Thursday, March 31, 2022

பூலோக தென் கைலாயம் !

 பிரமிக்க வைக்கும் பூலோக தென் கைலாயம் !

வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம்.
சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி.
ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது.
ஓம் நம சிவாய

தென்கயிலையேனும் வெள்ளியங்கிரிமலை

சிவசிவ
அன்பு அடியாா்பெருமக்களே
மகிமை மிக்க தென்கயிலையேனும்
வெள்ளியங்கிரிமலை பற்றிய அரிய தகவல்கள்...!அன்புஅடியாரவர்களுக்கு
சமர்ப்பனம் அனைவருக்கும்
வெள்ளியங்கிரி மலை என்றவுடன் அதன் பசுமையும் தெய்வீக அதிர்வுகளும் உடனே நினைவுக்கு வரும்.
அங்குள்ள 7 மலைகளிலும் உள்ள தெய்வீக இடங்களும், வரலாற்று சிறப்புகளும் என்னென்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
வெள்ளியங்கிரி பற்றிய அரிய தகவல்கள் பலவற்றைக்கொண்டு ஒரு முழுமையான தொகுப்பாக இப்பதிவு அமைகிறது!
‘தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்று போற்றப்படும் சிவனுக்கு, தென்னாட்டில் உள்ள கயிலைதான், ‘தென் கயிலை’ என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை!
இயற்கையின் பேருருவில் இறைவனைக் காணுகிற மரபு நம்முடையது. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம்.
ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சுமவடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம்செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம்! ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரி.
இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி.
இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு.
முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன.
முதல் மலை செங்குத்தான பாதைகொண்டது. ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டிவரும். இந்த மலைப் பாதையின் ஆரம்பத்தை ஆன்மிகப் பாதையின் ஆரம்பத்துக்கு நாம் ஒப்பிடலாம்.
ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றுவது எப்படி ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்குமோ, அது போல முதல் மலை ஏறுவது சற்றே சிரமமாக இருக்கும். முதல் மலையைத் தாண்டி வருபவர்களை வரவேற்க, விநாயகப்பெருமான் காத்திருக்கிறார்.
பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. வழுக்குப் பாறை வந்தவுடனேயே இரண்டாவது மலை முடிந்துவிட்டதை பக்தர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு ‘கைதட்டிச்சுனை’ என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.
மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு ‘பாம்பாட்டிச்சுனை’ என்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலைதான்.
அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும். குண்டலினி சக்தியின் குறியீடாக பாம்பு இருப்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.
மனிதர்களின் குண்டலினி ஆற்றலை ஆட்டுவிக்கிற வல்லமை சித்தர்களுக்கு இருப்பதாலேயே பாம்பாட்டிச் சித்தர் என்பது ஒரு முக்கியமான சொல்லாக விளங்குகிறது.
நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது.
இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, ‘ஒட்டர் சமாதி’ என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.
ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்று பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது.
எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் ‘அர்ச்சுனன் தலைப் பாறை’ போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு.
ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது.
இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது.
இங்கே பாயக்கூடிய சுனை ‘ஆண்டிசுனை’. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை.
எனவே, இவற்றுக்கு ‘திருநீற்றுமலை’ என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.
‘சுவாமி முடி மலை’ என்று பெயர்கொண்ட ஏழாவது மலை மேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது.
இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது.
இதைத் ‘தோரண வாயில்’ என்று அழைக்கிறார்கள். ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.
மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி ஈசர்.
கரிகால சோழனிடம் சமய முதலிகள் ‘வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!’ என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளியங்கிரி மலை, இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலம்.
பற்பல சுனைகளும் சிற்றருவிகளும் உருவெடுக்கும் வெள்ளியங்கிரி மலையில் மூங்கில், தேக்கு, சோதிப் புல், சோதிக்காய், மிளகு, திப்பிலி, உதிரவேங்கை, வசுவாசி, வாடா மஞ்சள், காட்டுப்பூ, சிவப்புக் கற்றாழை, கற்பூரவல்லி, ரத்தசூரி, ஏறு சிங்கை, இறங்கு சிங்கை, சோழைக் கிழங்கு, கருங்கொடிக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய தாவரங்களும் மூலிகைகளும் கிடைப்பதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைகள் பொதுவாகவே மகிமை மிக்கவை. சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், வெள்ளியங்கிரி.
அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி.
மண்ணுலகம் சிறக்கவும் அருள் நெறியில் ஈடுபட்டு மக்கள் தங்களை உணரவும் வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகிற அருட்களஞ்சியமாய், பேரருளின் பிரம்மாண்டமாய், தென் கயிலாயமாய் நிமிர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரி மலை தெய்வீகத்தின் உறைவிடம், ஞானத்தின் நிறைகுடம்
யாம் எனது சிறு வயது முதலே இம்மலைகளில் நிறைய முறை
பயணம் மேற்கொண்டுஉள்ளோம்
ஓவ்வோரு ஜீவனும் வாழ்வில்
ஓருமுறையேனும் தென்கயிலையேனும்
வெள்ளியங்கிரிசென்று வாருங்கள்
திருச்சிற்றம்பலம்

