Monday, February 14, 2022

காமராஜர் சொன்ன பதில்

1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது.

அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார், 

 "மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!" 

அதற்கு காமராஜர் சொன்ன பதில்,

 "அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?"

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.
எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். 
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
அவனை மிகவே
யோசிக்க வைத்தது.
அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.
ஆனால், காந்தியை அவ்வப்போது 
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான். 
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?
ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான். 
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. 
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.
மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.
இன்று உங்களுக்கு
விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், உங்களைப் பிரிய
என்னால் முடியவில்லை.
இது வருத்தமான செய்தி என்றான்
ஸ்மட்ஸ்.
காந்தி சொன்னார்,
"நானும் உங்களுக்கு
ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி,
தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார். 
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான், 
"இவ்வளவு
துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" 
என்று கேட்க,
சிரித்தபடி காந்தி
தனது மார்புத் துண்டை அகற்றினார்; 
ஆரம்பத்தில்
ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
"இந்த வடுக்களை
அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.
"தடால்" என்று சத்தம்;
ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக்
கதறினான்.
"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள்.
இனி யாரையும்
அடிக்க மாட்டேன்" என்றார். 
ஒரு நிமிடத்தில்,
ஒரு கொடிய மிருகம்,
மென்மையான
மனிதனாக மாறியது.
"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான்
இனி எனக்குக் கடவுள்;
இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன் 
என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே 
வணங்கினான்.
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".*
மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.

அஞ்சல்துறையின் சிறப்பு ஆதார் முகாம்

அஞ்சல்துறையின் சிறப்பு ஆதார் முகாம்: பிப்.22 முதல் 27 வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு
Published: 12 Feb, 22 07:15 

சென்னை: இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்பேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

இந்த சேவைகளைப் பெற வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் அசல் ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து, மேலும் தகவல் அறிய அருகில் உள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?:

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?: 12 கி.மீ., தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது கண்டுபிடிப்பு துாத்துக்குடியில், 12 கி.மீ., துாரம் வரை கடல் நீர் ஊடுருவியுள்ளதே, அங்கு நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு முக்கியமான காரணம்,'' என, வ.உ.சிதம்பரம் கல்லுாரியின் நிலத்தியல் துறை உதவிப் பேராசிரியர் சே.செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்தக் கருத்தை, இவர் தெரிவித்துள்ளார். பெருநிறுவனங்கள் வெளியிடும் நீர் கழிவுகளாலேயே, துாத்துக்குடியின் நிலத்தடி நீர் மாசுபட்டது என்று முன்பு கூறப்பட்டது. பேராசிரியர் செல்வம் கூறியதாவது:கடல்நீர் அருகில் உள்ள நிலத்தில் ஊடுவுவது என்பது, கடலோரப் பகுதிகள் அனைத்திலும் காணப்படும் பிரச்னை தான். துாத்துக்குடியிலும் இதுதான் நடைபெற்றுள்ளது.

1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு நிலவியல் ஆய்வு முடிவுகள், இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. கடந்த 2010 முதல் நானே இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.துாத்துக்குடியின் நிலத்தடி நீர் உப்பு கரிக்கிறது, அதனைக் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை என்ற குறைபாடு சொல்லப்படுகிறது.

இதற்கு முதன்மையான காரணம், கடல்நீர் படிப்படியாக துாத்துக்குடி நிலத்தில் ஊடுருவுவது தான். பத்தடி தோண்டினாலேயே உப்பு நீர் தான் கிடைக்கும் வெல்லப்பட்டி, புதுார் பாண்டியாபுரம், முள்ளக்காடு, தாளமுத்து நகர், முத்தையாபுரம் போன்ற பகுதிகள், கடலுக்கு அருகே இருப்பதால், இங்கேயெல்லாம் நிலத்தடி நீர் இன்னும் உப்பாக இருக்கும். கடல் நீர் ஊடுருவல் படிப்படியாக நடந்திருக்கிறது. 1993ல் கடலில் இருந்து 1.5 கி.மீ., துாரம் வரை ஊடுருவிய கடல் நீர், 2007ல், 5 கி.மீ., வரை;- 2011ல், 6 கி.மீ., வரை; 2014ல் 8 கி.மீ., துாரத்திற்கு

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...