Thursday, April 7, 2022

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

*விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?*

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். 

திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார். 

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். 

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். 

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், 

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீமஹாபெரியவா புன்னகையுடன் சொல்ல 
ஆரம்பித்தார்

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். 

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். 

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். 

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். 

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

 அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். 

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். 

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். 

ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். 

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். 

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். 

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீமஹாபெரியவா.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர 

-

லட்சுமியும் நுனிப்பகுதியும்

லட்சுமியும் நுனிப்பகுதியும்:

எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும், 

கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும்,

 நகங்களை ஒட்ட ஒட்ட வெட்டக்கூடாது . குறிப்பாக விரத நாட்கள். வெள்ளி. செவ்வாய். சனி. பௌர்ணமி. அமாவாசை போன்ற நாட்களிலும் சந்தி வேளையான காலை மாலை வேளையிலும் ராகு எமகண்ட வேளையிலும் உச்சிகால வேளையிலும் நகம் வெட்டுவதோ. பற்களால் கடிப்பதோ கூடாது .

 எப்போது நகம் வெட்டினாலும் மிக சிறிதளவாவது நகம் விட்டு மீதத்தை வேண்டுமானால் வெட்டலாம், 

வெட்டிய நகத்தை புதைத்தால் நல்லது . நெருப்பில் எக்காரணம் கொண்டும் போடக்கூடாது வெட்டிய நகம் பிணத்திற்கும். ரத்தத்திற்கும் சமம் எனவே நகம் வெட்டிய பின்பு அது தீட்டு பொருளாகும் எனவே நகத்தை வெட்டிய உடன் அப்புறப்படத்துவதே நல்லது இல்லையேல் தரித்திரம் குடிகொள்ளும் .

அடுத்து நுனி நாக்கு லட்சுமி குடிகொண்ட இடமாகும், மகா சரஸ்வதியும். மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும் அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள், 

நாக்கில் மிக சூடான பொருட்கள் சுவைக்கும் போது நுனி நாக்கு சுட்டுவிட்டால் செல்வ செழிப்பு குறைய ஆரம்பிக்கம், 

அதனால் டீ. காபி. பால் போன்ற சூடான பானங்களை மித சூட்டோடு நுனி நாக்கில் படாமல் குடிப்பது நலம், இன்றைக்கும் சில வகுப்பினர் வாய் உதடு படாமலும். பல் படாமலும் அண்ணாந்து பானகங்களை குடிப்பார்கள்,

 இது ஆச்சாரத்திற்கு எனஅனைவரும் கருதுகின்றனர், விஷயம் அறிந்தவருக்கு இதன் ரகசியம் தெரியும், நுனி பல்லும். நுனி நாக்கும் சூடு பட்டால் அதன் சுயதன்மையை இழந்து துடிக்கும், பின்பு அந்த பாகத்திற்குரிய தேவதை பாதிக்கப்பட்டு சாபம் பெறுவோம் .

 எனவே சூடான உணவுகளை நாக்கு சுட்டுபோகும்படி சுவைக்க வேண்டாம் ஆற வைத்தே சாப்பிடவும் .

 அதுபோல் காய். கிழங்கு. பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடி பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்கவும்,

 (அடிபகுதி எதிலும் சக்தி பகுதியாகும், அங்கு பலி நிகழ்த்தும் போது (அறுத்தல்) பாதகமில்லை, முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுவது ஒருபுறம் இருந்தாலும் அதை கிள்ளி நம்முடைய வாழ்க்கையும் தடைபடும் என்பதை அறிக,

 வாழை பழம் கைகளால் பிரித்து சாப்பிட்டாலும் அதன் தோல் உறிக்கும் போது முதலில் அடிபகுதியான காம்பு பகுதியையே முதலில் உறிக்கவும் , நுனி பகுதி நம் தலை அந்த தலையிலும் லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பார்கள்,

 (ஒருவருடைய பாத அணி நம் தலையில் பட்டால் நாம் செல்வந்தர் ஆவோம், அந்த ஒருவர் யார் எனில் ஸ்ரீமன் நாராயணன் ஆவார், அவர் பாதம் பட்டால் லட்சுமி பூரிப்படைவாள், இன்றும் வைணவ ஆலயங்களில் பாத ஆசீர்வாதம் சிரசிற்கு செய்வார்கள் .இதில் பல தகவல் இருந்தாலும் இதுவும் அதில் அடங்கிய ரகசியமாகும்) 

தலைமேலேயே அடிப்பேன் என்ற வார்த்தையை கூட பயன்படுத்த வேண்டாம் .

