Wednesday, June 28, 2023

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட தனது லட்சிய ககன்யான் ஏவுகணைத் திட்டத்துக்கான பணியைத் தொடங்க இஸ்ரோ தயாராகி வருகிறது.

குறிப்பாக நமது கிரகத்துக்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்களுக்குப் பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அந்த வகையில் விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் பொருள்களில் ஒன்றான அவர்களின் உணவு முறை குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இது குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி வீரர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு இந்திய உணவுகளே வழங்கப்படும். இந்த அசாதாரண பயணத்துக்கான சிறப்பு உணவுப் பொருள்கள் மற்றும் மெனுக்களை உருவாக்கப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகக் குறைந்த நாட்கள் மட்டுமே பயணம் போன்ற பணிகளில் இட்லி, சாம்பார் போன்றவை மெனுவில் இருக்காது. அதற்குப் பதிலாக விண்வெளி வீரர்கள் பதப்படுத்தப்பட்டது போன்ற உணவுகளை உட்கொள்வார்கள். பின்பு நீண்டகால பயணம் மற்றும் அங்கேயே தங்கியிருந்து செய்யும் பணிகளுக்கு கோழிக்கறி உள்பட பலவகையான உணவுகள் வீரர்களுக்குக் கிடைக்கும். மேலும் உணவின் தன்மை பூமியில் நாம் உட்கொள்வதைப் போலவே இருக்கும்" என்று பகிர்ந்துள்ள அவர், இந்திய விண்வெளி வீரர்களுக்கான தேர்வு முறைகள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். அதாவது இந்திய விமானப்படை விண்வெளி வீரர்களுக்கு முதன்மை ஆதாரமாக உள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் விமானப் பயணம் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள்.

குறிப்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு விமானப் படையில் இருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள், விண்வெளி வீரர் பயிற்சியாளர்களாகச் சேர்ந்துள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த, முன்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் உதவியையும் நாடியுள்ளோம்.

இந்த ககன்யான் திட்டத்துக்கான இறுதித் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்துவதே தற்போது எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்.

அதேபோல் நிலவை ஆய்வு செய்வதற்குக் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது.

சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி

சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். பெய்ஜிங் நேரப்படி காலை 6.33 மணியளவில், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள டோங்ஃபெங்கில், ஷென்சோ-15 விணகலத்தில் பயணம் விண்வெளி வீரர்களான ஃபீ ஜுன்லாங், டெங் கிங்மிங் மற்றும் ஜாங் லு தரையிறங்கியதாக சீன மனிதர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் (சிஎம்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. ஜுன்லாங், கிங்மிங் மற்றும் லு ஆகிய விண்வெளி வீரர்கள், சீன விண்வெளி நிலையத்தில், 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக சீனர்களை கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மே 30ம் தேதி, சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு செவ்வாய்க்கிழமை அனுப்பியது.  சீனாவின் கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா். விண்வெளி நிலையத்தில் 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்வார்கள் சீனர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

 விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

வாஷிங்டன்:

 பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியா அமெரிக்கா இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இதற்கு முன்பு பல முறை அமெரிக்கா சென்றிருந்தாலும், அரசு முறை பயணமாக அமெரிக்கா

பிரதமரின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் இணைந்து செயல்பட உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளி துறை: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெட் இன்ஜின், டிரோன்கள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முன்கூட்டியே தகவல் வெளியானது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியா ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விண்வெளி துறையில் முக்கிய உடன்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி இன்னும் சில மணி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை சந்திக்கவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதக்குல நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்கும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

அதென்ன ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை: 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் ஒப்பந்தத்தை (OST) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை. விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாட்டை நிர்வாகம் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இது கொண்டிருக்கிறது. பொதுவாக சர்வதேச விண்வெளி ஆய்வுகளில் இதுதான் ரோட் மேப்பாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை படி 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எளிதாக மனிதர்களை அனுப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் தான் இந்தியா கையெழுத்திட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக இருக்கும்.

