Showing posts with label மனதார ரசிக்க வேண்டும். Show all posts
Showing posts with label மனதார ரசிக்க வேண்டும். Show all posts

Tuesday, October 3, 2023

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

குருவாயூரப்பனும் மஞ்சாட்டிகுருவும்
........................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்

குருவாயூர் கண்ணன் திருவடி காண போனால் ஒரு சடங்கு உண்டு.

"மஞ்சாடி குரு "

இது மலையாள பெயர்,

அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் செய்யும்போது, விநாயகர், கண்களாக பாவித்து சிவப்பும், கருப்பும், கலந்த சிறிய வகை கொட்டை அது,
தமிழில் குன்றிமணி என்றும் குண்டுமணி என்றும் சொல்வார்கள் 

கேரளாவில் இதற்கு மஞ்சாடி குரு " க்கள் என்று பெயர்,

குருவாயூரில், ஒரு பெரிய வட்டமான உருளியில் (பாயாசம் செய்யும் வாய் அகன்ற பித்தளை பாத்திரம் ")
இந்த மஞ்சாடி குரு "என்னும் கொட்டைகளை அந்த உருளியில் போட்டு வைத்திருப்பதை நீங்கள் குருவாயூர் செல்லும்போது காணலாம்!

எதற்காக?

பிறந்த குழந்தைக்கு அன்னமூட்டு, என்கின்ற சம்பவம் அங்கே செய்வார்கள்!

அதாவது மூன்று மாதம் அல்லது ஐந்து மாதம் கழிந்த சிசுவிற்கு முதல்முதலாக
" சோறூட்டு " சடங்கு நடத்தப்படும்,

அதன் பிறகு அந்த குழந்தையின் கைகள் கொண்டு மஞ்சாடி குருக்கள் இருக்கும், உருளியில் சிறிது பணத்தோடு சேர்த்து மூன்று முறை வாரி, அந்த பணத்தையும் சேர்த்து மஞ்சாடி குருக்கள், என்கின்ற கொட்டைகளுடன் போட்டு விடுவார்கள்,

இப்படி செய்யும் பிள்ளைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் சுபாவங்கள் வரும் என கேரளாவில் ஐதீகம்.

இந்த மஞ்சாடி குருக்கள் " வாரும் ஐதீகத்திற்கு பின்ன்னால் ஒரு சிறுகதை போல் நடந்த சம்பவம் ஒன்று உண்டு,

ஒரு வடக்கன் கேரளாவில், ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை ஸ்த்ரீ ஒருத்தி இருந்தால்,

கண்ணனை  நினைத்து இருந்தாள்!

"கேரளத்து மீரா "

கண்ணனை நினைக்காத நாளில்லையே!!

உண்ணும்போதும்,
உறங்கும்போது,

கண்ணன் தானே,
மாய வண்ணன் தானே!!

விவாஹம் நடக்கவில்லை!
செய்ய வில்லை.!

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

இதுதான்  அந்த ஏழைப்பெண்ணின் லக்ஷியம்,

அந்த காலகட்டத்தில் இன்று போல் வாகன வசதிகள் இல்லாத காலம்,!

நடைபயணம் தான்!!

வருஷங்கள் ஓடியது!

கிழடு தட்டி கிழவி ஆனாள்!

"வ்ருத்த கன்யகா "

ஒரு நாள் கனவில்,

கண்ணன் வந்தான்!!

தன்னை வந்து குருவாயூர்க்ஷேத்ரத்தில் தரிசிக்க சொன்னார்,

எழந்தாள்,

குளத்தில் சென்று குளித்தாள்,

கிழிந்து போயிருக்கும் முண்டையும், மேலாடையையும் அணிந்து,
தெக்கன் நாட்டில் இருக்கும் திருச்சூர், நாட்டிற்கு நடக்க தீர்மானித்தாள் அந்த வ்ருத்த ஸ்த்ரீ,

இப்போது தன் மனம் கவர்ந்த கண்ணனுக்கு காணிக்கையாக என்ன கொண்டு செல்வது?
குஸேலன் போல் யோசித்தாள்!

ஒரு பிடி அவள் வாங்க கூட நம்மிடம் பணம் இல்லையே!

என்ன நினைத்தாளோ! தெரியவில்லை.!

"அந்த மஞ்சாடி மரத்திலிருந்து மஞ்சாடி கொட்டைகளை பறித்து தனது கிழிந்த முட்டில் முறுக்கி கட்டி கொண்டாள்.

கண்ணனை காண!

நடந்தாள்!

நடந்தாள்!

நாற்பது நாட்கள் பசி, பட்டினி யோடு நடந்தாள்,

கடைசியாக  குருவாயூர் போய் சேர்ந்தாள்!
 மகரம் மாஸம் ஒன்றாம் தேதி!

உத்ராயண கால தொடக்கம்!!

சங்கராந்த்ரி.!

இராஜபரணம் காலம் அது!

தை முதல் தேதி!!

அன்று பொதுமக்கள் குருவாயூரானை தரிசிக்க அனுவாதம் இல்லை!

