பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20605 தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் அதிவேக விரைவு ரயில் தாம்பரம் : 4:27pm செங்கல்பட்டு :4:58pm மேல்மருவத்தூர் : 5:13pm திண்டிவனம் : 5:38pm விழுப்புரம் : 6:45pm பண்ருட்டி : 7:14pm திருப்பதிரிபுலியூர் :7:34pm சிதம்பரம் : 8:08pm சீர்காழி : 8:15pm மயிலாடுதுறை : 9:10pm குத்தாலம் : 9:21pm ஆடுதுறை : 9:30pm கும்பகோணம் : 9:40pm பாபநாசம் : 9:54pm தஞ்சாவூர் :10:33pm பூதலூர் : 10:52pm திருச்சிராப்பள்ளி :11:45pm திண்டுக்கல் :1:02Am மதுரை : 2:00Am விருதுநகர் :2:43Am கோவில்பட்டி :3:18Am திருநெல்வேலி :4:15Am செய்துங்கநல்லூர்:4:34 AM ஸ்ரீவைகுண்டம் : 4:44Am நாசரேத் : 4:54Am குரும்பூர் : 5:02Am ஆறுமுகநேரி: 5:09Am காயல்பட்டினம்:5:19Am திருச்செந்தூர் : 6:00Am குறிப்பு ( இந்த ரயில் 20/06/25 முதல் 18/08/25 வரை சென்னை எழும்பூர் இருந்து புறப்படாது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும்) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Sunday, June 22, 2025
காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?

காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.
காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை. இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும்.
இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது. விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.
ஓம் நமச்சிவாய 

தென்னாடுடைய சிவனே போற்றி...

