Tuesday, February 15, 2022

குளியல் ரகசியம்

*குளியல் ரகசியம்*
 
*எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். 

குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். 

 எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்!   

*ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது.  

நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. 

இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது. 

*மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, 

மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

*இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; 

 ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். 

 ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், 

 பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை.  

ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். 

 நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

*இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! 

குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். 

 நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. 

இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப் படுகிறது. 

குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்! 

*இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான்.
 எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. 

 இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது. 

*கோயிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம்.

 கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம்.  

அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்!

சாதுக்களை சோதிக்காதீர்

 

May be an image of 5 people, people standing and outdoors

























#சாதுக்களை சோதிக்காதீர்!
#விஷ்ணு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் இருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர்.
#அவர் சூரிய பகவானின் பக்தர். அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட ஒரு வாலிபன் கிண்டலாக, உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு!
என்று சொல்லி அடிக்கப் பாய்ந்தான்.சாதுவின் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது சூரியபகவான் அசரீரியாக, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றார். இதைக் கேட்ட இளைஞர்கள் பயந்து போனார்கள்.
#ஆனால் சாதுவோ,செங்கதிரோனே! எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி சொல்வது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்ப்பதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்தார்.உடனே சூரிய பகவான் பேசினார். சாதுவே!
#மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. நீ விரும்பியது போல, இவர்களுக்கு நல்ல புத்தியையும் அளித்தேன், என்றார்.மென்மையான போக்கு தான் மனிதனை வாழ வைக்கும்.
பழி வாங்குதலும், கோபமும் மனிதனை மிருகமாக்கி விடும்.-
siva

உங்கள் பயணம் மிகவும் குறுகியது

 


💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்*
ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.
அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.
அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில்
*எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால்* முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰
இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛
இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.
யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா? அமைதியாய் இருக்கவும்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும். மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*💛
சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.
*நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது*.💛
நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.
*நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு*💛
நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம். அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும். மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம்.ஏனெனில் *நம் பயணம் மிகவும் குறுகியது*💛
உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛எப்போதும் மறக்காதீர்கள்
*உங்கள் பயணம் மிகவும் குறுகியது* 💛
நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

பஞ்ச பூத யாகம்,tamilnadu ,india

 *பஞ்ச பூத யாகம்**

சித்தர்கள் அருள் ஆசியோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காட்டுநாயக்கன்பட்டி கிராமம்
ரிஷி மலை அடிவாரத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும்,
பொருளாதாரம் மேம்படவும்
உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும்
*பௌர்ணமி
யாகம் வருகின்ற 16.02.2022
(புதன் கிழமை )
மாலை 5மணிக்கு நடைபெறும்.
*
*சித்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டால்* ...
*உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
*பொருளாதார தடை நீங்கும்.
*குடும்ப பிரச்சினைகள் தீரும்.
*திருமண தடை அகலும்.
*குழந்தைப் பேறு கிட்டும்.
*பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்.
*ஏவல் பில்லி சூனியம் பேய் அகலும்.
*நினைத்த காரியம் நடக்கும்.
*கடன் பிரச்சினை தீரும்
*ஞாபக சக்தி அதிகரிக்கும்
*ஞானத்திற்கான வழி கிடைக்கும்.
*நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
*அமைதியான மனநிலை உருவாகும்.
*பிறவிப் பலன் கிட்டும்.
*வராத கடன் வசூல் ஆகும்.
*குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு கிட்டும்.
*சித்தர்கள் அருளால் நடைபெற இருக்கும் சித்தர்கள் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற *உலக சித்தர்கள் மாநாட்டில் 1.25 லட்சம் பேர்* கலந்துகொண்டு சித்தர்கள் அருளைப் பெற்றனர். சித்தர்கள் அருள் பெற்றிட அனைவரும் வந்து சித்தர்கள் யாகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*மாதந்தோறும் பௌர்ணமி,
அமாவாசை
பஞ்ச பூத யாகம் நடைபெறுகிறது*
*தொடர்புக்கு*
*உலக சித்தர்கள் ஞானபீடம்* .
*தவத்திரு.
அ.வே.இரத்ன மாணிக்கம*
94435 12858

சோடச உபசாரம்


🌺🌷கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை !

