Showing posts with label World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!. Show all posts
Showing posts with label World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!. Show all posts

Thursday, August 31, 2023

World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!

 ஜி-20 மாநாட்டில் நிறுவப்படும் உலகின் உயரமான நடராஜர் சிலை!

அடுத்த மாதம் 7-10 ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி -20 மாநாட்டில் வரவேற்பு திடலில் வைக்க தயாரான நடராஜர் சிலை தமிழகத்தின் சுவாமி மலையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
19 டன் எடை 28 அடி உயரம் என்று உலகிலேயே உயரமான இந்த நடராஜர் சிலை தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு மற்றும் துத்தநாகம் என்று எட்டு வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்ட வெண்கல சிலையாக இருக்கிறது.
சிவபெருமான் நடராஜராக நின்று நடனம் ஆடுவதைக் குறிக்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.
நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் என்று தமிழகத்தில் ஐந்து சபைகள் இருக்கின்றன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் கனகசபை அதாவது பொற்சபை மதுரையில் ரஜதசபை அதாவது வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்று சிவபெருமான் ஐந்து இடங்களில் நாட்டிய கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்த சபைகளில் மதுரையில் உள்ள வெள்ளி சபையில் மட்டுமே சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நாட்டியம் ஆடும் கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.
இதனால் ஜி-20 மாநாட்டின் இடத்தில் நடராஜர் சிலையை வைத்து அலங்கரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக இருந்ததால், நடராஜர் சிலையை தமிழகத்தில் இருந்தே தமிழக ஸ்தபதிகளை வைத்து உருவாக்கும்படி கூறி இருந்தார்.
அதனால் தஞ்சாவூர் அருகே உள்ள சுவாமி மலையில் வைத்து, சோழர்கால கலை நயத்துடன், மறைந்த சிற்பி தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன் ஸ்ரீகாந்த் ஸ்தபதி அவர்களின் தலைமையில் சுமார் 10கோடி
ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல், இப்பொழுது உலக நாடுகளின் உயர்ந்த அமைப்பான ஜி-20 மாநாட்டிலும் தமிழர்களின்
அடையாளமான நடராஜர் சிலையை வைத்து உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை கொண்டு செல்லவிருக்கிறார் நமது நாட்டின் பிரதமர் மோடி

World's tallest statue of Nataraja to be installed at the G-20 summit!
The statue of Natarajar who is ready to be placed at the reception ground at the G-20 conference to be held in Delhi on 7-10th of next month is being taken from Swami Hills of Tamil Nadu to Delhi.
This world's tallest Nataraja statue weighing 19 tons 28 feet tall is a bronze statue made of eight types of metals called gold, silver, flame, copper, tin, mercury, iron and zinc.
One of the symbols of Tamil culture, where Lord Siva stands and dancing as Nataraja.
There are five councils in Tamil Nadu that understands Natarajar's great dance. Rathinasabai in Thiruvalangadu, Kanagasabai in Chidambaram i.e. Porsabai in Madurai i.e. Vellasabai, Thamirasabai in Tirunelveli, Chithra Sabai in Thirukutralam, Lord Shiva shows a scene in five places.
In these congregations only in the Silver Sabha in Madurai, Lord Shiva is dancing in the rangolam, instead of the usual, by lifting his left leg and lifting his right leg.
Showing up.
Since Prime Minister Narendra Modi was eager to decorate Nataraja's statue in place of G-20 summit, he had asked to create Nataraj's statue from Tamil Nadu itself.
So, at Swami hills near Thanjavur, with the art of Chola, under the leadership of Srikanth Sthapathi, son of late sculptor Devasenathipathi Stapathi, about 10 crores
Made at a cost of rupees.
Tamils brick in the new parliament building, now Tamils in the world's highest organization G-20 conference
Our country's Prime Minister Modi is going to carry the pride of Tamils around the world with his identity Natarajar statue.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...