All reacti
15Historical Places of Tamilnadu ஆதிச்சநல்லூர்
அகழ்வாராய்ச்சி
தனித்தும் பிறரோடு கலந்தும் பலவகை நாகரிகங்களையும்
பண்பாட்டையும் வளர்த்து வந்தனர். கற்காலமக்கள் செம்பைப்
பயன்படுத்தத் தொடங்கியதும் கல்லால் செய்யப்பட்ட பல
பொருள்களைப் புறக்கணித்துவிட்டனர். பயன் இல்லாத
மண்பாண்டங்களை விலக்கினர். இவ்வாறு நீக்கப்பட்ட
அப்பொருள்கள் கவனிப்பு இல்லாமல் நாளடைவில் மண்ணுக்குள்
புதையுண்டன.
மேலும் பண்டையமக்கள் நல்லிடங்களைத் தேடி அடிக்கடி
இடம் மாறித் திரிந்தனர். ஆதலின் ஆங்காங்குப் பழுது அடைந்த
பொருள்களை விட்டுவிட்டுச் சென்றனர். அப்பொருள்கள்
நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தன. ஆற்று ஓரங்களிலும்
கடற்கரை ஓரத்திலும் வாழ்ந்த மக்கள் இயற்கை சீற்றத்திற்கு
அஞ்சி இடம் பெயர்ந்தனர். இயற்கைச் சீற்றத்தாலும் பல்வேறு
காரணங்களினாலும் மக்கள் பயன்படுத்தியவை மண்ணுள்
மறைந்தன. ஆற்றின் அடியில் புதையுண்டன. பல சமவெளிகளில்
மண்மேட்டினுள் புதைந்தன.
இங்ஙனம் புதைந்து கிடப்பவற்றைக் கண்டுபிடிக்க
மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்தனர்.
அவ்விடங்களில் காணப்படும் பல திறப்பட்ட பொருள்களை
ஆய்ந்தனர். அவற்றைப் பற்றிய உண்மை அவற்றைப் மற்றும்
பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிய
முயன்றனர். இத்தகைய முயற்சியே அகழ்வாராய்ச்சி.
அகழ்வாராய்ச்சிகளின் பயன்
அகழ்வாராய்ச்சியின் வாயிலாக உண்மைச் செய்திகளையும்
அவற்றைப் பயன்படுத்திய பண்டைய மக்களைப் பற்றிய
செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும்.
அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தொல் பழங்கால
மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை,
சடங்கு, வழிபாடு, பேசிய மொழி, கலையார்வம் முதலியவற்றைத்
தெரிந்து கொள்ளலாம்.
4.3.1 மொகஞ்சதாரோ - ஹரப்பா உணர்த்தும் பண்பாடு
கி.பி. 1922-ஆம் ஆண்டுவரை வேத கால நாகரிகமே
இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகமெனக் கூறப்பெற்று வந்தது.
ஆனால் 1922-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர்
சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்திலிருந்த ஒரு
பெரிய மண்மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர்.
அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம்
புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மேற்குப்
பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா என்னும் நகரம் புதைந்து
கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடங்களில் தொடர்ந்து
அகழ்வாராய்ச்சி நடத்தி, மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த
இந்த இருநகரங்களைப் பற்றிய செய்திகளை உலகறியச் செய்தவர்,
தொல்பொருள் ஆய்வியல் அறிஞர். சர். ஜான் மார்சல் (Sir John
Marshall) என்பவர். இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய
செய்திகளின் தொகுப்பு. பிற்காலத்தில், "சிந்துவெளி நாகரிகம்"
(Indus Valley Civilization) என்றும் "ஹரப்பா பண்பாடு"
(Harappan Culture) என்ற தலைப்புகளில் அறியப்படலாயின
என்றும் அழைக்கப்பட்டன.
சிந்துவெளி நாகரிமும் தமிழர்களும்
சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் (தமிழர்
நாகரிகம்) என்று கூறுவதற்கு அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட
பொருட்களும், வெளிப்பட்ட கட்டட அமைப்பும், பயன்படுத்திய
நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன. இவ்வுண்மையை, சர்.
ஜான் மார்ஷல், சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler),
ஹிராஸ் பாதிரியார் (Father Heros) போன்ற தொல்லியல்
அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் டாக்டர் எச்.ஆர். ஹால் (Dir. H.R. Hall) என்ற வரலாற்று
அறிஞர். "சமீப கிழக்கின் தொன்மை வரலாறு" (Ancient History
of the near east) என்ற நூலிலும் பல சான்றாதாரங்களுடன்
நிறுவியுள்ளார்.
தொல்லியல் அறிஞர், ஜராவதம் மகாதேவன் என்பவரும்,
மொகந்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள்
தமிழ் - பிராமி எழுத்துகளை ஒத்திருக்கின்றன என்று
குறிப்பிடுகின்றார். மேலும் அங்குக் கிடைத்துள்ள பல தகவல்கள்
எந்த வகையில் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடையன
என்பதையும் தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சிந்துவெளி நாகரிகம் தமிழர்
நாகரிகம் எனவும், தமிழர் நாகரிகமும் பண்பாடும் இந்திய நாடு
முழுவதும் பரவியிருந்தது எனவும் வரலாற்றுப் பேராசிரியர்
கே.கே. பிள்ளை போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு
சிந்து வெளியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நகரங்களின்
இல்லங்கள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள்,
மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப்பாதைகள் ஆகியவையும்
காணப் பெறுகின்றன. எளியமையான வீடுகளிலும் தனித்தனியே
சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம்
பெற்றிருந்தன.