Monday, June 26, 2023

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்

 ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்

புராண வரலாறு அனைத்து ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான். அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், 'அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்' என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான்.

மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

 கோயில் அமைப்பு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில், 5 தனித்தனி சன்னநிதிகளில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. 4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது. அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது. பலன்கள் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம். இங்குள்ள ஐந்து வீட்டு சுவாமிகளை மனமுருக தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும், அற்புதங்கள் நிகழும் என்பது இந்த கோவிலின் பக்தர்களின் அசராத நம்பிக்கை 

திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது. இந்த பிரசாதத்தை நமது வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானை அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்தால், ஒருபோதும் அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. இதுமட்டுமின்றி, மாதாந்திர வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதிய வேளையில் மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அய்யாவின் பேரருளால் உணவருந்தி, மன நிம்மதியுடன் செல்வர். மேலும், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் சிறப்பானது. அன்னதானம் சாதி மத பேதமின்றி, இந்த கோவில் நடத்தப்படும் அன்னதானம்" என்ற சமபந்தி விருந்து ஆலயத் தின் "தனிச்சிறப்பு" . இங்கு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கல்ந்துகொண்டு உணவருந்தி மகிழ்வர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது. திருமணிக்கட்டி சிறப்புகள் சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும், பூஜை முடிந்ததும், மூலஸ்தானத்தில், திருமணிக்கட்டி பொட்டு வைத்து, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தில் வழங்கப்படும், திருமணிக்கட்டி பிரசாதத்தை, கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை பூசிக் கொள்வது வழக்கம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண்பொட்டு இட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த பொட்டு வைத்திருப்பவர்களை கண்டாலே, அவர்கள் ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம். இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இதனால், தீராத நோய்களும் தீர்ந்து வருகிறது. கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு இயந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும். 

பூஜை கால அட்டவனை ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையின்போது, கோவிலில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். வழிபாட்டு நேரம் தரிசன நேரம்: காலை 7-8.30 மணி வரை மதியம் 11-12 மணி வரை மாலை 5.30- 7 மணி வரை.

Sunday, June 18, 2023

Muthulakshmi Reddi’s 133rd Birthday

 Today’s Doodle, illustrated by Bangalore-based guest artist Archana Sreenivasan, celebrates the Indian educator, lawmaker, surgeon, and reformer Muthulakshmi Reddi. Constantly breaking down barriers throughout her life, Reddi was a trailblazer who devoted herself to public health and the battle against gender inequality, transforming the lives of countless people—especially young girls.

Born on this day in 1883 in the southern state of Tamil Nadu, Reddi became the first female student admitted to prestigious Indian institutions, the first woman to work as a surgeon in a government hospital, and the first female legislator in the history of British India.

As a young girl, Reddi resisted her parents’ plan for an early arranged marriage, convincing them she deserved an education. After passing her exams, she attended Maharaja College, formerly an all-boys school. Despite threats of students pulling out from the school, she won a scholarship, graduated with honors, and went on to be the first female student at Madras Medical College.

Reddi later gave up her medical practice to join the Madras Legislative Council, where she worked to raise the legal age of marriage and combatted exploitation of girls.

In 1914, she married a doctor named Sundara Reddi on the understanding that he treat her as an equal. Working for the upliftment of women and battling gender inequality, she supported Gandhi’s efforts for Indian independence.

After losing a sister to cancer, she launched the Adayar Cancer Institute in 1954. One of the most respected oncology centers in the world, it treats some 80,000 patients each year. In recognition of her service to her country, in 1956, Reddi was awarded the Padma Bhushan by the Government of India.