இராஜக்கன்மார்களும் நம்பூதிரிக்கள் மட்டும் அனுவாதம்!

கண்ணனை தரிசிக்க வந்த அந்த பக்தைக்கு எப்படி யாவது இன்றே கண்ணனை காணவேண்டும், என்கின்ற ஆசை!!

யாருடைய அனுவாதமும் கேட்காமல் நேராக க்ஷேத்திரம் நோக்கி, நடந்தாள்,

அந்த நேரம் பார்த்து இராஜக்கன்மார்களும், க்ஷேக்த்ர தந்திரி 'நம்பூதிரிமார்களும் வந்து கொண்டிருந்தார்கள்

அதுவும் யானையின் மேல்!

அந்த பெண் நேராக ஸ்ரீ கோவிலின் அருகே சென்று கொண்டிருந்தாள்!!

" க்ஷேக்த்ராதிபர்கள் "பார்த்து விட்டனர்,

இராஜக்கன்மார்கள் வரும் நேரத்தில் இவள் யாருக்கும் தெரியாமல் எப்படி வந்தாள்!?

கோபம் கொண்ட க்ஷேக்த்ர நிர்வாகிகள் அவளை பலவந்தமாக, கையை பிடித்து இழுத்து நடைக்கு வெளியே கழுத்தை பிடித்து கோபம் கொண்டு, விருத்தஸ்த்ரீ என்றும் பாராமல், தள்ளினர்.

அவள் கையில் துணியில் பொதிந்து வைத்திருந்த,
"மஞ்சாடி கொட்டைகள் " 
தரையில் கொட்டி சிதறியது!

கண்ணகி சிலம்பை உடைத்ததுபோல்!

" பரல்கள் சிதறியதுபோல் "

அதைகண்டு அங்கிருக்கும் க்ஷேக்த்ர நிர்வாகிகள், விழுந்து விழுந்து சிரித்தனர்!

"அவமானம், அழுகை, பசி வேதனை,
கண்ணீராக வந்தது அவளுக்கு!!

பட்டத்து யானைகளுடன் தரிசனத்திற்கு வந்த இராஜக்கன்மார்கள் வரும்போது,

அவர்களை தாங்கி வந்த யானைகள் மதம் பிடிக்க தொடங்கியது,

அத்தனை யானைகளுக்கும்,

அதிர்ச்சி அடைந்த மன்னர்களும், க்ஷேக்த்ர நிர்வாகிகளும், கண்ணனை தரிசிக்காமல் மன்னர்கள் புறப்பட்டனர்,

ஒட்டு மொத்த யானைகள்கும் ஒரே நேரத்தில் மதம் பிடித்ததில் ஏதோ,

"தேவகோபம் " உண்டு "

தேவப்ரஸன்னம் " வைக்கப்பட்டது,

ப்ரஸ்னத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் உக்ர கோபத்தில் உள்ளார், என்றும்,

தான் கனவில் சென்று அழைத்த ஸ்த்ரீயை அவமானப்படுத்தியது,

அவள் எனக்காக ஆசையுடன் கொண்டு வந்த அந்த "மஞ்சாடி கொட்டைகளை "சிதற விட்டதாலும்,

அவள் என்னை காண அனுவாதம் கொடுக்கவில்லை என்பதாலும்
க்ஷேக்த்ர மூர்த்தி ஸ்ரீ கிருஷ்ணன் கடுங்கோபம் அடைந்துள்ளார் "
என்பதும் "தேவப்ரஸன்னதௌதில் காண பட்டது,

நிர்வாகிகள் அந்த ஸ்த்ரீயை வலை போட்டு தேடி கண்டுபிடித்தனர்

அவளுக்கு அன்றே இராஜக்கன்மார்கள் கூடே தர்ஸனம் செய்ய அனுமதிக்கப்பட்டது,

கண்குளிர கண்டாள்.
குருவாயூரோனை ,
கண்ணீர் பெருகியது அவள் கண்களில்,

அப்போது ஒரு அஸரீரீ!!!!

என் பக்தை அவள் கொண்டு வந்த மஞ்சாடி கொட்டைகள் இங்கு வைக்க வேண்டும்,

குழந்தைகள் என்னை ப்ரார்த்தித்து அதை வாரும்போது,

ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய நான் அவர்கள் உள்ளில் செல்கிறேன்,

அவர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும் "நான்தான் "அவர்களில் இருப்பேன்,

தேவப்ரஸன்னத்தில் காணப்பட்டது போல் க்ஷேக்த்ர நிர்வாகிகள் "மஞ்சாடி கொட்டைகளை ஒரு பெரிய உருளியில் போட்டு வைத்திருப்பதை இன்றும் காணலாம்,

அந்த மஞ்சாடி கொட்டைகள் கொண்டு வந்த ஸ்த்ரீக்கு அவருடைய ஜீவித நாள் முழுவதும் காலையில் கண்ணனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

(இதை பதிவிடும் நேரத்தில் குருவாயூர்,
"தேவப்ரஸன்னம் " வைத்து கொண்டிருக்கிறார்கள்)

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...