கற்பனையும், அழகும், தொழில் நுட்பமும் பொருந்திய
கட்டடக் கலை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியைப்
புலப்படுத்தும் என்பதை முன்னரே பார்த்தோம். மனிதன், தன்
வாழ்க்கை நோக்கத்தையும், அழகு உணர்வோடு கூடிய
பயன்பாட்டையும், தான் அமைக்கும் கட்டடங்களில்
வெளிப்படுத்துகின்றான். இது அவனது பண்பாட்டுக் கூறுகளில்
சிறப்புடையது. சிந்துவெளி நாகரிகம் வாயிலாக வெளிப்படும்
தமிழர் பண்பாடு இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.
4.3.2 அரிக்கமேடு அகழ்வராய்ச்சி உணர்த்தும் பண்பாடு
புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற
இடத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக்
கூறுகளை வெளிப்படுத்துகின்றது.
அரிக்கமேடு அகழ்வராய்ச்சியில் கிடைத்தவை
இங்கு மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. விற்பனைச்
சாலைகள், பண்டகச் சாலைகள், முதலியவை இருந்ததற்கான
அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து என்ன
புலப்படுகிறது? தொல் பழங்காலத் தமிழ் மக்கள் செம்மைப்பட்ட
வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது.
இத்தகைய வாழ்க்கை முறை அவர்களது தொன்மையான
பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
4.3.3 ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உணர்த்தும்
பண்பாடு
இந்தியாவிலேயே மிகப் பெரிய அகழ்வாராய்ச்சியாகக்
கருதப்படுவது, திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஆதிச்சநல்லூரில்
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியாகும். இங்கு மனித
எலும்புக்கூடுகள், மெருகிட்ட மண்பாண்டங்கள், இரும்பாலான சில
கருவிகள், பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட
அணிகலன்கள், சிறு வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் பல
கிடைத்துள்ளன.
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள்
அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம்
முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப்
புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும்,
விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த
பழைய மரபை அத்தாழிகளில் அறிய முடிகிறது. இன்றைக்கும் சில
இடங்களில் இந்தப் பழைய மரபு பின்பற்றப்படுகிறது.
தாழிகளைத் தோண்டி எடுத்ததின் மூலம், தமிழர்
பண்பாட்டுக் கூற்றை வெளிப்படுத்தும் பழக்க வழக்கத்தையும்,
நம்பிக்கையையும் அறிய முடிகிறது.
Historical Places of Tamilnadu தொண்டை மண்டலத்தின் இதயம் போலிருந்த செங்குன்றம்,
தொண்டை மண்டலத்தின் இதயம் போலிருந்த செங்குன்றம்,
மாலையின் இளங்காற்று வயல்வெளிகளில் அலை அலையாய் தவழ்ந்து வரும் வேளையில், கால்நடைகளின் மேய்ச்சல் சத்தம் அந்த ஊரின் தினசரி இசையாக ஒலிக்கும். அந்த ஊரின் அமைதிக்குக் காவலாய், மனதிற்கு இதமளிக்கும் மனிதர்களாய் வாழ்ந்தனர் நம் கதையின் நாயகர்கள், தன்மசெட்டியின் மகன் சாத்தையன், சாத்தையன் திருவூறல் மற்றும் அவனின் அடியான் ஊர்ப்பேரயன் முத்தரையன் காரி.
அவர்கள் மூவரும் – சாத்தையன், சாத்தையன் திருவூறல், மற்றும் முத்தரையன் காரி – வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களைப் பிணைத்திருந்தது அசைக்க முடியாததொரு தோழமை.
சாத்தையன், ஊரின் செல்வந்த செட்டி மரபில் வந்தவன். அவனது தோள்களில் இருந்த உறுதி, மனதிலும் குடிகொண்டிருந்தது. வீரம் என்றால் அவனுக்கு உயிர். ஊருக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், முன்நின்று காக்கத் துடிக்கும் மனம் அவனுடையது.
சாத்தையன் திருவூறல், தக்கோலத்தின் பழைய பெயரைத் தன் பெயரில் சுமந்தவன். அவன், ஊரின் அறிவிப்பாளன்; பறை அறையும் கலை அவனுக்கு அத்துப்படி. அவனது கம்பீரமான குரலும், பறையின் ஓசையும் தன் வீரர்களுக்கு உணர்ச்சி தூண்டுவனவாக, பகைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும், சிம்ம சொப்பனமாய் இருக்கும்.
முத்தரையன் காரி, சாத்தையனின் அடியான், ஆனால் அவனுக்கும் சாத்தையனுக்கும் இடையே இருந்த உறவு வெறும் எஜமானன்-அடியான் என்ற எல்லைகளைத் தாண்டி, ஒரு குடும்ப உறுப்பினரின் அணுக்கத்தை ஒத்திருந்தது. காரியின் விசுவாசமும், துணிவும், சாத்தையனுக்கு எப்பொழுதும் ஒரு பலமே.
கி.பி. 953-ஆம் ஆண்டு, வீரம் செறிந்த ஆதித்த கரிகால சோழனின் மூன்றாவது ஆட்சிக்காலம். தமிழ் தேசம் தனது பொற்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆனால், அமைதிக்கு எப்போதும் ஒரு சோதனை வந்துதானே தீரும்? ஒரு நாள், நள்ளிரவின் இருளைப் பிளந்துகொண்டு வந்த மரண ஓலமும், மாடுகளின் பீதி நிறைந்த அலறலும் தூம்படைப்பூர் மக்களை உலுக்கியது. அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த ஊர், நொடிப்பொழுதில் போர்க்களமாய் மாறியது.
கொன்னூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த கள்வர்கள், ஊரைச் சூறையாடி, அங்கிருந்த கால்நடைகளைத் திருடச் சென்றனர்.
