Showing posts with label மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?. Show all posts
Showing posts with label மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?. Show all posts

Friday, March 3, 2023

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ... 

உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.

சிவப்பு நிற நாக்கு 

உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

மஞ்சள் நிற நாக்கு 

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

பிங்க் நிற நாக்கு 

உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.

இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.

வெள்ளை நிற நாக்கு 

ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.

காபி நிறமுள்ள நாக்கு 

நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிமெண்ட நிறமுள்ள நாக்கு

உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.

நீலம் நிறமுள்ள நாக்கு  

நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிறிய சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீர்ழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...