Thursday, November 10, 2022

வழிபடும் லிங்கங்கள்

 வழிபடும் லிங்கங்கள்

பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்

சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்

ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்

சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்

ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்

வருணன் ஸ்படிக லிங்கம்

சித்தர்கள் மானச லிங்கம்

புதன் சங்கு லிங்கம்

கணேசர் கோதுமை லிங்கம்

கருடர் அன்ன லிங்கம்

அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்

காமதேவர் வெல்லத்திலான லிங்கம்

விபீஷணன் குப்பையிலிருக்கு மண்ணிலான லிங்கம்

போகர் மரகத லிங்கம்

இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்

ராகு பெருங்காயத்திலான லிங்கம்

நாரதர் ஆகாச லிங்கம்

செவ்வாய் வெண்னையிலான லிங்கம்

நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்

பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்

ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்

டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்

மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்

பரசுராமர் சோளத்திலான லிங்கம்

பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்

பறவைகள் ஆகாச லிங்கம்

வாசுகி விஷ லிங்கம்

கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்

குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

தினம் ஒர் சித்தர் வரலாறு . பெயர்: காக புஜண்டர்

 தினம் ஒர் சித்தர் வரலாறு


 பெயர்: காக புஜண்டர்


வரலாறு சுருக்கம்:

பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார். அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள். தியானச் செய்யுள்: காலச்சக்கரம் மேல்

ஞானச்சக்கரம் ஏந்திய

மகா ஞானியே

யுகங்களைக் கணங்களாக்கி

கவனித்திடும் காக்கை ஸ்வாமியே

மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது

கால் பற்றிய எம்மைக் காப்பாய்

காக புஜண்ட சுவாமியே.

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் : 10-11-2022

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :

10-11-2022

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, ஐப்பசி 24 

நாள் - மேல் நோக்கு நாள்

பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை   - Nov 09 05:17 PM – Nov 10 06:33 PM

கிருஷ்ண பக்ஷ திருதியை   - Nov 10 06:33 PM – Nov 11 08:17 PM

நட்சத்திரம்

ரோஹிணி - Nov 10 03:09 AM – Nov 11 05:08 AM

மிருகசீரிடம் - Nov 11 05:08 AM – Nov 12 07:33 AM

கரணம்

கரசை - Nov 10 05:51 AM – Nov 10 06:33 PM

வனசை - Nov 10 06:33 PM – Nov 11 07:22 AM

யோகம்

பரீகம் - Nov 09 09:17 PM – Nov 10 09:12 PM

சிவம் - Nov 10 09:12 PM – Nov 11 09:29 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:13 AM

சூரியஸ்தமம் - 5:53 PM

சந்திரௌதயம் - Nov 10 7:29 PM

சந்திராஸ்தமனம் - Nov 11 8:26 AM

அசுபமான காலம்

இராகு - 1:31 PM – 2:58 PM

எமகண்டம் - 6:13 AM – 7:41 AM

குளிகை - 9:08 AM – 10:36 AM

துரமுஹுர்த்தம் - 10:07 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM

தியாஜ்யம் - 11:18 AM – 01:03 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:40 AM – 12:27 PM

அமிர்த காலம் - 01:40 AM – 03:24 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto - 05:08 AM

மிருத்யு

வாரசூலை

சூலம் - South

பரிகாரம் - தைலம்

__________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00   -   குரு   -  சுபம்

07:00 - 08:00   -   செவ் -  அசுபம்

08:00 - 09:00   -   சூரி   -  அசுபம்

09:00 - 10:00   -   சுக்    -  சுபம்

10:00 - 11:00   -   புத    -  சுபம்

11:00 - 12:00   -   சந்     -  சுபம்

                                                                                                                                                                                                            பிற்பகல்

                                                                                                                                                                                                            12:00 - 01:00   -   சனி    -  அசுபம்

01:00 - 02:00   -   குரு    -  சுபம்

02:00 - 03:00   -   செவ்   - அசுபம்        

மாலை 

03:00 - 04:00  -   சூரி   -   அசுபம்

04:00 - 05:00  -   சுக்     -  சுபம்

05:00 - 06:00  -   புத     -   சுபம்

06:00 - 07:00  -   சந்     -   சுபம்        

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.__________

ராசிபலன்

10-11-2022

மேஷம்

நவம்பர் 10, 2022

பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரணி : ஆர்வம் உண்டாகும். 

கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------ரிஷபம்

நவம்பர் 10, 2022

சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும். 

ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------மிதுனம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு  

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------கடகம்

நவம்பர் 10, 2022

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------

சிம்மம்

நவம்பர் 10, 2022

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

மகம் : ஆர்வம் உண்டாகும்.

பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

கன்னி

நவம்பர் 10, 2022

வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் அமையும். 

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------துலாம்

நவம்பர் 10, 2022

எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : விவேகத்துடன் செயல்படவும். 

சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும். 

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும். 

---------------------------------------

விருச்சிகம்

நவம்பர் 10, 2022

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

விசாகம் : முடிவு கிடைக்கும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும். 

கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------

தனுசு

நவம்பர் 10, 2022

நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

பூராடம் : ஆதாயகரமான நாள்.

உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------மகரம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------கும்பம்

நவம்பர் 10, 2022

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

சதயம் : பொறுப்புகள் கிடைக்கும். 

பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------

மீனம்

நவம்பர் 10, 2022

உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.ரேவதி : இழுபறிகள் குறையும்.


கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 உலகில் மூன்று பொருட்கள் உள்ளன. 

1) இறைவன் 

2) உயிர்கள் 

3) மாயை 

பிரபஞ்சம் முழுவதற்கும் இருப்பது ஒரே இறைவன் தான்.

உயிர்களில் 84 லட்சம் வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எண்ண முடியாத அளவு உயிர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த 84 லட்சம் உயிர் வகைகளை ஏழு பெரும் பிரிவுகளாகவும்  பிரிக்கலாம்.

1 தேவர் 

2) மனிதர் 

3) மிருகங்கள்

4) பறவைகள்

5) ஊர்வன 

6) நீர் வாழ்வன

 7)தாவரங்கள் 

மாயை என்னும் பொருள் ஒன்றுதான்.

 அதை இறைவன், தான் விரும்பும் வண்ணம் ஆக்க முடியும்.  அண்ட சராசரங்களில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே பொருளான மாயையில் இருந்து இறைவன் உருவாக்கியது தான். இறைவன், உயிர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவ நிலைக்கு ஏற்ப உடலைத் தருகிறான். அந்த உடலை வைத்து தன் ஆயுட்காலத்தில் அவை வினையாற்றுகின்றன. அதனால் அவை அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து முன்னேறுகின்றன. அவைகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவற்றிற்கு உடலை இறைவன் வழங்குகிறான். ஒவ்வொரு பிறவியிலும் அனுபவம் பெற்று முன்னேறி இறுதியில்  இறைவனுடன் ஒன்றியிருக்கின்றன. இவ்வாறு உயிர்கள் முன்னேறி இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் ஆக இருக்கிறது.  ஆனால், உயிர்கள் தன் புலன் உணர்வால் கிடைக்கும் இன்பங்களில் மயங்கி அதிலேயே மூழ்கி முன்னேற்ற பாதையில் செல்லாமல் பின்தங்கி விடுகின்றன. அவைகள் இறைவடி சேரும்   வரை அவற்றிற்கு இறைவன் மீண்டும் பிறவிகளையும் அந்தந்தப் பிறவிக்கு ஏற்ப உடலையும் வழங்குகிறான். மனிதர்கள்  இந்தப் பிறவிச்சுழல் என்ற கடலில் இருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்கிறார்கள்.அவர்கள் கடைத்தேறுவதற்கான  வழியைத்தான் திருவள்ளுவர் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்தாவது பாடலில் கூறுகிறார்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

 நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை நினைந்து போற்றிக் கொண்டு இருப்பவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பார்கள்;

மற்றவர்கள் கடக்க முடியாது.


அன்புச் சொந்தங்களே,


இந்தக் கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகும்.

உலகில் எந்த சமயத்திலும் சொல்லப்படாதது.

சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்ற ஒரு பழமையான சிவாலயம் இருக்கிறது.அங்கே, வருடத்தில் 365 நாட்களும் சைவ அதாவது சிவ வழிபாடு பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது.நான் சென்னையில் இருக்கும் போது மன அமைதிக்காக அவ்வப்போது இந்த சொற்பொழிவுகளைக்  கேட்கப் போவது உண்டு.அவ்வாறு கேட்கும்போது கிடைத்த ஞானத்தை வைத்துத்தான் இந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.இது ஒரு ஜனரஞ்சகமான விஷயம் அல்ல.எல்லாராலும் பொறுமையாகப் படிக்க முடியாது.ஆனாலும் இதை நீக்காமல் வைத்திருந்து சிலநாட்கள் திரும்பத்திரும்பப் படியுங்கள்.


உயிர்களும் உலகமும் டார்வின் கூறியபடி தானாகப் பரிமாண

வளர்ச்சியால் தோன்றவில்லை.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...