Showing posts with label உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு. Show all posts
Showing posts with label உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு. Show all posts

Friday, March 3, 2023

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு

 

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறு மருத்துவக் குறிப்புகள்

தலைவலி


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டைக் கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்புச் சக்கையை எடுத்து எரித்துச் சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

நெஞ்சுச் சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவச் சளி குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தித் தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

தேமல்

வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரத் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக்கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கித் துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராகச் செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டைச் சுட்டு அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

ஆரஞ்சுத் தோலை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைச்சாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...