மதிப்புடைய அனைத்தும் சோதிக்கப்படும்

 மதிப்புடைய அனைத்தும் சோதிக்கப்படும் இதுவே இயற்கை விதி.

மாற்றங்களே வாழ்வுக்கான விடை
மனதார ஏற்றுக்கொள்.
மனம் ஓயாது மகேசன் வாரான்

வாரியார் #சொன்ன #கற்பூரகதை.

 #வாரியார் #சொன்ன #கற்பூரகதை.

~``~``~``🔥🍌🥥 🔥 ``~``~``~
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.🔥

திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

 திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

🙏இறைவர் திருப்பெயர்:
திந்திரிணீஸ்வரர்.
🙏இறைவியார் திருப்பெயர்:
மரகதவல்லி, மரகதாம்பாள்
தல மரம்:
🙏புளியமரம்
தீர்த்தம் :
🙏வழிபட்டோர்:
வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி,கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள்
Sthala Puranam
🙏தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.
🙏கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.
🙏மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.
🙏திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.
🙏வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. தெள்ளும் புனற்கெடில (6-7-8),
2. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
Specialities
🙏இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
🙏மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
🙏பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.
🙏இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.
🙏இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
🙏இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன







வஜ்ராயுத லிங்கம்,உப்பு லிங்கம்

 அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம் ...! ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா #உப்பு_லிங்கம் !

#ராமேஸ்வரம்ராமநாதர் #கோவிலில்உப்பு #லிங்கம்*_
#இதை_வஜ்ராயுத
#லிங்கம்_என்று
#அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
#உப்புலிங்கம்*
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
முப்பொழுதும்... நற்றுணையாவது நமசிவாயவே அருள்மிகு ஸ்ரீ பிரகலாதீஸ்வரர் சமேத லோகநாயகி அம்மாள் திருவடிகள் போற்றி போற்றி*
அடியேன்: ஞானன்
ஞானக்கண் அருட்பணி மன்றம் இ.துரைசாமியாபுரம் என் கடன் பணி செய்து கிடப்பதே. இறைப்பணி செய்வோம். இன்பமாக வாழ்வோ
May be an image of 1 person



நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

 நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

இன்று பங்குனி 17, மார்ச் 31/3/2022
சிறப்பு: அமாவாசை விரதம்
வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு.ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி.அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன.
பங்குனி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும்.
அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும்.
வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவை சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
No photo description available.



வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

 வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்.
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட
இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்..
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,
இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்..
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
இந்த ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
இதற்கு புன்னைவனம் சீரரசை
என்றும் பெயருண்டு.
இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்...
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு...
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்...
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார்
புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.
இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது..
No photo description available.



Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...