அந்த செய்தியைக் கேட்டதும், சாத்தையனின் ரத்தம் கொதித்தது. தனது குடிமக்களின் உடைமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு போர்வீரனின் உள்ளுணர்வு, அவனது நரம்புகளில் மின்னலாய் பாய்ந்தது. "கள்வர்களா! என் ஊர் மக்களின் உடைமையைச் சூறையாடவா?" என சீறினான். தன்மசெட்டியின் மகன் சாத்தையன், தனது குறுவாளையும், வில்லையும் ஏந்தி, போருக்குத் தயாரானான்.
அவன் புறப்படும் வேளையில், சாத்தையன் திருவூறல், தன் பறையை முழக்கி, ஊர் மக்களை எழுப்பினான். "கொட்டுப் பூசல்! கொட்டுப் பூசல்!" என்ற அவனது கம்பீரமான குரல், இருளின் அமைதியைக் கிழித்தது. "மாடுகளை மீட்போம்! ஊரைக் காப்போம்!" என அவன் முழங்கியது, ஒவ்வொரு வீரனின் மனதிலும் அனலைக் கிளப்பியது. அவர்களுடன் இணைந்தனர், காரி. சாத்தையனின் நிழலாய், அவன் காலடி எடுத்து வைத்தான். அவர்கள் யாவரும், தனிப்பட்ட வீரர்களாய் அல்ல, ஒரு இலக்கை நோக்கிய, ஓர் உயிராய் இணைந்திருந்தனர்.
ஊரழிவின் கோரத்தையும், மாடுகளின் இழப்பையும் உணர்ந்த சாத்தையன், "மாடுகளை மீட்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை!" என்று சபதம் கொண்டான். கையில் வில்லுடன், கூர்மையான அம்புகளை நாணேற்றி, முதல் அடியை அவன் எடுத்து வைத்தான். அவனுக்குப் பக்கபலமாய், பறை முழக்கத்துடன் திருவூறல் எதிரிகளை அச்சுறுத்தினான். காரி, தனது குறுவாளைச் சுழற்றி, எதிரிகளை நெருங்கவிடாமல் சாத்தையனுக்குக் காவலாய் நின்றான்.
அந்தப் போர், வெறும் மாடுகளை மீட்கும் சண்டையாய் இருக்கவில்லை. அது, தன்மானத்தைக் காக்கும் போர்; தங்கள் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும் போர். கள்வர்களின் கூட்டம், எதிர்பாராத இந்த எதிர்ப்பால் திகைத்தது. சாத்தையனின் அம்புகள், இலக்கு தவறாமல் எதிரிகளைத் துளைத்தன. திருவூறலின் பறை முழக்கம், கள்வர்களின் மனதைக் கலங்கடித்தது. காரியின் வாள்வீச்சு, எதிரிகளை நிலைகுலையச் செய்தது. பலரும் வெட்டுப் பட்டுவீழந்தனர். இவனை முதலில் தீர்க்க எண்ணிய கள்வர்கள், இவன் மீது அம்பினை எய்தனர்.
முன்னேறிக்கொண்டிருந்த சாத்தையன், எதிரிகளின் அம்புகளுக்கு இலக்காய் மாறினான். அவனது கழுத்தில், நான்கு அம்புகள் ஆழமாகப் பாய்ந்தன. "சாத்தையா!" என காரி கதறினான். ஆனால், வீழ்ச்சியிலும் அவனது பார்வை, மீட்கப்பட வேண்டிய மாடுகள் மீதே இருந்தது. அவன் நிலைகுலைய, காரி அவனுக்குப் பக்கபலமாய் நின்றான். ஆனால், எதிரிகளின் ஒரு அம்பு காரியின் உடலையும் துளைத்தது.
தனது எஜமானனுக்குக் காவலாய் நின்று, அவனும் சரிந்தான். "நண்பா!" என சாத்தையன் திருவூறல் கதறினான். தனது நண்பர்களும், அடியானும் வீழ்வதைக் கண்ட திருவூறல், தனது பறையை மேலும் உக்கிரமாய் முழக்கி, வீரர்களுடன் எதிரிகளை நோக்கி முன்னேறினான். அவர்கள் மாடுகளை மீட்டுவிட்டான், ஆனால், போரின் உக்கிரத்தில் அவனும் கள்வர்களால் சுழப்பட்டான்.
அந்தப் போர்க்களம், இரத்தம் தோய்ந்த மண்ணாகவும், கண்ணீர் பெருக்கெடுத்த கண்களாகவும் மாறியது. ஆம், மாடுகள் மீட்கப்பட்டன. ஆனால், அந்த வெற்றிக்குக் கிடைத்த விலை, மூன்று விலைமதிப்பற்ற உயிர்கள்.
வெங்கட்டூர் கிராமம், தன் மகன்களை இழந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஆனாலும், அவர்களின் வீரம் மறையவில்லை. ஆதித்த கரிகால சோழனின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில், கி.பி. 953-ல், அந்த மூன்று வீரர்களுக்கும் தனித்தனியே நடுகற்கள் எழுப்பப்பட்டன.
சாத்தையனுக்கு எழுப்பப்பட்ட நடுகல், அவனது வீரத்தை இன்றும் பறைசாற்றுகிறது. இடக்காலை முன்வைத்து, வலக்காலைப் பின்வைத்து, வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் ஏந்தியபடி, அவன் நிற்கும் காட்சி, அவனது தீரத்தை வெளிப்படுத்துகிறது. அவன் உடலில் பாய்ந்த நான்கு அம்புகள், அவன் கடைசி மூச்சு வரை போரிட்டான் என்பதற்கான சான்று. அவனது காலடியில் மாடுகள், அவன் மாடுகளை மீட்டான் என்பதற்கான குறியீடு.
சாத்தையன் திருவூறலுக்கு எழுப்பப்பட்ட நடுகல், அவனது தியாகத்தையும், ஊர் மீதான பாசத்தையும் எடுத்துரைக்கிறது. அவனது பறை முழக்கம், இன்றும் காற்றோடு கலந்திருப்பது போல உணர்வு.
முத்தரையன் காரிக்கு எழுப்பப்பட்ட நடுகல், விசுவாசத்தின் இலக்கணமாய் உயர்ந்து நிற்கிறது. கச்சையுடன், குறுவாளை உயர்த்தியபடி நிற்கும் அவனது உருவம், தனது எஜமானனுக்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதைப் பறைசாற்றுகிறது. அவனது உடலில் பாய்ந்த இரண்டு அம்புகள், அவனது கடைசி மூச்சு வரை தனது நண்பனையும், எஜமானனையும் காக்கப் போராடினான் என்பதற்கான அடையாளம்.
இந்த நடுகற்கள், வெறும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அல்ல. அவை, ஒரு காலத்தின் வீரத்தைப் பேசும் சாட்சிகள். ஒரு ஊரின் மானத்தைக் காக்க, உயிரையும் கொடுக்கத் துணிந்த அந்த மூன்று நண்பர்களின், மூன்று வீர்ர்களின் வீரத்தையும், விசுவாசத்தையும், தோழமையையும் அவை இன்றும் உணர்த்துகின்றன.
வெங்கட்டூரின் அந்த மூன்று நடுகற்களும், தமிழ் மண்ணின் வீர வரலாற்றுப் பக்கங்களில், என்றென்றும் நிலைத்திருக்கும்.
மனதால் நீ தனித்திரு, குருவருளால் நீ உயிர்த்தெழு!
தனிமையின் தத்துவம்: மனதிற்கு அப்பால் சென்றால்தான் அந்த அருளுக்கு உரியவன் ஆக முடியும்






