Showing posts with label திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.. Show all posts
Showing posts with label திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.. Show all posts

Sunday, April 24, 2022

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.

 

சிவாயநம
நமசிவாய
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை நகரில் அமைந்துள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
தொண்டை நாட்டுத்தலங்களில் 20 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 253 வது தலமாகவும் விளங்கும்
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் தலவரலாறு கூறும்
தலமாக திகழும்
மூவரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்
திருவொற்றியூர்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் வடிவுடையம்மை (வட்டப்பாறையம்மன்)
உடனுறை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் (படம்பக்கநாதர்) சுவாமி ஆலயத்தை
தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்துள்ளார்.
மேலும் அனைத்து அடியார்களும் இங்குவந்து இந்த ஈசனை தரிசனம் செய்து அவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
May be an image of 5 people, outdoors, temple and text that says 'தியாகராஜ சுவாமி திருக்கோயில் ARULMIGU THIYAGARAJASWAMY THIRUKOIL'


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...