Monday, February 7, 2022

செல்வம் தரும் சிவ பெயர்ச்சி

*(7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி*!

சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்!

சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா?

ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது

ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்

பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார 

ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே "சிவப்பெயர்ச்சி"

ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி!

இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்

இன்றைய கலியுகத்தில் கடன் வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது.

அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.

ஏழரை சனி அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே

அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும் 

சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். 

மனம் அமைதி பெறும்.கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்

நாளை பிப்ரவரி 
7 ம்தேதி 2022 (தை25)தை மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.

சிவப்பெயர்ச்சிக்கான  
விஷேச ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள " ஸ்ரீமஹாபலீஸ்வரர்" 
சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான  
விஷேச ஸ்தலம் ஆகும்.

இது மஹாபலிச்சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம் புகழ் சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.

பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.

பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது.

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம்

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம் - திருவாசகம்..!!

பாண்டி நாட்டிலிருந்த #கடம்பவனத்தில்‌ புலிகள்‌ 
மிகுதியாயிருந்தன. ஆதலின்‌ மானினம்‌ அருகி வந்தது. இறுதியில்‌ பெண்மான்‌ ஒன்று கன்றுபோட்டு, அதனை ஒரு புதரில்‌ மறைத்து வைத்துவிட்டுத்‌ தண்ணீர்‌ பருக ஒரு குளக்கரை சென்றது. அப்பொழுது ஒரு #வேட்டுவன்‌, அதனை அம்பெய்து கொன்று வீழ்த்தினான்‌. அது கீழே விழும்போது தன்‌ கன்றை நினைந்து உயிர்‌ விட்டது. அதனையறிந்த அருட்‌ கடலாகிய #ஆலவாயண்ணல்‌, அக்‌ காட்டில்‌ வேறு பெண்மான்‌ இல்லாமையால்‌ ஒரு #பெண்‌_புலியை அதற்குப்‌ பாலூட்டி. வளர்க்குமாறு அதன்‌ உள்ளத்தில்‌ கடுமை களைந்து கருணையைப்‌ பெருகச்‌ செய்தார். பெண்புலி #மான்‌_கன்றுக்கு முலைப்‌ பாலூட்டி வளர்த்தது. 

அமைவிடம்: #திருப்பரங்குன்றம்_சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில்.

திருமலை அமிர்தகலச பிரசாதம்!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தி..!

உடனே, குழந்தைப்பேறு கிடைக்கவும், பிறக்கும் குழந்தையினால் பெற்றோருக்கு சிறப்பினை உண்டாக்கும் திருமலை அமிர்தகலச பிரசாதம்!

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க.

இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தை இல்லை அப்படிங்கிற மனக்குறையோட தவிச்சிட்ட இருக்கற தம்பதிகள், இந்த அமிர்தகலசம் பிரசாதத்த வாங்கி சாப்பிட்டு, பெருமாளோட அருளால, உங்க குறைய போக்கிக்கலாம்.

அது மட்டுமில்லாம,பெருமாளோட பரிபூரண ஆசியோட பிறக்கும் அந்தக் குழந்தையால, உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் பெருமை கிடைக்கும் அப்படிங்கறதும், எத்தனை பெரிய ஆசீர்வாதம்..!

அதனால, குழந்தை இல்லாத தம்பதிங்க திருப்பதி கோயில்ல, இந்த அமிர்தகலசம் பிரசாதம் வாங்கிச்சாப்பிட்டு, உங்க குறை தீர, எல்லாம் வல்ல அந்த வேங்கடவன் அருளவேண்டும்னு, பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

அமிர்தகலசம் எனும் இந்தப் பிரசாதத்தை வாங்கறதுக்கு வார,வாரம் ஞாயித்துக்கிழமைகள்ல குழந்தை இல்லாத தம்பதிகள் மத்தியில கடும் போட்டி இருப்பதா சொல்றாரு டாக்டர் ரமண தீட்சிதர்.

சம்மோஹன கிருஷ்ணரை

#அர்த்தநாரீஸ்வரர்_போல 

ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்மில் அந்நேகம்பேர் சிவன் பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் 
வடிவம் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றியும் தெரிந்திருப்போம்.

ஆனால் அதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோஹனூரில் 
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றி அதிகம்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி,இந்த ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணரின் சிறப்புகள் என்ன?அவரை வழிபடுவதால் என்ன பலன்?
அ/மி கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றிய சிறப்புகள் என்ன? ஆகிய விரங்களை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழைபொழியும் 
கண்களோடு  அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். 