🌺🌹திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.

🌺🌹வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.

🌺🌹இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.

🌺🌹அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்.


ஆஞ்சநேயரின் பரம பக்தர்

ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை! 

தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார்.

எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். 

அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார்.

ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார்.

"நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். 

எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது!'' 
என்றார் அஞ்சனை புத்திரன்.

பக்தரும் சம்மதித்தார் இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.

பக்தர், ஒவ்வொரு முறையும் "ஜெய் அனுமான்" என்ற படியே காய்களை உருட்டினார். 

ஆஞ்ச நேயர் ''ஜெய் ராம்" என்றபடி காய்களை உருட்டினார்.

ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான். 

"சரி அடுத்த முறை ஜெயிக்கலாம்!" என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே!

மனம் வருந்திய ஆஞ்ச நேயர் "ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா...?" 
என்று ராமரிடம் பிரார்த்தித்தார்.

அவர் முன் தோன்றிய ராமன்,

 "ஆஞ்சநேயா... நீ, என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. 

அவனோ உனது பக்தன். ஆதலால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது. 

இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்...

ஜெய் ஹனுமான் 🙏
ஜெய் ஸ்ரீ ராம் 🙏

துவாரபாலகர்கள் இருவர்

சிவாலயத்திற்கு செல்லும்பொழுது எல்லோரும் மூலவரான சிவலிங்கத்துடன் வேண்டுகிறோம். நான் பிரார்த்தனை என்று நம்புகிறோம். இது தவறு. 

மூலஸ்தானத்திற்கு நுழையும் முன்பாக துவாரபாலகர்கள் இருவர் இருப்பர். அந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நாம்
அவரது முகம் பார்த்து பின்வருமாறு நாம் நினைக்க வேண்டும்.

நம்முடைய பெயர் 

நம்முடைய பிறந்த நட்சத்திரம் 

நம்முடைய பிறந்த ஊர்

 நம்முடைய கோத்திரம் நம்முடைய தொழில் இவை அனைத்தையும் நினைக்க வேண்டும்.

 பிறகு நம்முடைய கோரிக்கைகளை வரிசையாக கூற வேண்டும். 

என் மகளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும். 

எனது கடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் தீர வேண்டும்.

எதிரிகளும் துரோகிகளும் செய்யும் எந்த ஒரு மாந்திரிக தாக்குதலும் என்னையும் எனது குடும்பத்தையும் எனது தொழிலையும் சிறிதும் பாதிக்காத அளவுக்கு நான் ஆத்மா பலத்தோடு இருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை உள்ளே இருந்து அருள்பாலிக்கும் அப்பாவிடம் தெரிவித்து விடுங்கள். என்று வேண்ட வேண்டும்.

 அப்படிச் செய்தால் அன்று நள்ளிரவு 3 மணிக்கு துவாரபாலகர் உள்ளே இருந்து அருள்பாலிக்கும் சிவலிங்கத்துடன் முறைப்படி தெரிவிப்பார். 

(ஒவ்வொரு ஆலயத்திலும் நள்ளிரவு 3 மணிக்கு எல்லா தெய்வீக சன்னதியில் இருந்தும் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்து வரும்.மூலஸ்தானத்திற்கு சென்று அன்று முழுவதும் அந்த ஊரில் என்ன நடந்தது என்பதை மூலவரிடம் தெரிவிக்கும். இதை நாம் யாரும் பார்க்க முடியாது.)

இந்த பிரார்த்தனையில் யாரையும் சபிக்க கூடாது. 

நமக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே கேட்டுக் கொள்ளவேண்டும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

சித்தர்கள் அருளிய பிரார்த்தனை முறை இதுதான். 

இந்த முறையினை எமது குருவின் அருளால் உங்களுக்கு தெரிவித்து விட்டோம். 

சிவாய நம சிவாய நம சிவாய நம

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...