Happy birthday, Dr. Kamala Sohonie! , 112th Birthday

 Today’s Doodle celebrates the 112th birthday of Indian biochemist Dr. Kamala Sohonie. She was the first Indian woman to achieve a Ph.D in a scientific field during a time when Indian women were conspicuously underrepresented in scientific disciplines. By breaking barriers and proving her doubters wrong, Dr. Sohonie not only did pioneering work in her field of biochemistry but helped forge a path for future Indian women to overcome gender bias and pursue their dreams.

Per family historical records, Dr. Sohonie was born in Indore, Madhya Pradesh on this day in 1911 to parents who were respected chemists. Wanting to follow in her father’s and uncle’s footsteps, she studied chemistry and physics at Bombay University and graduated at the top of her class in 1933. She became the first woman to be inducted into the Indian Institute of Science (IISc) but was imposed with stringent conditions during her first year — all because its director doubted the capabilities of women in science.

Dr. Sohonie proved her competence and was granted permission to continue her research. In fact, she impressed the director so much that the IISc began accepting more women into their program. For the next few years, Sohonie studied the various proteins found in legumes and concluded they boosted nutrition in children. In 1936, she published her thesis on this subject and obtained her master’s degree.

One year later, she earned a research scholarship at Cambridge University. Dr. Sohonie discovered Cytochrome C, an enzyme important to energy generation, and found that it was present in all plant cells. In just 14 months, she completed her thesis about this finding and acquired her Ph.D. When she returned to India, Dr. Sohonie continued studying the benefits of certain foods and helped develop an affordable dietary supplement made from palm nectar. This nutritious drink, called Neera, is a good source of Vitamin C and has been proven to improve the health of malnourished children and pregnant women.

Dr. Sohonie was awarded the Rashtrapati Award for her work on Neera. She also became the first female director of the Royal Institute of Science in Bombay.

Tuesday, June 13, 2023

Jodhpur, Rajasthan

 



Dubbed the blue city for its famously cobalt-coloured buildings, Jodhpur in Rajasthan  is an irresistibly alluring destination in India’s so-called Golden Triangle. Above the city, imposing Mehrangarh Fort rises, its red-sandstone walls perched at the top of the cliff. Stay in a heritage property within the fort’s walls and look out over the city from intricately carved windows. It's hands-down one of the most romantic destinations in India. If you're getting married and considering a stay in Jodhpur, read up on why Indian is the ideal honeymoon destination.

Where to stay: For jaw-dropping luxury to mark the most romantic of occasions, book a room at the Umaid Bhawan Palace. It's an handsome sandcastle of a structure, set in more than 26 acres of gardens – making it one of the world's largest private residences. Expect Art Deco details, a fabulous spa, two swimming pools, a yoga studio, tennis courts and even a "Champagne Museum Walk". Oh, and the toiletries are all Molton Brown, of course.

Darjeeling, West Bengal





 Just the name of this town conjures up the fragrant scent of tea leaves. Situated in the Himalayan foothills, Darjeeling is among the most romantic places in India, its curving rows of manicured tea plants elegantly shaping the hilled landscape into emerald-green curving undulations. To experience it's old-world charm, plunge through the mist-covered mountains on the narrow-gauge Darjeeling Himalayan Railway.

Where to stay: Simplicity and clean lines are the order of the day at the Sterling Darjeeling, stationed some 7600ft above sea level. Couples with kids in tow will delight at the club house – where there's entertainment in the form of chess and table tennis – and the in-house babysitting facilities. Leave your little ones in safe hands while you sit down for a candlelit meal, strike out on a romantic stroll or take advantage of the hotel's spa and wellness centre in peace.


Puducherry, Tamil Nadu

 



Escape from the hectic pace of modern-day Chennai in Puducherry (also sometimes Pondicherry or just Pondy) in Tamil Nadu. With its crumbling colonial villas and colourful leafy streets, the influences of French rule are clear to see in the French quarter. And, known as “Little Paris”, it certainly espouses some of the City of Love’s romantic charm. Take a walk along the beach promenade for panoramic views out over the Bay of Bengal.

