Showing posts with label இறைவனை வணங்கும்போது. Show all posts
Showing posts with label இறைவனை வணங்கும்போது. Show all posts

Monday, March 28, 2022

இறைவனை வணங்கும்போது

 இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது?

இவை இரண்டு முறை மட்டுமல்லாது இன்னும் சிலர் நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணங்குவர். இவை அனைத்துமே சரியானதுதான்.
கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குவது என்பது உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை, நீ ஒருவனே எனக்குத் துணை என்று இறைவனைச் சரண் அடைவதன் வெளிப்பாடு. திரௌபதி கண்ணனைச் சரணடைந்தாளே அப்படி.
முகத்திற்கு அருகில் கைகளை குவித்து தலை குனிந்து வணங்குவது என்பது அடக்கத்தின் வெளிப்பாடு. உனக்குக் கீழ்தான் உலகமே இயங்குகிறது என்ற பொருளில் சாதாரணமாக எல்லோரும் வணங்குகின்ற முறை.
நெஞ்சிற்கு நேராக கைகளைக் குவித்து வணங்குவது என்பது இறைவா உன்னை என் நெஞ்சிற்குள்ளேயே வைத்திருக்கிறேன், எப்பொழுதும் என்னுடனேயே இருந்து என்னைக் காப்பாய் என்ற எண்ணத்தினைக் குறிக்கும்.
இவ்வாறாக அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு வணங்கும் முறையானது வேறுபடுகிறது.
May be an image of 1 person and text




Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...