சகல சௌபாக்யங்களும்  வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும்.

இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருக்கோலம் எங்குள்ளது தெரியுமா?  

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்  
மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில்
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணன் அருள்பாலித்து வருகின்றார்.

இந்த சம்மோகன கிருஷ்ணரையும்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணரையும் தரிசிக்க மோஹனூர் செல்வோமா?

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்   

மூலவர்:கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் 
உற்சவர்:சீனிவாசர் 
அம்மன்/தாயார்:பத்மாவதி 
தல விருட்சம்:வில்வம் 
தீர்த்தம்:காவிரி ஆகமம்
பூஜை:வைகானஸம் 
பழமை:500 வருடங்களுக்குள் 
புராண பெயர்:மோகினியூர் 
ஊர்:மோகனூர் 
மாவட்டம்:நாமக்கல் 
மாநிலம்:தமிழ்நாடு 

தல சிறப்பு:காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலத்தை தரிசிப்பது தனிச்சிறப்பு. 

இத்தல இறைவன் கல்யாண
பிரசன்ன வெங்கட்ரமணர் 
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

தலபெருமை:

திருப்பதியில் ஓர் நாள்:

இத்தல சுவாமி கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் "திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உற்சவம் நடக்கிறது. 

அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். 

இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். 

ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

தன்வந்திரி சன்னதி:சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

ஒவ்வொரு திருவோணத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். 

பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

குரு, சிஷ்யை தரிசனம்:சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

எத்தனையோ கோயில்களில், என்னென்ன காரணங்களுக்காகவோ லட்சார்ச்சனை, யாகங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது விசேஷம்.

கோவில் அமைப்பு:

கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா, ருக்மணி உள்ளனர். 

ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. 

தலவிருட்சம் வில்வம். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். ஒரு செயலை துவங்குவது விநாயகரிடம், முடிவது ஆஞ்சநேயரிடம் என்பார்கள். இவ்விருவரையும் வழிபட்டு துவங்கும் வேலை, சிறப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது.

கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம். உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம், கருட சேவை சாதிப்பது எல்லாமே இங்குதான். 

அடுத்து மகா மண்டபம், நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள். வலதுபுறம் ஆண்டாளின் சிறு சன்னதி, இடதுபுறம் பாமா ருக்மிணி சமேத நவநீத கிருஷ்ணனின் சிறு சன்னதி.

மகா மண்டபத்தின் இடதுபுற விளிம்பில், லட்சுமி நரசிம்மர் மற்றும் உற்சவர்களின் தனிச் சன்னதி.

 வலதுபுற விளிம்பில் அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி. 

மகா மண்டப துவார பாலகர்களைக் கடந்து உள்ளே சென்றால், அர்த்த மண்டபம். அங்கு உற்சவர் சீனிவாசர்.

கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள். வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மூவருமே நின்ற நிலையில் காட்சி அருளிக் கொண்டிருக்கின்றனர். 

கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவருக்கு வெட்டி வேர் மாலை வெகு விசேஷம். பின்புறம் யோக நரசிம்மர். 

தெற்கு மூலையில் பத்மாவதி தாயார், கருவறையின் பின்புறம் தன்வந்தரி என தனிச் சன்னதிகள்.

தன்வந்தரி பெருமாள் சன்னதியின் சுற்றுப்பாதையின் மூன்று புறங்களிலும் தரையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளுடன் கூடிய கண்ணாடி அறை. 

உற்சவ காலங்களில் ஏகாந்த சேவை இங்குதான். பெருமாளும் கொடுத்து வைத்தவர். அதைக் காண நேரும் பக்தர்களும் கொடுத்து வைத்தவர்கள். 

முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில். 

அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள்.

பிரார்த்தனை:கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கவும் , நோய் தீரவும் இங்கு மூலவரான கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணரை வேண்டிக்கொள்கின்றனர்.   

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.    

செல்வ வளம் பெருக,சகல சௌபாக்யங்களும் வந்து சேர
கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்க,அனைத்து சம்பத்துக்களும் சேர,குபேர வாழ்வு பெற அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணனனை கீழ்க்கண்ட சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி மற்றும் கோபால சுந்தரி காயத்ரியை கூறி வேண்டிக்கொள்கின்றனர்.

சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி  (கோபால சுந்தரி)

ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!

பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.

கோபால சுந்தரி காயத்ரி:

ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்!

தல வரலாறு:இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட  புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, "கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.    

திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.    

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...