Sunday, September 25, 2022

பெருமாள் கோவிலில் தீர்த்தம்

 அகால மரணம் ஏற்படக்கூடாது 

என்று ஆசையா? 

பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. 


"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.


சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.


உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது


வட இந்தியாவில், வெளி 

நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.


'யாருமே அகால மரணம் 

அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.


கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.


சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.


இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.


எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!


'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.


'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.


அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.


.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.

தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.


ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.

அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.

இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.


ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.


வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.


அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.


ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.


அகால ம்ருத்யு ஹரணம்,

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்,

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்கிறது வேத வாக்கு.


விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்

அகால மரணத்தை நீக்க கூடியது,

அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,

 என்று வேதமே சொல்கிறது.


மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,

நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,

நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.


கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 

இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.


நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.


அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 

கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.


பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.


"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளி


டம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.


'நோய்' வருவதற்கு காரணம் - 

நாம் செய்த 'பாபங்களே',

'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - 

நாம் செய்த 'பாபங்களே'.


'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 

அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 

என்று வேதமே சொல்கிறது.


கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.


அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.


எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது


அகால ம்ருத்யு ஹரணம்

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து

அருந்த வேண்டும்

பசுவை ஒரு முறை பிரதட்சணம்

 * பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.


* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.


* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.


இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.


* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.


* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.


* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.


எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.


* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.


பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.


* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.


* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.


* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.


பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.


`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!


தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

தாணிப் பாறை

 சதுரகிரி தாணிப் பாறை  சர்வேஸ் வரர் தியான நிலையத்தில் கன்னிமூலையில் அபயஹஸ்த மகாவிநாயகர்சிரசில் பிறையுடன் உள்ளார். வலதுபுறம்  உள்ளராகுவில் சிவலிங்கமும்,இடதுபுறமுள்ள கேதுவில் காளிங்க நர்த்தனகிருஷ்ணனும் உள்ளனர். 

அவருக்கு  அடுத்தபடியாக வடக்குநோக்கி 18ம்படி கருப்பன்  சைவமாக உள்ளார்.

  அவரை தரிசித்து  

விட்டு உள்ளே வர வாசலுக்கு  வலதுபுறம்  சர்வேஸ்வரரை நோக்கியபடி  சண்டிகேஸ்வரர்தரிசனம் முடித்து வந்தால்   இடதுபுறம் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன்  தங்கள் வாகனத்தில் உள்ளனர்.

வாசலைப் பார்த்தபடி சொர்ண ஆகர்சனபைரவர் தன்மனைவியுடன்  உள்ளார்.

தரிசனம்செய்து திரும்பினால் படிக்கட்டுகள்.

வலது புறம் மேற்கு நோக்கிய படிக்கட்டை நெருங்கி சித்தி விநாயகர் தரிசனம் செய்தால் சிறிய இடைவெளி வழியாக சென்றால்  படிக்கட்டின்கீழ் எட்டிப்பார்க்க சிவன்தலையில் கங்கையுடன்  தெரிகிறார்.  

    உள்ளே செல்ல வலதுபக்கம் படிக்கட்டு இறங்கிச் சென்றால்  இடதுபுறம் திரும்பி கீழே இறங்கி வலதுபுறம்திரும்ப நடுவில் சிவனுக்கு கீழே  பாலாம்பிகை 

 இடது புறம் ஆறு சித்தர்கள் வடக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்கிழக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்  தெற்குப்பார்த்தும் உள்ளனர்.நடுவில்

தெற்குப்பார்த்து யுகங்கள் கடந்த பகுளாதேவி சமேத காக புஜன்டர் இருவரும்18கரங்களுடன் ,நடுவில் மேற்குப்பார்த்து பிரம்மா (நான் முகன்),சிவன், விஷ்ணுவும், நடுவில் வடக்குப்பார்த்து நால்வர் பெருமக்கள் உள்ளனர்.18சித்தர்கள்  பெயர், நட்சத்திரம், வாழ்ந்த காலம், அடங்கிய இடம் ஆகியவை குறிப்பு உள்ளது.

 காகபுஜன்டர்  அவரது மனைவி யுகங்கள் கடந்த வர்கள் எனவே காலங்கள் குறிக்கப் படவில்லை.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...