Showing posts with label சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து. Show all posts
Showing posts with label சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து. Show all posts

Sunday, November 6, 2022

சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து

வள்ளி பிராட்டி அவர்கள் மேல் முருகன் காட்டிய அன்பு என்பது, எப்படிப்பட்டது என்றால்,  இந்திரலோகம் மீட்கப்பட்டு , இந்திரன் மீண்டும் இந்திரபதவி அடைந்த பின், ஒரு முறை முருக பெருமானை தேடி,சிருவாபுரி என்ற ஸ்தலத்திற்கு வருகின்றார். அங்கு முருக பெருமானை தரிசனம் செய்து  ,முருகா இந்திரலோகம் மீட்க பட்டாலும், அது களை இழந்து காணப்படுகிறது, முன்பு போல் ஒளி வீச வில்லை.நீ தான் அதை பழைய நிலைக்கு திருத்தி அமைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ள,முருக பெருமான் ,ஒளி கொடுக்க கூடிய சூரிய சந்திரர்களை அழைக்க வில்லை, மும்மூர்த்திகள் யாரையும் வேண்டிக்கொள்ள வில்லை. முப்பது முக்கோடி தேவர்களிலும் யாரையும் அலைக்கா த முருகன் தன் அருகில் இருக்கும் வள்ளி பிராட்டி யை பார்த்து (எங்கும் வள்ளி தெய்வயனையுடன் காட்சி தரும் முருகன், இந்த ஒரு ஸ்தலத்தில் தான் வள்ளி யோ டு மண கோலத்தில் காட்சி தரும் அற்புதமான காட்சியை காணலாம். அந்த கோவிலின் சிறப்புகளை பின்பு பார்ப்போம்) , உன் அன்பு பார்வையால் அந்த தேவ லோகத்தை பார் என்று கூற வள்ளி பிராட்டியார் முருகனை வணங்கி தேவலோகத்தில் பார்வையை செலுத்த , தேவ லோகம் முன் பை விடவும் ஒளி வீசி தெய்வமாக காட்சி அளித்தது என்று சொல்லப்பட்டுள்ளது.முருகப்பெருமான் வள்ளி பிராட்டியின் மேல் காட்டிய அன்பை , கருணையை காண முடிகிறது. நாம் அறிந்து கொள்வது முருக கடவுளின் அன்பை பெறுவதற்கு  ஜாதி மதம் தேவைல்லை, பணம், வசதி தேவை இல்லை, சாஸ்திர sambarathaayam
தேவை இல்லை. அவனை தேடி எங்கும் போக வேண்டாம்.இருந்த இடத்தில் இருந்து "முருகா" என்று ஒருமுறை கூறினால் போதும் , ஓடோடி வந்து  கருணை புரிவான்.அந்த "முருகா" நாமத்திற்கு அவ்வளவு சக்தியா,அந்த நாமத்தின் மகிமையை நாளை பேசி மகிழ்வோம்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...