Friday, August 12, 2022

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

1.அதி காலை சூரிய உதயத்திற்கு முன் கண் விழிப்பது.

2.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் நீர் அருந்துதல்.

3.முப்பது நிமிடம் நடை பயிற்சி அல்லது உடற் பயிற்சி அல்லது யோகா செய்வது.

4. எந்த மதமாக இருப்பினும் காலையில் கடவுள் வழிபாடு.

5.பெற்றோரை வணங்குதல்.

6.கட்டாயம் காலை உணவு சாப்பிடுதல் அதற்கு நேரம் ஒதுக்குதல்.

7.அன்று செய்ய வேண்டிய வேலைகளை முறை படுத்துதல்.

8.படிக்கும் பருவமாக இருப்பின் முறையாக கல்வி பயிலுதல்.

9. வேலைக்கு செல்பவர் என்றால் முறையாக வேலைக்கு செல்லுதல்.

10. சக நண்பர்களிடம் நட்பு பாராட்டுதல்.

11.எப்பொழுதும் நல்ல சிந்தனை கொள்ளுதல்.

12. அடுத்தவர்களோடு அனுசரனையோடு இருத்தல்.

13.தினம் ஒரு நல்ல அல்லது ஒரு புதிய பாடம் கற்றல்.

14. நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளுதல்.

15.செய்தித்தாள் , தொலைகாட்சி செய்தி அல்லது வானொலி செய்தி ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல்.

16. அலை பேசி உபயோகத்தை முடிந்த அளவு குறைத்து கொள்ளுதல்.

17. ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற பயன் பாட்டுகளை குறைத்து கொள்ள்ளுதல்.

18.அலை பேசி விளையாட்டை குறைத்து கொண்டு நம் பாரம்பரியம் கொண்ட , உடல் வேர்வை மற்றும் மனம் குளிர விளையாட்டை விளையாடுதல்.

19.பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடம் நேரம் செலவு செய்தல்.

20.தொலைகாட்சியில் ஒளி பரப்பும் குடும்ப தொடர்களை தவிர்த்து நல்ல இசை , மற்றும் குழந்தை, அறிவு நிகழ்ச்சிகளை பார்ப்பது.

21.அதிகம் தேனீர் காபி குடிப்பதை தவிர்க்கவும்.

22.புறம் பேசுதல் தவிர்க்கவும்.

23 அரசு விதிகளை முறையாக பின் பற்றவும்.

24.இயற்கை அழகு சிதைக்காமல் இயற்கையோடு வாழ கற்று கொள்ளுதல்.

25.மன அமைதிக்கு புறம்பான எந்த செயலையும் செய்யாது இருத்தல்.

எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும்  குறைந்த பட்சம் ஒரு பத்து நல்ல பழக்கங்களை
கடைப்பிடிக்க வேண்டும்...
#வாழ்க_நலமுடன்_வளமுடன்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...