Where to stay: For a touch of old-world charm, look no further than Le Dupleix. The property once served as the mayor's residence, the decor oozes romance and the beach is just a 5-minute walk away.

Kodagu (Coorg), Karnataka

 


Kodagu in Karnataka may be known as the Scotland of India, but as clouds of mist unfurl above the verdant, green, swirls of coffee plantations, it reveals itself as far more exotic. Breathe in the scent of fresh coffee and spices and luxuriate in Coorg’s laid-back way of life as you explore its sleepy plantations. There are also plenty of opportunities for loving strolls due to the area’s rich birdlife and atmospheric teak and sandalwood forests.

Where to stay: Couples should check into the Taj Madikeri Resort & Spa, clinging to a hillside some 4000ft above sea level. The views across the misty forests are achingly beautiful, while lovers can relax in the Jive Grande Spa, set across three floors. With a great restaurant, swimming pool, fitness centre and bookable activities – from nature walks to cookery lessons – you'll never want to leave.

The Jaisalmer desert, Rajasthan

 What could be more romantic than a night under the stars in the spectacular Indian desert? Jaisalmer in Rajasthan offers just that. While a camel trek itself may not make you fuzzy-hearted, as the sun sets and the sky fills with shooting stars, the mysterious desert is sure to enchant you. Spend the night in a luxury tent and relax in the isolated, peaceful surroundings.

Where to stay: While camping in the desert will likely feature as part of a camel trek, there are plenty of romantic options in Jaisalmer itself to book end your adventure. Moustache Jaisalmer has heritage rooms with bags of character, and famously friendly staff. Boutique Helsinki, meanwhile, has jazzed itself up with splashes of colour all around.



Manali, Himachel Pradesh,

 



High in the Himalayan mountains, picturesque, snow-topped Manali in Himachel Pradesh is a magnificent stop for a romantic retreat. Revel in your adventurous side with activities such as paragliding, skiing or mountaineering, making the most of the crisp mountain air. Or, take in the delightful views down the Solang Valley from the cosy warmth of a riverside cottage.

If tremendous landscapes set your heart aflutter, consider Rough Guides' North India Explored: From Delhi to Shimla itinerary. You can expect superlative panoramas as you traverse the Himalayan foothills, especially from the heady train ride through the peaks. This isn't just one of the most romantic spots in India, it's one of the most romantic places in the world.

Where to stay: Treebo Trend Celebriti Manali is our pick of the bunch for couples staying in Manali, where the inside decor features plenty of wood. There's a fire pit in the garden, where tables offer stupendous Himalayan views (as do the balconies in the rooms).

Kumarakom, Kerala, most romantic places in India

 

For a quintessentially Keralan experience, spend some time cruising the enchanting backwaters of Kumarakom on a traditional houseboat. Bordered by lush, green banks, the setting is nothing short of magical. Enjoy the sounds of water lulling your boat lazily to a coconut tree-lined shore, evoking a sense of old-fashioned romance, as you enjoy the best of Keralan cuisine.

Check out our comprehensive Kerala guide before you go. And for romantics who also have children should definitely read about Kerala in our guide to the 30 best places to go with kids.

Where to stay: While booking a trip on a houseboat is a compulsory Keralan experience, there are plenty of romantic places to stay on dry land, too. Why not book a villa at Taj Bekal Resort & Spa? The Kappil River flows through the resort, which offers a whole host of activities to enjoy with your loved one, from fishing to boating. Rooms are chic, the pool is divine and the food delicious.

The Taj Mahal, Agra, Uttar Pradesh, most romantic places in India

 


Observe Mughal architecture at its most magnificent at the Taj Mahal in Agra. Aside from being one of the most beautiful places in India, the Taj is surely the biggest, boldest romantic symbol on the planet. It was designed to house the body of Mughal Emperor Shah Jahan’s favourite wife, Muntaz Mahal. Created from precious materials and semiprecious stones from around the world, it took more than 20 years and about 20,000 men to build. It’s ostentatious and extravagant, but there’s no doubt that this wonder of the world is utterly spectacular.

