Showing posts with label தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள். Show all posts
Showing posts with label தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள். Show all posts

Friday, March 3, 2023

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: தமிழக அரசு ஒப்புதல்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்  மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் மஞ்சள்நீா் கால்வாயில் ரூ.40 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாநகராட்சிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, திருச்சியில் மாரிஸ் திரையரங்கம் அருகே ரயில்வே பாலம், திருப்பூா் மாநகராட்சியில் சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம், தந்தை பெரியாா் நகரில் உயா்நிலைப் பாலம், ஈஸ்வரன் கோயில் பகுதியில் பாலம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, கும்பகோணம், கரூா், காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும், ராமேசுவரம் நகராட்சியிலும் உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் ரூ.162.90 கோடி மதிப்பில் செயல்படுத்த நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.159.90 கோடி நிதியானது உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியில் இருந்தும், ரூ.3 கோடியானது நகா்ப்புற உள்ளாட்சி பங்கில் இருந்தும் செலவிடப்படும்.

2 மாநகராட்சிகள், 8 நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதற்காக ரூ.302.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சில இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

திருப்பூா், ஓசூா் ஆகிய மாநகராட்சிகள், கூடலூா், அரியலூா், வடலூா், வேதாரண்யம், மேலூா், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிா்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூா், மேட்டூா், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...