Friday, August 5, 2022

காமாட்சி_விருத்தம்_படித்ததுண்டா

#மிகவும்_அருமையான_பதிவு

#காமாட்சி_விருத்தம்_படித்ததுண்டா? 

அவர் எவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு அன்னையிடம் வாதாடுகிறார் பாருங்கள்.

எனக்கு நீ வரம் தர இருவரும் மடிபிடித்துத் தெருவினில் நிற்கவேண்டுமா தாயே?

என்ன ஒரு அதட்டல்?

எத்தனை நேசம்? 

அடேங்கப்பா !!

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ?

பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ?

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ?

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா? 

இனி விடுவதில்லை 

சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா

எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் 

இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரம் மலர்களை அர்ச்சிக்க வேண்டும் என்பது கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரமாவது மலரை பறிக்க மிகவும் ஆவலோடு சென்றது கஜேந்திரன் தடாகம் சலன மின்றி இருந்தது தன்னுடை பரந்த பாதத்தை நீரில் வைத்தது உடனே தடாகம் அதிர்ந்தது எங்கிருந்தோ வந்த முதலை அதன் கால்களை பற்றி கொண்டது ஆனைக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை உடனே காலை உதறிவிட்டு செல்லாம் என முயன்ற போதுதான் முதலையின் பலத்தை உணர்ந்தது உடனே யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க இப்படியே பல ஆண்டுகள் ஓடியது யானைக்கு புத்தி வந்தது இனி நம் பலத்தை நம்பி பயன் இல்லை என்று கூக்குரல் இட்டது.

சகல தேவர்களையும் படைத்து அவர்களை பரிபாலனம் செய்வது எதுவோ சகல லோகங்களிலும் அனுவில் இருந்து அண்டம் முழுவதும் நிறைந்தது எதுவோ என்றுமே அழிவற்று சாச்வதமாக இருப்பது எதுவோ அனைத்தையும் தாங்கி நிற்கும் பிரமாண்டம் எதுவோ தமக்கு மேல் ஒருவரும் இல்லாத ஆதி மூலம் எதுவோ அது எம்மை காக்கட்டும் என ஹே ஆதி மூலமே என்று அலறியது.

இந்திரலோகம், ப்ரம்மலோகம் கைலாயத்தில் இருந்து பார்த்தவர் யாம் இல்லை யாம் இல்லை என்று அமர்ந்தனர். ஸீ ஹரி கருடா என்று அலறினான் தன்னை அலங்காரம் செய்து கருடன் புறப்படும் முன்னே சண்டமாருதம் போல் நொடிக்குள் வந்தான் கருடனை விட்டு விட்டு எடுத்தான் சக்ராயுதத்தை விடுத்தான் முதலையை நோக்கி உடனே கஜேந்திரனுக்கு முதலையிடம் இருந்து விமோசனம் கஜேந்திரனோ தேவாதி தேவா தங்களை அடியேன் அழைத்தது இந்த அற்ப உயிரை காக்க அலல இந்த தாமரையை தங்கள் திருவடியில் சமர்பிக்கவே என்று ஆனந்த கண்ணீர் விட்டது கருணாகர மூர்த்தியான பரம் பொருள் இதை கேட்டதும் தண்ணீரை காட்டிலும் இலகுவான அவன் மனது சும்மா இருக்குமா என்ன கஜேந்திரன் பாதத்தை தன் மடியில் கிடத்தி முதலை பல் பட்டு இரத்தம் வந்த இடத்தில் தன் பட்டு பீதாம்பரத்தை எடுத்து தன் வாயினுள் எச்சிலை தொட்டு அதற்கு ஒத்தடம் கொடுத்து தன்னை தாயிலும் மிக்க தயாபரன் என்று நிருபிக்கிறான்.

ஆஹா ஆஹா ஹரி ஹரி உம்மை மிஞ்சியவர் எவர்!

ஈடும் எடுப்பும் இல் ஈசன் அல்லவா நீ

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

மனக்கவலை

*ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*
     *அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
     *மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*
     *பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.*
     *விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.*
     *கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*
     *தன் கூட்டத்தில் ஏதாவது உதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டது !!!*
     *ஆனாலும் எந்த குரங்கும் அந்த குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

     *"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு"*
     *"இது கொத்துனா உடனே மரணந்தான்"
     "குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்"*
     *இவன் தப்பிக்கவே முடியாது"*
     —> *என்றெல்லாம் மற்றகுரங்குகள், குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*
     *தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையில் அந்த குட்டிக் கரங்கிற்கு வேதனை சூழ்ந்துகொன்டது !!!*
     *எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பைப் பார்க்கப் பார்க்க பயம்தான் அதிகரித்தது !!!*
     *மரணபயம் குரங்கின் முகத்துக்கு முன்னால் விசுவரூபமாக காட்சியளித்தது !!!*

     *"ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே" !!!*
     *குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது !!!*
     *ஆனாலும் எந்த பயனும் நிகழவில்லை !!!*

     *நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.*
     *உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*
     *கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*
     *அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*
     *குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.*
     *குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில்,*
     *தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*
     *அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?*
     *அதைக் கீழே போடு" என்றார்.*
     *உடனே அந்த குட்டிக் குரங்கு, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.*
     *அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.*
     *அதைக் கீழே போட்டுவிடு".*
     *அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*
     *அட !!! நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது.*
     *அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.*
     *"இனிமேலாவது, இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.*

     *ஆம் !!! சகோதர சகோதரிகளே !!! கிட்டத்தட்ட நாம் அனைவருமே, "மனக்கவலை" என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ... விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்கிறோம்.*
     *வெளி வேஷத்திற்கு, மகிழ்ச்சியாக இருப்பது போல், சிரித்தபடி காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கதரிக் கொண்டிருக்கும் !!!*
     *ஆம் !!! நண்பர்களே !!! நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் !!! அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லையை கொடுக்கிறதோ அவற்றை மறக்க முயற்சி செய்யுங்கள் !!!*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ, அவற்றை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் !!!*
     *கவலைகள் தானாக விளங்குவதையும் மகிழ்ச்சிகள் தானாக நெருங்குவதை உணர்வீர்கள் !!!*

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...