Showing posts with label 30.08.2023 ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்.. Show all posts
Showing posts with label 30.08.2023 ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்.. Show all posts

Wednesday, August 30, 2023

30.08.2023 ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்.

30.08.2023 ஆவணி அவிட்டம்.

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல் !
பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.
அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.
இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.
கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும். ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.
என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.
அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.
சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?
ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.
ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.
ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.என்ன செய்யலாம்?
காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?
அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.
பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.அவ்வளவு தானே!
நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
மன்னன் நகைத்தான்.ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.
பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.தராசும் பத்தவில்லை.
பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.
சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.
கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.
இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.
மன்னன் பொருள் தருவானா மாட்டானா?
ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?
அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?
அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?
குறைத்துவிடுவானோ?பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.
காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.
பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.
வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார்.
ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். என்ன ஆச்சரியம்?
பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?
சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.
தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.
வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.
அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்; அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,
பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.
ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.
அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி...........

Tomorrow 30.08.2023 Avani Avittam.
Avani Avittam Special !
Poonool is named as Yagnopaveetham in North language. While producing such kind of thread, they will chant Gayathri Mantra and prepare it.
The poonool who was chanted like that has more power.
Let's look at this first through a short story.
A poor Brahmin produced a thread and ran his life somehow with the income that comes in it.
The givers must have given him the material to run his life. Because he was still poor. He also married and gave birth to a girl.
Though the production of garland and living with it doesn't stop.
That town king is so honest.
He will do as he says to everyone. Since the king was good, the people of the town also helped the Brahmin. Is it possible to conduct a woman's marriage in that though?
Yes; Brahmin's daughter has reached the age of marriage. According to the olden days, marriage should be under seven years of age.
Even a groom agreed to marry that girl.
But that marriage should be treated with less affordable expenses. What to do?
Will the Brahmin be willing to chant Gayathri unanimously without any worries?
To instigate a Brahmin to search for material for her woman's marriage, he also went to the king.
The King also welcomed and hosted the Brahmin. The light on his face attracted him. Thinking why this is why he asked what he came up with.
The Brahmin also said that he had arranged his daughter's marriage and came to the king because he needed the material. That's it!
If the king who asked how much means I will give, the brahmin who was in need, show him the thread that he had," it is enough to give the gold weighing; I will somehow manage. " said that.
The king is a jewel. He asked me to bring a scale and put a thread on the other side to put some gold coins.
The scale was low on the side of the thread. More gold coins to put.... Mhmmm.. The thread was still low. The scale is not enough either.
The king made to bring big scale. And as golds, silver, jewelry, jewels, gems, the king who was afraid that his gazana would be empty saw the minister.
Is it a timely minister, "Brahmin, go today and get what you want tomorrow.
Make and pick up a new yarn on arrival tomorrow. " he said it.
Brahmin went with distress.
All these days, the peace and peace of mind is lost.
Will the king give things or not?
Wow, how many how many navratri days?
With all of them, the scale plate is not equal, right? Will he give everything to us tomorrow?
Or still get it?
Will he reduce it? What is given to the woman will be left for us too, right? What to do with that? Brahmin's mind is in waves. No sleep all night.
Woke up in the morning, rush, hurry up and finish the daily rituals.
Started to make a thread.
Even though the mouth chants Gayathri as usual, the mind is not fully involved in it. He stumbled on.
Somehow the man who finished the thread took it and rushed to see the king. The scale was brought back to the state for the king and ministers to reside. The king put the thread he prepared on the scale and asked to put some gold coins in another plate. What is the surprise?
Is the plate of gold coins down?
Removed some gold coins and kept two or three gold coins, the plate fell down. Then removed them and equivalent to just one golden sock. That Brahmin bought it.
When Brahmin left there, the king was surprised to the minister, "Why did the plate that was not lowered even if the first thing was kept, today it was low? To ask, the minister, "Manna, this Brahmin is really very good. Even a saint. All these days he was without any money.
He came to you only for need.
When he arrived, the thread he gave was overweight and unparalleled to himself due to the glory of Gayathri.
If you had that thread you might have given your country too; such a powerful Gayathri Mantra. But when he was told to come back, will he get money,
My heart did not concentrate on Gayathri in the worry of getting the material.
So there is no glory in the thread he brought the next day.
That's why placing gold coins is down. “ said the minister...........

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...