Showing posts with label உள்ளங்கையில் வைகுண்டம். Show all posts
Showing posts with label உள்ளங்கையில் வைகுண்டம். Show all posts

Wednesday, April 20, 2022

உள்ளங்கையில் வைகுண்டம்

உள்ளங்கையில் வைகுண்டம்
 
ஒருநாள் அதிகாலை 

கிருஷ்ணரின்  தந்தை நந்தகோபர் யமுனை நதியில் நீராட புறப்பட்டார். 

அப்போது இருள் விலகவில்லை. தண்ணீ ருக்குரிய தேவதையான வருணனின் தூதன், காலமற்ற நேரத்தில் நீராட வந்த நந்த கோபரை வருணனிடம் இழுத்துச் சென்றான்.

நீராடச் சென்ற தங்கள் தலைவரான நந்த கோபரைக் காணாததால், ஆயர்பாடியே கவலையில் ஆழ்ந்தது. யசோதை உள்பட எல்லாரும் செய்வதறியாமல் அழுதனர். 

கிருஷ்ணர் தன் யோகசக்தியால், நந்த கோபரைத் தேடினார். இது வருணனின் வேலை தான் என்பதை அறிந்தார். தந்தை யை அழைத்து வர புறப்பட்டார். 

தன் மாளிகை நோக்கி வந்த கிருஷ்ணரை கண்ட வருணன், இருகைகளையும் கூப்பி வரவேற்றான். பகவானே! இன்று உங்க ளை தரிசிக்க என்ன புண்ணியம் செய்தே ன்! தங்களின் திருவடியை வணங்கினால் பிறவிக் கடலையே கடந்து விடலாமே! 

யார்என அறியாமல் தங்கள் தந்தையை சிறை பிடித்த என் தூதனை மன்னியுங் கள். எங்களுக்கு ஆசி கொடுங்கள் என்று வேண்டினான். வருணனின் வணக்கத் தை ஏற்றதோடு, துதுவனின்செயலையும் மன்னித்தார் கிருஷ்ணர். 

நந்தகோபரோடு திரும்பிய கிருஷ்ணரைக் கண்ட ஆயர்பாடி மக்கள், கடவுளே தங்க ளோடு வாசம் செய்வதை அறிந்தனர். கிருஷ்ணா! நாங்கள் செய்த புண்ணியத் தால் உன்னோடு உறவாடும் பாக்கியம் பெற்றோம். 

நீ நிரந்தரமாக வாசம் புரியும் வைகுண்ட த்தை இப்போது தரிசிக்க விரும்புகிறோம், என்றும் கேட்டனர். 

வைகுந்த வாசனாக தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தைக் கிருஷ்ணர்அவர்களுக்கு அப்போது காட்டி யருளினார். உள்ளங்கையில் வைகுண்டம் என்பது போல, கிருஷ்ணரின் வரவால் ஆயர்பாடியே வைகுண்டமாக மாறியது. 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்...

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...