Tuesday, May 30, 2023

கோடையில் உடல் வறட்சியை தடுக்கும் வெள்ளரிக்காய் சாலட்

கோடையில் உடல் வறட்சியை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 2 தக்காளி - 1 வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு கருப்பு உப்பு - தேவையான அளவு

 செய்முறை: 

வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!

நார்ச்சத்து நிறைந்த பேபி கார்ன் சூப்

பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது. பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் பேபி கார்ன் - 6 இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன் முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 5 கப் எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு

 செய்முறை:

 பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும். சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும். அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும். இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்

தேவையான பொருட்கள் 
வாழைப்பழம் - 2 பேரீச்சம் பழம் - 10 பாதாம் - 20 பிஸ்தா - சிறிதளவு முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர் சர்க்கரை - 2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) ஐஸ் கட்டிகள் குங்குமப்பூ - அலங்கரிக்க 
செய்முறை * 
தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும். * பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். * கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும். * பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

இரும்புச்சத்து நிறைந்த கம்பு உப்புமா

வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

தேவையான பொருட்கள்: 

கம்பு - ஒரு கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 6, கடுகு - அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன், உப்பு - ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து, எண்ணெய் - 6 ஸ்பூன். 

செய்முறை: * 

கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும். * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா

முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

 பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப் கோதுமை மாவு - கால் கிலோ எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை *

 முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும். * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை

தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 100 கிராம் அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி ரவை - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - 1 துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி ப.மிளகாய் - ஒன்று கொத்தும்மல்லி - சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை *

 வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும். * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி. * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

கோதுமை ரவை இருந்தா போதும்... 15 நிமிசத்துல இந்த டிபன் செய்யலாம்...

டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம். காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

 கோதுமை ரவை - கால் கிலோ அரிசி மாவு - கால் கப் சின்ன வெங்காயம் - 10 சீரகம் - அரை டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு காய்ந்த மிளகாய் - 5 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

 கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும். ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான டிபன் ரெடி.

10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மிளகு பொடிமாஸ்

சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

முட்டை - 4 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 2 சிறியது இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - 1 கைப்பிடி உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும். அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.

நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வாழைத்தண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

 வாழைத்தண்டு - 1 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப உப்பு - சுவைக்கேற்ப தாளிப்பதற்கு.. எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது

 செய்முறை: *

 வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். * ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். * வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். * பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். * பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையானவாழைத்தண்டு சூப் தயார்.


முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

 முட்டை வெள்ளை கரு - 4 வெங்காயம் - 1 பூண்டு - 3 பற்கள் ப.மிளகாய் - 1 பச்சை குடைமிளகாய் - பாதி சிவப்பு குடைமிளகாய் - பாதி காளான் - 7 எண்ணெய், உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு

 செய்முறை: * 

வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * காளான், குடை மிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும். * முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் . * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். * பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். * அடுத்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த வைத்துள்ள முட்டையை ஊற்றி கடாயை மூடவும். * பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும். * இப்போது முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட் தயார்! * உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் இதில் சேர்த்து செய்யலாம்.

சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் - ஒரு கப், தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள், பச்சை மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும். இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் டென்டெர்ஸ்

சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

 குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம் பிரெட் - 1 துண்டு இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி வால்நட் - 1/2 கப் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோளமாவு - 1/4 கப் மைதா - 1/4 கப் தண்ணீர் உப்பு - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும். * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும். * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

காய்கறி மசாலா செய்ய

தேவையான பொருட்கள் 

வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கேரட் - 1 பீன்ஸ் - 10 பட்டாணி - 1/2 கப் உருளைக்கிழங்கு - 4 பன்னீர் - 100 கிராம் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய் - தேவையான அளவு சோள மாவு கலவை செய்ய சோள மாவு - 1 மேசைக்கரண்டி மைதா - 2 மேசைக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் கார்ன் பிளேக்ஸ் செய்முறை: * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * பன்னீரை துருவிக்கொள்ளவும். * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும். * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும். * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.. * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும். * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி. * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி

 ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் 30 மே 2023  ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...