பிரபஞ்ச கட்டளைவிதி-016
பொஸிட்டிவ் சூழலை உருவாக்க...
#ஏழு_குதிரைப்படம் பற்றிய வாஸ்து டிப்ஸ்:

ஏழு குதிரைப்படத்தை நிறைய நபர்கள் வீட்டில் மாட்டி இருப்பதை பார்த்திருப்போம். அவை
#நன்மையா?
#தீமையா? என்று பார்த்தால், அந்தப்படம் எந்த அமைப்பில் உள்ளது என்பதைப் பொருத்து நன்மை தீமைகள் தீர்மானிக்கப்படும்.

இந்த ஏழு குதிரைகள் படத்தை சரியான அமைப்பில் வீட்டில் மாட்டிக் கொள்ளும் போது, உங்களின் மனதில் உத்வேகம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை தூண்டி உங்களை வாழ்க்கையில்
#வெற்றியாளராக மாற்றும்.

அந்த ஏழு குதிரைகளும்
#பின்னோக்கிச் செல்வது போன்றோ அல்லது நின்றிருப்பது போன்றோ இருக்கக் கூடாது. மாறாக உத்வேகத்துடன் ஓடுவது போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.
#கடிவாளம் கட்டியிருப்பது போன்றும் இருக்கக்கூடாது.
#ஏழு என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் மாறாக வேறு எந்த எண்ணிக்கையிலும் இருக்க கூடாது...
#வெண்மை நிற குதிரைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

உங்கள்
#வீட்டிலோ அல்லது அலுவலங்களிலோ இந்த ஏழு குதிரை படத்தை மாட்டிக் கொள்ளலாம்.

இந்த ஏழு குதிரைகளுக்கு பின்னாடி
#சூரியன் உதயமாவது போன்று இருக்க வேண்டும்.
#வீட்டு_வாசலை நோக்கி வைத்திருக்கக் கூடாது .இது குதிரைகள் நம்மை விட்டு பிரிவதற்கு சமமாக கருதப்படும்.

நம் வீட்டின் தெற்கு அல்லது கிழக்கு சுவரில் மாட்டிக்கொள்ளலாம். ஆனால், குதிரைகள் நம் வீட்டை விட்டு செல்வது போன்ற திசையில் வைக்க கூடாது. மாறாக
#உள்_நுழைவது போன்ற அமைப்பில் இருக்கவேண்டும்.

ஏழு குதிரைகளின் முகமும்
#அமைதியும் சாந்தமும் உடையதாக இருக்க வேண்டும் . மாறாக ஆக்ரோஷம் நிறைந்து காணப்படக்கூடாது.

இந்த படத்தை பூஜை அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ
#மாட்டக்கூடாது.

நான் மேலே சொன்ன அமைப்புகள் போன்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு வாழ்க்கையில்
#வெற்றி மேல் வெற்றி தரும் வகையில் அமையும்...