Monday, February 6, 2023

கவியரசரின் மகளுக்கு திருமணம்

கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை .

மிகுந்த கவலையில், தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம். உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார்.

"மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா "! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன், ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். 

மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது.

மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. 

இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. 

குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். 
ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர்  கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.

அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. 

உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்...

"சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்..

கவியரசர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று 
மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன், வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...

கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .

இணையத்திலிருந்து..

பூவரு கங்கை


இந்த நடராசர் தாண்டவம் கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.
இந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம். ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்புத நடனம்....

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...