தனிமை என்பது தவிர்க்க வேண்டிய பாழான நிலை அல்ல. அது வாழ்க்கையின் உச்சமான ஆன்மீக நிலையைக் குறிக்கும்.

அகப்பார்வையின் ஆரம்பம்
சுழற்றும் சிந்தனைகளின் முடிவு
'நான்' எனும் அஹங்காரத்தின் முறிவு
ஆன்மா மற்றும் பரமாத்மா இடையே உள்ள பக்தியின் பாலம்
நம்முள் நாமே இறங்கும் வழிதடம்
தனிமை என்பது சாமர்த்தியமற்ற நிலை அல்ல, அது சக்தியின் பிறவி!

மனதோடு தனிமை சகிப்பது எளிதல்ல.
மனது பயப்படக்கூடிய ஒன்று:
பழைய நினைவுகள்
வருங்காலப் பயங்கள்
என்னை உற்றுப் பார்க்கும் உலகத்தின் பார்வை
என்ன செய்வேன்? எனும் அச்சம்



FOMO (Fear of Missing Out): நம் தோழர்கள் எங்கே? சமூகத்துடன் நாம் தொடர்பில்லையா?
Self-Doubt: இந்தப் பாதை சரியா?
Loneliness vs Aloneness: தனிமை (loneliness) என்பது இழப்பின் உணர்வு. ஆனால் 'அலைனெஸ்' என்பது ஆன்மீக சங்கமம்.


குரு என்கிறவர்,



குருவருள் இல்லாமல் தனிமை என்பது நம்மை சிதைக்கக்கூடிய புழுதிப் புயலாக மாறிவிடும்.

1. இழப்பு – அன்பும், உறவுகளும், சமூக ஆதரவும் விலகும் புள்ளி.
2. எதிர்ப்பு – மனது அதை ஏற்க மறுக்கும்.
3. அறிதல் – தனிமை நமக்கு ஓர் அர்ப்பணமாக இருக்கலாம் என்று புரிந்து கொள்வது.
4. பரிசுத்தம் – உள்ளடக்கம் வெளிச்சமாக மாறுவது.
5. சக்தி பீடம் – உண்மையான தனிமையில் தியானமும், ஆன்மீக சக்தியும் உயிர் பெறும்.


இது ஆன்மிக மரபில் ஒரு தத்துவத்தின் எச்சம்.




தெய்வத் தரிசனம் தனிமையில் தான் தோன்றும்.
தபஸ், தியானம், ஜபம் – எல்லாம் தனிமையின் பிள்ளைகள்.
நம்மை மறந்து, இறைவனை உணரும் பயணம் தனிமையில் தான் ஆரம்பிக்கிறது.

அவர்கள் உள்ளே சென்று, உலகிற்கே வெளிச்சம் கொடுத்தவர்கள்.

1. நம் உண்மையான இயல்பை கண்டறிதல்
2. அஹங்காரத்தை உருக்குதல்
3. உணர்ச்சிகளின் அடிமை நிலையை ஒழித்தல்
4. மனதின் பயங்களைப் பிழித்து வெளியேற்றுதல்
5. இறைவனுடன் நேரடி உறவினை பெறுதல்