For any lovers itching to visit the Taj Mahal, why not combine your trip with a wildlife safari? Spotting monkeys and leopards against spectacular Indian landscapes is a once-in-a-lifetime experience. Sharing it with your loved one is unforgettable. See it all by booking our Indian Wildlife Safari trip today.

Where to stay: For opulence and heritage style plump for either the Oberoi Amarvilas Agra or the Grand Imperial. Both have jaw-dropping decor, as well as luxurious spa facilities. Is anyone tempted by a couple's massage?

Kanyakumari, Tamil Nadu, most romantic places in India



 Sunsets don’t get much more romantic than this. Travellers to Kanyakumari  on the southernmost tip of India at Chitra Pournami – or full-moon – will be rewarded with a fabulous sunset in tandem with the moon rising. This makes it one of the best places to visit for couples in India. Almost entirely surrounded by water, Kanyakumari is where the Bay of Bengal meets the Indian Ocean and the Arabian Sea. It’s also a popular pilgrimage site, and the 3000-year-old Bhaghavathy Amman temple, perched on the sea shore, is well worth a visit.

Where to stay: The beachfront Sparsa Resort Kanyakumari is our pick, just a 5-minute walk from Sunset Point. Facilities are excellent, and there's an outdoor pool and tennis courts on site, too.


Udaipur, Rajasthan, most romantic places in India

 


With its sumptuous pink-hued palaces overlooking a series of placid lakes, Udaipur in Rajasthan is probably India’s most immediately romantic city. While the lakefront has been overtaken by hotels, head to the labyrinthine backstreets to find the true heart of the city and experience the Udaipur of old, as you wind past traditional havelis and historic bazaars. Alternatively, approach the romantic Taj Lake Palace from the water and admire its irresistible old-time allure.

Where to stay: There are plenty of uber-romantic places to stay in Udaipur, many on Lake Pichola. The Amet Haveli is one of the best, built in the 18th century. The rooms have glittering lakeside views, and the restaurant and pool are sublime.

Uttapams: pizza-pancake hybrids foods for south india

 


Is it a pancake? Is it a pizza? No, it’s an uttapam. A batter of fermented rice and lentils is ladled on to a griddle. Chopped tomato, onion, chillies, carrot, coconut and other toppings are then sprinkled on. The result is a fluffy, porous, delicious uttapam, softer than a dosa, and tastes great with chutneys or without.

Vadas foods for south india

 


What’s that doughnut-like thing doing on your South Indian breakfast thali (platter)? While a vada won’t cure your sugar cravings, it will satiate your desire for something deep fried, hot and crispy.

Made from a batter of black lentils, gently spiced with peppercorns, curry leaves, cumin, chilli and onion, this crunchy fritter tastes best when smeared generously with coconut chutney.

Idlis foods for south india




Soft, fluffy and ivory-coloured, idlis are what many South Indian families eat for breakfast. A fermented lentil-and rice-batter is steamed in little circular moulds, and the resulting spherical rice cakes are served with sambar and chutneys.

Idlis are light and mild tasting, an ideal snack for when you want to give your stomach a rest from fiery flavours.

Dosas foods for south india

 





1. Dosas: paper-thin crepes

A traditional breakfast food made of fermented rice-and-lentil batter, a dosa is much like a crispy thin crepe. It’s accompanied by sambar (a hot lentil soup) and coconut chutney.

Masala dosas are stuffed with a spicy mash of potato and onion; plain dosas are hollow; rava dosas are made from semolina; and some new-age variants get creative with fillings such as cottage cheese or mixed vegetables.

Whatever you choose (trust us and start with a masala dosa), the delightfully light dish is best eaten hot, when it’s fresh off the griddle.


Monday, June 12, 2023

10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை



தொழில் அதிபர் சையத் சமீர் உசேன் அவர்களின் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார்.

பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.

7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். 

தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன.

இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நிருபர்களை சந்தித்து காண்பித்து பேட்டி தருவதாக கூறினார் 


Friday, June 9, 2023

Sri raghavendra swamy temple -guruji


he samadhi or final resting place of Guru Sri Raghavendra Swamy is known as Brindavana and is located at Mantralayam in Kurnool district of Andhra Pradesh. Guru Raghavendra Swamy spend his last eventful days at Mantralayam before entering the brindavana alive. Raghavendra Swamy entered brindavana on Virodhikruth Nama Samvatsara Shravan Krishna Paksha Dwitiya tithi (second day during the waning or dark phase of moon in Shravan month) in 1671 CE.

Sri Raghavendra Swamy spent his entire life popularizing Dwaita philosophy propounded by Sri Madhvacharya

Brindavana was constructed under his own supervision in a place chosen by him.

The reasons for choosing a spot in Manchala village (later known as Mantralayam) for erecting his brindavana were, according to the swami himself, that he had during his previous birth as Prahlada in the Satya Yuga performed a yagna there and the place was so divine as to offer success always as evidenced by the great fight put by Anusulya agains teh mighty Pandavas in the Dwapara Yuga. Also, he love do have his brindavana near the temple for Manchalamma, his tutelary deity in his previous birth of Prahlada.

A homa kunda (place where yajna was conducted) is said to have existed in ancient times at the spot the sage chose for his Brindavana. To make the place holy, he procured from neighboring Madhavaram village a slab from the rock on which Bhagavan Sri Rama had rested while searching for Mata Sita in the forest during his Dandakaranya period of exile in the Ramayana.

Raghavendra Swamy supervised the chiseling of the slab to the size and collection of other materials for his final resting place. A figure of Vayu Bhagavan was sculpted on the slab.

On the second day the dark phase of moon in Shravan month (Shravan Krishna Paksha Dwitiya tithi as per traditional Kannada and Telugu calendar), the sage went through his daily rituals and delivered his last discourse to a large gathering of devotees.

“I would be parting only my body but would be present physically to safeguard the welfare of all” was the last message Guru Sri Raghavendra Swamy gave before entering into the Brindavana.

He sang the famous soul-stirring song in Kannada ‘Indu Enage Govinda,’ before entering Brindavana.

After the stone slabs were placed all around him, Guru asked his followers to keep 1200 saligramam (s) over his head and close the top portion of the brindavana with soil.

Today millions of pilgrims, cutting across manmade religious and caste barriers, visit Brindavana seeking the blessing of Raghavendra Swamy.

A popular belief among devotees is that nobody would go empty-handed from his abode or nobody would go without their wishes fulfilled from the temple housing his brindavana.

Sunday, June 4, 2023

காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். 

ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. 
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்...
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. 
லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். 

இப்போ, இந்த மெக்கர் லைன... காட்டு யானைகள் எப்படி டீல்பண்ணும் தெரியுமா ? 

முன்காலை தூக்கி தயாரா மெக்கர் போடப்பட்டிருக்குற இரும்பு போஸ்ட்டுக்கு முன்னாடி நிக்கும். கரன்ட் சப்ளை இருக்குற அந்த 3 நொடி ஸ்ஸ்ஸ்... சத்தத்த விட்டுட்டு, அந்த சத்தம் நிக்கும்போது சப்ளை வராத அந்த 5 நொடிய மட்டும் கரெக்ட்டா பயன்படுத்தி, போஸ்ட்டை ஒரே மிதிமிதிச்சு தாண்டி போயிடும். 

இல்லேன்னா... காய்ஞ்ச மரங்களை தூக்கி மெக்கர் மேலபோட்டு ஒடைச்சு, ஏறிமிதிச்சு தாண்டி போயிடும். வனத்துறை பல டெக்னாலஜிகளை கையாண்டும் கூட, காட்டு யானைங்க கிட்ட ஒன்னும் செல்லுபடியாகல. 

