடல் நம்மில் பலருக்கு இருக்கிறது.

அவர்களுக்கு தகுந்த மற்றும் உண்மையான குரு இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் தினமும் ஒரு மணி நேரம் வரை " ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக " என்ற மந்திரம் ஜெபித்து வர வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை இவ்வாறு ஜெபம் செய்து வந்தால் குரு கிடைத்து விடுவார்!!!

ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்

*ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம் பற்றிய பதிவு 

ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது என்பதால், ஸ்படிகம் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஸ்படிகத்தில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கூடுதல் சிறப்புண்டு. 

ஒரு முறை கயிலாய மலையை நோக்கி ஆதிசங்கரர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் கொடுத்தனுப்பினார். அவை,

1. முக்தி லிங்கம், 
2. வர லிங்கம், 
3. மோட்ச லிங்கம், 
4. போக லிங்கம், 
5. யோக லிங்கம் 

ஆகிய அந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களையும், சிவபெருமானின் ஆணைப்படி, ஐந்து இடங்களில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அவற்றில், முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா மாநிலம் சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சிபுரத்திலும் அமைக்கப்பட்டன. 

தமிழ்நாட்டில் சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயங்களில் உள்ள ஸ்படிக லிங்கங்கள் சிறப்புக்குரியவை. 

இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த ஸ்படிக லிங்கம் விபீஷணனால் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. 

ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசித்து விட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனார் கோவில் ஆகியவற்றிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...