தனிமை என்பது சோகத்தின் அடையாளம் அல்ல.
அது தான் உனக்குள் இறைவனாக மாறும் வாய்ப்பாகும்.
அந்த வாய்ப்பை பெற, குருவின் அருள் தேவையான உந்துதலாக இருக்கிறது.
மனதால் நீ தனித்திரு,
குருவருளால் நீ உயிர்த்தெழு!
Historical Places of Tamilnadu மதுரை நாடார் பேட்டைகள்
மதுரை கீழவெளி வீதியின் வடகிழக்கு மூலையில் தெட்சிணமாற நாடார் சங்கப் பேட்டை. அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த வணிகப் பேட்டை தொடக்கக் காலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அன்றைய வைகைக் கரை யோரம் அமைந்து கால வெள்ளத்தில் கரைந்து இன்றைக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் சுருங்கிய நெல்பேட்டையாய் பெயர் நிலவி வருகிறது.
அன்றைய வணிகச் சந்தையாய் விளங்கிய மதுரை நகரை நோக்கி நாலா திசைகளில் இருந்தும் பொருள்கள் வந்து குவிந்து விற்பனையாகி உள்ளன.
தூத்துக்குடியில் இருந்து உப்பும், கருவாடும், நெல்லை சீமையின் கருப்பட்டியும் தெட்சிணமாற நாடார் சங்க பேட்டைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகி உள்ளன. அதற்கான வழிப்பயணத்தில் இளைப்பாறுதல் பொருட்டு வழிநெடுகிலும் உள்ள, அன்றைய பெருங் கிராமங்களில் வண்டிப்பேட்டைகள் அமைக்கப்பட்டன.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், நாகலா புரம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராமநாதபுரம், உச்சிப்புளி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல், பழனி என இந்த சார்பு நிலைப் பேட்டைகள் பட்டியல் விரிந்து செல்கிறது.
மதுரை நெல்பேட்டை தொடக்க காலத்தில் கருவாடு, உப்பு, கருப்பட்டி சந்தையாக இருந்த போது எங்கும் வேப்ப மரங்கள் நிறைந்து வேப்பந் தோப்பாக இருந்துள்ளது அன்றைய வணிகர் களுக்கு வாய்ப்பாக இருந்துள்ளது.
பெருவணிகர் மாட்டு வண்டிகளிலும், சிறு வணிகர் பொதி சுமந்த மாடுகள் மூலமாகவும் தத்தம் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்த போது மாடுகளை வேப்பமரத்தில் கட்டி வைத்து தீவனம் தந்து வைகை ஆற்றில் இறக்கி குடிநீர் வழங்கி உள்ளனர்.
தாய்ப்பேட்டையாக அமைந்த இந்த பேட்டையை சார்ந்து இதே பகுதியில் வெற்றிலைப் பேட்டை, வாழைக்காய் பேட்டை, வைக்கோல் பேட்டையும், தெற்கே, தெற்கு வாசல் பகுதியில் மரக்கறிப் பேட்டையும் இன்ன பிற பேட்டைகளும் அமைந்தன.
வணிகர்கள் தம் குடும்பங்களை மாதக் கணக்கில் பிரிந்து வணிகம் செய்ய நேர்ந்ததால் பேட்டைப் பகுதியிலேயே தமக்குரிய உணவை தாங்களே சமைத்து உண்டனர்.
ஆரம்ப காலத்தில் பழனி, சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, உச்சிப்புளி என 6 ஊர் வணிகர்கள் வந்து கூடி வணிகம் புரிந்ததால் 1943-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சந்தையாக நெல்லையைத் தலைமை இடமாகக் கொண்ட தட்சிணமாற நாடார் சங்கத்துடன் நிர்வாக ரீதியில் இணைக்கப் பெற்றதாக 51 நிர்வாகிகளில் மூன்றாம் இடம் வகிக்கும் கல்வியாளர் பி.எஸ். கனிராஜ் தெரிவித்தார்.
மும்பையிலும் அச்சங்க கிளை மனை அமைந்திருந்ததின் காரணமாக அந்த வணிகர் பேட்டை இப்போது கல்விக்கூடமாய் காமராஜர் ஆங்கிலப் பள்ளி என்று பிறப்பெய்தி உள்ளது.
குமரி மாவட்டம் கள்ளிக்குளத்தில் காமராஜர் தொழிற் கல்லூரி இயங்கி வருகிறது.
பல்லாயிரங்கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களை பராமரித்து வரும் சங்கத்தின் தலைவராக இதழாளர் டி.ஆர். சபாபதி பொறுப்பு வகிக்கத் தொடங்கியதும் சென்னை மீஞ்சூரில் சங்க விரிவாக்கத்துக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான மனை வாங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப் பட்டது.
மதுரையின் மற்றொரு வணிக மையம் ஆதி சொக்கநாதர் ஆலயம் அருகே அமைந்திருந்தது.