தோண்டி வெக்குற அகழியவெல்லாம் சர்வ சாதாரணமா மூடிட்டு, தாண்டி வந்துடும். 

ஓரளவுக்கு கை கொடுக்குறது... வேலியோர தேனி வளர்ப்பு & சுரைமுள் வேலி மட்டும்தான்.

காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குறது, வயதான பெண் யானைதான். கூட்டத்துல இருக்குற, ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி குடுக்கும். ஆபத்துன்னு... சின்ன பொறி தட்டினாலும், குட்டிங்கள பூரா நடுவுலவிட்டு, அத்தனை பெண் யானைகளும் சுத்தி அரண்அமைச்சு நிக்கும். 

அதே போல அங்க இங்க ஓடுற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ள கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை 
(LKG பசங்கள கவனிக்கிற வேலைய, அஞ்சாம் கிளாஸ் பசங்களுக்கு குடுத்தா... நல்லா 'சட்டாம்புள்ள' வேல பாப்பாங்க. அது மாதிரி...). 

யானைகளோட 'டேஞ்சர் சோன்' 30 மீட்டர்.  மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வர்றத யானைகள் அனுமதிக்காது. 
உடனே ஏறிவந்து, "நெருங்கி வராத" ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும்.

யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும். 

அப்படி போகும்போது... வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும், வாகன போக்குவரத்துகள் இருக்கும் சாலைகள கடக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போ, சடார்ன்னு எல்லாமுமா ஓடிப்போய் ரோட்டை கடந்துடாது. 

முதல்ல ஒரேஒரு ‘செக்யூரிட்டி’ கொம்பன் மட்டும் காட்டைவிட்டு வெளியவந்து, ரோட்டில் நின்னு தும்பிக்கைய தூக்கி சத்தம்போட்டு , வாகனங்களுக்கு எச்சரிக்கை செஞ்சு நிறுத்தும். 

ரெண்டு பக்கமும் வாகனங்கள் நின்னு, அமையானவுடன்... தன் கூட்டத்தை பார்த்து ஒருசத்தம் மூலமா, "வரலாம் வா..." ன்னு, சிக்னல் கொடுக்கும். அதுக்கு அப்புறம்தான் ஒன்னொன்னா வெளியவரும். 

நாமதான் வரிசைல போம்போது... தலைகள எண்ணினாக் கூட ரெண்டுமூணு பேர மறந்துடுவோம். ஆனா அது, ரோட்டை மட்டுமே ரெண்டு பக்கமும் பாத்துட்டு நிக்கும். ஆனா மிகச்சரியா... கடைசி யானை ரோட்டை தாண்டினதும், யோசிக்காம... சடார்னு அதுக்கு பின்னாடி போயிடும். 

அதே போல ஏதாவது ஒன்னு, வராம மிஸ்ஸானாலும் கூட, காட்டை பார்த்து சத்தம் குடுத்து, "ரெட் சிக்னல் விழப் போகுது. சீக்கிரமா வந்து தொல" ன்னு, அதட்டும். 

இந்த ரெண்டு பொறுப்பும், 'செக்யூரிட்டி கார்ட்ஸ்' ன்னு சொல்லப்படுற, ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகள்ட்ட கொடுக்கப் பட்டிருக்கும்.

(ஒரு கட்டத்துக்கு மேல... முதல் மஸ்து நேரத்துல, வளர்ந்த கொம்பன்கள், தலைமை யானைக்கு கட்டுப்படாம... அடாவடி செய்ய ஆரம்பிக்கும். அப்போ, இந்த ஆண் யானைகள் கூட்டத்தவிட்டு, விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி... கிட்டத்தட்ட 48 நாட்கள் கூட்டத்த விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ... இதுவும் கொஞ்சதூர இடைவெளில, பின் தொடர்ந்து போகும். கூட்டத்தின் மேலான பாசம் வடிஞ்சு, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடும். இதுதான், ஆக்ரோஷமா சுத்துற ஒற்றை கொம்பன்கள்).

