Friday, June 17, 2022

சுவாமியின் பல்லக்குக்கு


ஸ்ரீரங்கம் போயிருந்தபொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது.

புறப்பாட்டில் பல்லக்கை தூக்கிவந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன். 

வேளுக்குடி சொன்னபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். 

ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்! 

உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். 

இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் அறிந்திராத 
மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சுவாமியின் பல்லக்குக்கு *'#தோளுக்கினியான்'* என்ற பெயர்  பல்லக்குத் தூக்கிகளுக்கு 
*'#ஸ்ரீபாதம் தாங்கிகள்'* என்று பெயர்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம். 

அப்பாங்கை *கருடகதி* என அழைப்பார்களாம்!

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது *சிம்மகதியாம்!*

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை *வியாக்ரகதி* என்கிறார்கள்.

🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬

அதையடுத்து  காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை *ரிஷபகதி* என்றும்

🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

ஆண்யானைபோல நடப்பதை *கஜகதி* என்றும் சொல்கிறார்கள்.

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை *சர்பகதி* என்கிறார்கள்.

🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱🪱

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை *ஹம்சகதி* என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் 
அறிந்து மகிழ்ந்தேன்

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட, 

சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!! 

ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!' 

என்று நான் பலநாள் நினைத்ததுண்டு. 

அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்! 

*பெருமாள் பாரத்தை ஒரு  பாரமாக நினைப்பது தவறாம்.*

அடேங்கப்ப்ப்பா......!!!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் ,
பாடிக் கொண்டும் செல்ல, 

தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் 

அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அது என்ன 
ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா? 

பெருமாளுக்கு விசிறி வீசுபவர்! 

தவிர, பெருமாள்

 #சேஷவாகனம்
 
#கற்பகவிருட்ச வாகனம்
 
#யானை பசுவையாளிவாகம் 

ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும்  மாற்றப்படுமாம்.

உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது 

அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு, பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு 

மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம். 

சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த அளவுக்கு அப்படி தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது?

இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம். 

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து, அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம். 

அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம். 

ஆச்சரியமாக இல்லை!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல வந்துகொண்டே இருக்கின்றன. 

கேட்பதற்கு சில இனிமையாகயும் 

பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது, 

நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும், பார்க்காத கேட்டும்  கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்து, கேட்டு மகிழவேண்டும் என என் சிந்தை மிக விழைகிறது இப்போது.

தவிர நேற்று இரவு என் கனவில் திருமங்கையாழ்வார் வந்து என்னை திட்டிவிட்டுப் போனார். 

'சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்கு போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று. 

'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே?'

புறப்பட்டு விடவேண்டியதுதான்

என் பெருமானை சேவிக்க 

இவ்வளவு விஷயம் இருக்கிறது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்.
************************************
பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞான மும், முக்தியும், அருளும் திருவண்ணாம லை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது?

ஜோதியாக தோன்றி பின்மலையாக அமர் ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத் தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோ ன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவி ளையாட லால் திருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார்.

புராண வரலாறு வருமாறு:
*****************************
ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமா னின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங் கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது இதனா ல் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண் டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார்.

அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத் தார். வே ண்டிய வரம் கேள் என்றார். அதற் கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறி னார் அதை ஏற்றுக்கொண்ட பார்வதி தே வி திருவ ண்ணாமலையில் ஈசனே மலை யாக வீற்றிரு ப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமா னையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதை யில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்தி லும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வ ரராக காட்சி கொடுத்தார்.

அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்ம தித்தார். இந்த முறையில்தான் திருவண் ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள் கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்க ள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாம லையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணா மலையாரின் அருளை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட் டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணா மலையில் கிரிவலம் செல் லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவ லம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகா ன்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின் போது கிரிவலத்தின் மகிமையை தெரிந் து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.

அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ரா ங்க தன். ஒரு தடவை அவன் வேட்டையாடு வதற்கா க காட்டுக்கு சென்றான். அப்போ து அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செ ய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொட ர்ந்து பூனையைவிரட்டினான். அந்த பூனை திருவ ண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமை யாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது.

அந்த சமயம் மன்னனை சுமந்து வந்த குதி ரையும் கீழே விழுந்து உயி ரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவ ரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார் கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவ ரிடமும் “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக் கிறது” என்று கேட்டார்.

அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்.

“நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்து க்கு ள் சென்று அங்கிருந்த செடி-கொடிக ளை நாங் கள் நாசமாக்கி விட்டோம். இத னால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனை யாகவும், குதிரையா கவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே சாப விமோ சனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு சென்று வசியுங் கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்க ளுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படி நாங்கள் இருவரும் திருவண் ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெரு மானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.

நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரை யில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்தி ற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டு மானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறு கிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.

அதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புக ளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடி யாக மன்னர் பதவியில் இருந்து விலகி னான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான்.

அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவ லம் பார் புகழும் வகையில் பரவியது.

இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரி வல த்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த் தினார்க ள் திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்ன தமான மலை என்ப தையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களி டம் சித்தர்கள் தெரிய வைத்தனர்.

இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல் வேறு புராண ங்களில் குறிப்பிடப்பட்டுள் ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங் களும் காணாமல் போய்விடும்.

கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒரு வரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பி டப் பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரவே ண் டும் என்று சொன்னாலே பிரம்மஹத் தி தோ ஷம் தீர்ந்து விடும்.

ஒரு அடி எடுத் து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடி ய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வ தி தேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமா கும். எனவே பவுர்ணமியில் கிரிவ லம் செல்வ து கூடுதல் பலன்களை தருவ தாக கருதப்படு கிறது. பொதுவாக திருவ ண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானா லும் கிரிவலம் செல்லலாம்.

நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவ ண் ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாதபிறப்பு, பவுர்ணமி, அமா வாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களி ல் கிரிவலம் செல்வ தை வழக்கத்தில் வைத்தி ருந்தனர். பின் னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்க ளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர் ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது.

ஆனால் திருவண்ணாமலையை பொறுத் த வரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கி றது. மலையைச் சுற்றி, எப்போதும், யாரா வது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்ப தை பார்க்கலாம்.

கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பத ற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.

கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட் ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்க ள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதி கள் என பல்வேறு இடங்கள் உள்ளன.

அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளை யாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து இடங்களுக் கும் சென்று வருவதாக இருந்தால் குறை ந்தது 5 மணி நேரமாகி விடும்.

அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற் கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவ லத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவல பாதை யில் நடக்க கூடாது.

பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக் கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொ ண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக் கூடாது.

கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்ப தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரிவல பாதையில் உள்ள நம் கண்களு க்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம் மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்க ள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன் களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்..

அது மட்டுமல்ல, எந்த தினத்தில் நாம் கிரிவல ம் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்லும் போது நாம் எப்படி நடந்து கொள் ள வேண்டும்? எந்தெந்த இடங்களில் வண ங்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் மலையை பார்த்து கும்பிட வேண்டும்?

என்றெல்லாம் வரைமுறை களும், ஐதீகங் களும் உள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கிரிவலம் சென்று வந் தால்தான் நீங்கள் கிரிவலம் மேற் கொள்வ தற்கான முழுபலன்களும் கிடைக்கும்.

Wednesday, June 15, 2022

பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் :

 பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் :


பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக சாஸ்திர குறிப்புகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் சுபமங்களம் உண்டாகும்.


பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.


குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம்.


தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.


காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.


மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.


முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.


குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.


தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக்கூடாது.


ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.


பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.


சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.


ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் திருவாதிரை

 சிவபக்தன் ஒருவன்


மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து நடராஜரை தரிசித்தான்.


அவனது ஆயுட்காலம் முடிந்ததும், 


சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர். 


மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல், 


தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக்காட்டினார் சிவன்.


கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச்சுட்டிக் காட்டிய சிவன்,


“பக்தனே... 


எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப்பார்” என்றார்.


உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது.


“ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.


“சுவாமி....


தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச்சுவடு தெரியவில்லை. 


அந்த காலம் நான் துன்பப்பட்ட நேரமாக இருந்ததை என்னால் உணர முடிகிறது. 


மகிழ்ச்சியில், உடனிருக்கும் நீங்கள் துன்பத்தில் காணாமல் போனது நியாயமா? 


இதற்காகவா நான், இமைப்பொழுது கூட மறக்காமல் தினமும் பக்தியுடன் சிவபுராணம் படித்தேன்” கேட்டான்.