1419-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட தலைக் கட்டுகளைக் கொண்ட வணிக சமூகத்தினர் தாங்கள் விளைநிலங்களில் உற்பத்தி செய்த தானிய வகைகளைப் பொதிகளாக மாட்டு வண்டி களில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தபோது வழியில் கொள்ளையர் தொல்லை இருந்ததால் தங்கள் ஊரான பாலையப்பட்டியில் குஸ்தி, சிலம்பப் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி தமக்குத் தாமே உரமேற்றிக் கொண்டனர்.
அந்நாளில் மதுரையில் இருந்து பாளையப் பட்டி அருப்புக்கோட்டை வழியே தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்வதற்கான நேர் வழியாக இருந் திருக்கிறது.
எனவே கள்வர் தொல்லைக்கு அஞ்சிய விருதுநகர் வணிகர்கள் அருப்புக்கோட்டைக்கு வந்து அங்குள்ள வணிகர்களுடன் இணைந்து பாளையப்பட்டிக்கு வருவார்கள்.
ஆயுதம், ஆள்பலம் கொண்ட பாளையப் பட்டி வணிகர்கள் வண்டி முன்னாலும் பின்னாலும் அணிவகுத்து செல்ல நடுவில் அருப்புக்கோட்டை விருதுநகர் வணிகர்களுடன் பொதி மாட்டு வண்டிகள் அணிவகுத்துச் செல்லும். இந்த வகையில் ஒரே சமயம் இருநூற்றுக்கும் மேற்பட்ட வணிகசாத்து வண்டிகள் மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
பின்னாட்களில் விருதுநகராகிய முந்தைய விருதுபட்டியிலும் வணிக சாத்தர்கள் மல்யுத்தம் கற்றும் சிலம்பப் பயிற்சிக் கூடங்கள் அமைத்ததின் பேரில் விருதுநகர் ஆறுமுக வணிகர் மல்யுத்த வீரரானார்.
நாகலாபுரத்தைச் சேர்ந்த வணிகர் நல்லதம்பி மதுரையில் பின்னாட்களில் நடந்த பெரிய மல் யுத்தப் போட்டிகளில் வடவரையும் வென்ற மாவீரராகி மதுரை கீழ் வெளிவீதியில் அதி பரானார் என்பது இடைப்பட்ட வரலாறுகள்.
விருதுநகர், அருப்புக்கோட்டை பாலையப் பட்டி வணிகர் ஒரே அணியில் பாதுகாப்பு கருதி மதுரைக்கு வந்தாலும் தனித்தனியே வணிகத்தில் ஈடுபட்டதால் சொக்கநாதர் கோவில் வடபுரம் இருக்கும் மனையைத் தங்களூர் சந்தையாக்கிக் கொண்டனர்.
அங்கு மாட்டுவண்டிகள் நிற்கவும் தங்கள் எதிர்காலத்திற்கு உகந்ததாகவும் வசதிகள் செய்து கொண்டனர். கிணறு வெட்டி நந்தவனம் அமைத்து வணிகர் பொருட்களின் வைப்பிட மாகவும், விற்பனை சந்தையாகவும் பயன்படுத்தினர்.
இதே சமயம் விருதுநகர் அருப்புக்கோட்டை வணிகர்கள் கீழ மாசி வீதியில் தங்கள் சந்தைப் பேட்டைகளை ஒன்றாகவே அமைக்க இந்த இடத்திலும் பாலையப்பட்டி வணிகர்கள் வந்து தங்கி வணிகம் புரிந்தனர்.
இந்தப் பேட்டைகளில் உள்ள பெரும் சிறப்பு என்னவெனில் மரங்கள் வளர்ப்பது, எந்த வகை மரங்கள் எத்தனை எத்தனை உள்ளன என்பதை அதையும் கணக்கிட்டு பராமரித்து வந்துள்ளனர்.
மதுரை கீழமாசி வீதியில் உள்ள கீழப் பேட்டை இடம் 1823-ம் ஆண்டு தனியாரிடம் இருந்து பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்து வணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்டது.
எனினும் இந்த மூன்று ஊர்களிலும் தனித்தனி உறவின் முறைகள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் உறவின் முறைகளுக்கு சொந்தமான தாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இங்கு அமைந்த மொட்டை வினாயகர் கோவிலுக்கு தனி அறக்கட்டளை அமைக்கப்பட்டு பராமரிப்பு நடக்கிறது.
பாலையப்பட்டி பழைய நந்தவனம் பின்னாளில் உடற் பயிற்சிக் கூடமாக்கப்பட்டு அதன் பின் பகுதி வணிக வளாகமாகி உள்ளது.
இதே போல மூன்று ஊர் உறவின் முறைக்கு சொந்தமான கீழப்பேட்டையும் வணிக வளாகமாக உருவாகி இதன் உட்புறம் திருமண மண்டபமாகி உள்ளது.
திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி வணிகர் களும் சாத்து வணிகம் புரிந்துள்ளனர். மதுரைக்கு வரும் வழியில் திருப்பரங்குன்றத்தில் 1904-ம் ஆண்டில் பாண்டிய சத்திரியகுலத்து திருமங்கலம் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பேட்டை என்ற முகவரியிட்ட கருங்கற்களைக் கொண்டு பேட்டை கட்டினார். இது தற்போது திருமண மண்டப மாக செயல்படுகிறது.