 முடிந்தளவு மனித நிழலில் தலை பாகத்தையும் மிதிக்க வேண்டாம், நிச்சம் வறுமை வாட்டும்,

 எனவே சுபிட்சமாக வாழ லட்சுமி ஸ்தானத்தை அவமதிக்காதீர்கள், 

இன்னொரு தகவலையும் அறியுங்கள் தலையில் பேன் இருந்தால் அதை பார்க்கும் போது தலையிலேயே வைத்து குத்தக்கூடாது (சிரசு லட்சுமிக்குரியதால் அது புனிதமான பகுதி அதனால்தான் கங்கை. சூர்யன். சிவஸ்தானம் என்றùல்லாம் வர்ணிப்பார்கள்) 

பேனை சிரசில் இருந்து நீக்கி பின்பு வெளியில் வைத்து குத்துவார்கள், தலையில் சீப்பு படுவதால் சீப்பில் பேன் குத்த கூடாது கவனம்,

 பாவம் தாக்கவும். நீக்கவும். முதலில் தெய்வங்களால் பயன்படுத்தக்கூடியது சிரசுதான், அதனால் தான் 7 1/2 சனியே வந்தாலும் முதலில் சிரசையே பீடிக்கும் .

 பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலையுடன் தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்,

 தலையை அடிக்கடி சொறிவது. தலையில் கை வைத்து உறங்குவது. முறையான தூக்கம் கூட இல்லாமல் போவது, தேவையில்லா கற்பனை. தேவையில்லா கவலை. இவைகள் யாவும் தகாத செயல்களாகும்,

 இதனால் நஷ்டம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் தான், வறுமையும் வற்றி வெறுப்பு பற்றிக்கொள்ளும், எனவே இதையெல்லாம் முறையாய் பாதுகாத்துக் கொள்ளுங்கள், லட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள் .

            இதில் உள்ள முறைகளை ஒரு மாதம் மட்டுமாவது கடைபிடித்து பாருங்கள், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நிச்சயம் உயர்வீர்கள்,

 எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து நீங்கள் பார்த்துக் கொண்டாலே போதும், அதன் அருகில் நிச்சயம் செல்வோம், 

ஒரே செயலில் கவனம் செலுத்துவதும் தியானம் தான், அது மந்திரத்தை விட சக்தி வாய்ந்ததாகும், 

ஒரே லட்சியமாக செல்வ சந்தோஷத்தோடு நாங்கள் வாழ வேண்டும், எங்களால் யாருக்கும் துன்பம் ஏற்படகூடாது என நினைத்து இதில் உள்ள முறைகளை கடைபிடியுங்கள், உங்கள் வாழ்க்கை கோபுரமாகும்,

சந்தோஷம். சுபிட்சம். கடாட்சம். 

ஐஸ்வர்யம் கொண்டு வாழ்வீர்கள், இறுதி வரை வழிமுறைகளை பின்பற்றவும், கிடைத்தவுடன் விட்டு விடக்கூடாது .


பகவான் இராமகிருஷ்ணர்-5

*ஒவ்வொருவரும் ஒருநாள் ஈஸ்வரனைக் காண்பார்கள்.*
*கண்டுதான் தீரவேண்டும்.!*

அது

*இந்த ஜென்மத்திலோ அல்லது அநேக ஜென்மங்களுக்குப் பின்னரோ.!*

-பகவான் இராமகிருஷ்ணர்-

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...