Showing posts with label வாழ்க்கையின் யதார்த்தம்*. Show all posts
Showing posts with label வாழ்க்கையின் யதார்த்தம்*. Show all posts

Friday, April 22, 2022

வாழ்க்கையின் யதார்த்தம்*

 

#வாழ்க்கையின் #யதார்த்தம்*
1. எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2. தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
3. உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4. குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5. வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6. ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது " ஊமையாய் " இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது " செவிடனாய்" இருங்கள்...! எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7. சங்கடங்கள் வரும் போது "தடுமாற்றம் " அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது " தடம் " மாறாதீர்கள்.
8. வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி " நீங்கள் " நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
9. ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு " நீங்கள் " மட்டுமே காரணம்.
10. நீ சிரித்துப் பார்..! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11. அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12. வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13. எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14. நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை " முட்டாள் " என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு " நம்பிக்கையையே " ஆகும்.
15. அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் " திறமை " படைத்தவன் என்பதே அர்த்தம்.
16. மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!
🌷🌷வாழ்க வளமுடன்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...