இது தவிர்த்து மதுரை யானைக்கல் பகுதி யிலும் கீழமாசி வீதியிலும் திருமங்கல வணிகர் பேட்டை அமைந்துள்ளது.
மதுரையின் கீழமாசி வீதியையொட்டி
மேற்கு புறம் அமைந்த வெங்கலக் கடைத்
தெருவில் வெள்ளையர் காலந்தொட்டு இன்றளவும் துப்பாக்கி வணிகம் நடைபெற்று வருகிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
“வெ.கு.மீனாட்சிசுந்தர நாடார் துப்பாக்கி தோட்டா வணிகம்” என்று பெயர் பலகை இருக்கக் காணலாம்.
இது பற்றி அறிய முனைந்த போது மேனகா இராமலிங்கம் திருமண மண்டப உரிமையாளரான மீனாட்சிசுந்தர நாடாரின் வாரிசுகளில் ஒருவரான எஸ்.வி.கே.எம் ராமலிங்கம் கூறிய தகவல்.
எனது தந்தையின் தந்தையரான பாட்டனார் நாட்டு மருந்துகளுடன் கந்தகமும் விற்பனை செய்து வந்தார். அப்போது மதுரையில் ஆட்சி யராக இருந்தவர், ‘மதுரையில் எங்கு துப்பாக்கி தோட்டா கிடைக்கும்?’ என்று கேட்க இங்கு அம்மாதிரி வணிகர் யாரும் இல்லை என அதிகாரிகள் கூறியதுடன், கந்தகம் மட்டும் ஒருவர் விற்று வருகிறார் எனக் கூற அது குறித்து விசாரித்த ஆட்சியர், எங்கள் தந்தையார் பெயரில் துப்பாக்கி களும் தோட்டாக்களும் விற்பதற்கு அனுமதி வழங்கினார்.
துப்பாக்கி தோட்டா விற்பனை அனுமதிக்கு பின்பு அதே ஆட்சியில் அப்பாவின் கடைக்கு தன் மனைவியுடன் இரண்டு குதிரைகளில் வந்து கடை முன்பு உள்ள மரத்தூண்களில் இரு குதிரை களையும் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிகள் தோட்டாக்கள் வாங்கி வேட்டைக்கு சென்று உள்ளனர். நாட்டு விடுதலைக்கு பின்னரும் எங்கள் கடை வணிகம் நடக்கிறது என்றார்.
இதே வெங்கலக் கடைத் தெருவில் தெற்கு நோக்கிய முட்டுச் சந்தில் கே.டி. கூளைய நாடார் வணிகப் பேட்டை கம்பீரக் கட்டட பொலிவிழந்து காட்சி தருகிறது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நவதானிய வணிகம் மும்முரமாக நடந்துள்ளது. கேப்பை, கம்பு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய மூடைகள் தனித்தனியே அம்பாரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அவற்றை வாங்கி செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும் வணிகர்கள் தங்கள் மாட்டு வண்டி களை வெங்கலக் கடைத்தெருவில் வரிசை யாக நிறுத்தி வைத்து இருப்பார்கள்.
தானியம் கேட்கும் வணிகர்களுக்கு குத்தூசி கொண்டு சாக்கு மூடைகளில் இருந்து எடுத்த வற்றை தனித்தனி ஈய வட்டில்களில் காண்பிப் பார்கள். மாதிரி பார்த்த பிடித்த தானியமும் பிடிக்காத தானியமும் வாசலின் இருபக்கம் கல் தொட்டிகளில் போடப்படும்.
இவற்றை அங்கு கட்டப்பட்டிருக்கும் வகை வகையான வளர்ப்பு மான்கள் உண்டு மகிழும். இது காத்து இருக்கும் வணிகர்களுக்கு பொழுது போக்காய் திகழும். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு வணிகம் கொடிகட்டிப் பறந்தது என்கிறார் நூறு வயதை எட்டிக்கொண் டிருக்கும் தெற்கு வாசல் வணிக பிரமுகர் மணி.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிருதமால் நதியையொட்டி மரக்கறி பேட்டையும் உள்ளது. இங்கும் வணிகர்கள் தங்கள் வண்டிகளுடன்
வந்து தங்கி சென்றுள்ளனர். மாடுகளுக்கு லாடம் அடிக்கும் தொழிலும் இங்கு நடைபெற்றிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
Featured Post
ஆத்திகோயில் எனும் புண்ணிய ஸ்தலம்,
ஆத்திகோயில்: மந்திரவாதியும் மகான் பெரியசுவாமிகளும்! முன்னொரு காலத்தில், இன்றைய ஆத்திகோயில் எனும் புண்ணிய ஸ்தலம், ஆதிகோயில் எனப் பழைய பெயருடன...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
4- வகையான குழம்பு ------------------------------------------------ கத்தரிக்காய் பருப்பு தேவையான பொருட்கள் கத்தரிக்காய் துவரம் பருப்பு தக்...