அதைக் கேட்டு பலமாக சிரித்தார் சிவன்.


“அட... பைத்தியக்காரா,


எப்போது நான் உன்னை தனியாக விட்டேன். 


முன் வினைப்பயனால் நீ கஷ்டப்பட்ட காலத்தில் கூட, உன்னைத்துாக்கிக் கொண்டு நடந்தேன். 


துன்ப காலத்தில் தெரிவது உன் காலடிகள் அல்ல. 


உன்னை தோளில் சுமந்து கொண்டு நடந்த என் காலடித்தடங்கள்” என்றார்.


பரவசம் அடைந்த பக்தன், 


'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என சிவபுராணம் பாடி சிவனை வணங்கினான்.

தர்ப்பைப்புல் தியான

 தர்ப்பைப்புல் தியான மற்றும் யோகாசனம்( ஆசனம் ) மேட்,, தூங்கும் தர்பை பாய்


     நாங்கள் சொந்தமாக இயற்கையான முறையில் காவேரி ஆற்றில் விளைந்திருக்கும் தர்ப்பை புல்லை கொண்டு தியானம் மற்றும் யோகாசனம் செய்யக் கூடிய மேட், தூங்க உதவும் தர்பை புல் பாய் நெசவாளர்களை கொண்டு குறைந்த விலையில் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் தயார் செய்து தருகின்றோம்


   தர்பைப் புல்  மேட் பயன்கள்:-


 > மன அழுத்தத்தை நீக்கவல்லது

 > எதிர்மறை ஆற்றல் சக்திகளை  

      நீக்கவல்லது

  > நேர்மறை ஆற்றல் சக்திகளை 

      அதிகரிக்கக்கூடியது

  > தர்ப்பைப்புல் இருக்குமிடத்தில் தீய       

     சக்திகள் அண்டாது என்பது ஐதீகம்

  > இதில் அமர்ந்து மந்திரங்கள் 

      சொல்லும்போது காரியசித்தி

      கிடைக்கும் 

  > கர்மவினைகளை உணர்த்தி

     ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி

      செல்லக்கூடியது

    > உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது

    > உடலில் ஆராவை அதிகரிக்க 

        செய்யக்கூடியது

    > மனதை ஒருநிலைப்படுத்த கூடியது

    

  # புத்தர் போதி மரத்தடியில் இந்த தர்ப்பைப் புல்லில் அமர்ந்து தியானம் செய்யும் போதுதான் ஞானம் பெற்றதாக கூறுவர்


    நாங்கள் இடைத்தரகர் இன்றி நேரடியாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம் விருப்பமுள்ள ஆன்மீக அன்பர்கள் இயற்கை ஆர்வலர்கள் இந்த தர்ப்பைப் புல் தியானம் மேட் மற்றும் தர்ப்பைப்புல் யோகாசன மேட்டை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்


#தர்ப்பையின் மகிமை.

-------------------------------------

விரத காலங்களில் தர்ப்பை அணியும் நாம் அது அணிவது எதற்காக என்ற காரணத்தையும் அதன் மகிமையையும் அறிவது நல்லது


தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. அதனால் இது #பவித்ரம் எனவும் அழைக்கப்படும்.


தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம்.


தர்ப்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.

இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

தர்பைக்கு #அக்னிகற்பம் என்பதும் பெயர்.


 இந்த தர்ப்பைபுல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பதும் இதன் பெயர்.

அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, 

அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை.


ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.


நான்கு பக்கமும் தர்ப்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், விரதகாலம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்ப்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .


ஆகவே தர்ப்பை பவித்ரம் போடும் போது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். 

கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்ப்பையை போடுவது வழக்கம்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு(அமங்கல) காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும்,


தர்ப்பை, உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்தை கடத்தும் சக்தி உண்டு, அதே சக்தி, தர்பைக்கும் உண்டு. 


எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். 

அமங்கல காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் மோதிரம் முடியவேண்டும்.


தர்ப்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்ப்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். 

எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.


தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார்.


கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும் அது வீழ்ந்து வாங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும்.


தர்ப்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 


விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.


தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புற்களாக மாற்றி விட்டாராம். அந்தளவு புனிதம் கொடுக்கவல்லது.


மேலும், தர்ப்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.


இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.


சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.


 ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.


தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...