(கொம்பனை பற்றிய ஒரு கொசுறு தகவல்...

ஒரு கொம்பன் உங்கள விரட்டி பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா... நீங்க 'உசைன் போல்ட்' டாவே இருந்தாலும், தப்பிக்க முடியாது. 

உங்க வேகத்தை எட்டிப் பிடிக்க உங்களுக்கு 8 நொடிதேவை. 
ஆனா... யானை நாலே நொடில, உங்கள பிடிச்சிடும். 

அவ்ளோ பெரிய உருவம் உங்கள ஆக்ரோஷமா விரட்டுதுன்ற உணர்வே... உங்கள மிரட்டி, ஓடவிடாம செஞ்சுரும். 

அதனால, யானைங்க கிட்ட விளையாடாதீங்க. 

எல்லா யானைகளும் மனிதர்களை கொல்லாது. வெறும் மிரட்டல்தான். 

ஆனா... ஒற்றை தந்தத்துடனோ, தாறுமாறா வளர்ந்த தந்தத்தோடவோ, சூறை நாற்றத்துடன் சுத்துற யானையவோ கண்டா... தலை தெறிக்க ஓடிடுங்க. 
கொலைகார ராட்சஸன். 

இத்தனை வேலைகளையும் தலைமை பெண்யானைb துல்லியமா கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல எங்க தடங்கல் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அந்த பொறுப்புல இருக்குற யானைக்கு அதட்டல் விடுக்கும். 

சிலநேரம் அடிவிழும். 

யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவுல வெச்சு குடுப்பாங்க. 

ஆனா... காட்டு யானைகளுக்கு இயற்கைதான் வைத்தியன். 

புளிப்பு சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்பு மண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்ஸியத்துக்கு தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும் ? 

(சில தாவரங்களின் விதைகள், மரத்திலிருந்து நேரடியா பூமில விழுந்தா முளைக்காது. அந்த பழங்களை யானை சாப்பிட்டு, அந்த விதைகள்... யானையின் வயிற்றில் சுரக்கும் ஒருவித திரவத்தில் நொதிக்கப்பட்டு, சாணத்தின் வழியா வெளில வந்தால் மட்டுமே உயிர்ப்புடன் முளைக்கும்) 

கோடை காலத்துல, வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு... மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும்... நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமை யானை தன்கூட்டத்த கூட்டிட்டு, அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய்... ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல, காலால உதைச்சு தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும். 

இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள்... தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லி குடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.

அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற... பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். 

இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும். 

வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல, தலைமை பதவியை... திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுத்துடும். 

தானை தலைவரை போல... தான் ஈன்ற குட்டிக்கு மட்டுமே கொடுக்கணும்னு நினைக்காது. திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும். 

அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும்.

ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்... தன் கூட்டத்திடம் பிரியாவிடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும். 

பிரியும்போது... கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப்போகும் யானையை சுற்றிநின்று அழும். 

ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில்... ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள். 

இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால்... காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.

இந்தியாவில்... யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைகள்  88 இருக்கிறது. 
(இப்போ பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கு). 

ஆறுமாச குட்டியா, அந்த வலசை பாதைல அதோட அம்மாகூட நடந்துபோன யானைகுட்டி, 70 வயசானாலும் மறக்காம ஞாபகம் வெச்சிருக்கும்.
 
யானை என்னைக்குமே, அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாது. அதேபோல தன்னோட பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்காது. 

தன்னோட பரம்பரை சொத்தான வலசை பாதைகளை மீட்டெடுக்கவே, 'மனித - விலங்கு மோதல்' ன்ற, இவ்வளவு பெரிய போராட்டங்களை செய்யுது.

அதுங்கள நிம்மதியா வாழவிடுங்க.
காடுகளில் மது பாட்டில்களை உடைத்து வீசி எரியாதீர்கள்.......

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...