Friday, July 29, 2022

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரை கடைபிடியுங்கள்

🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
🏆கோலா, கலர்பானங்களை உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் வாழமுடியும்

நமது பாரத நாட்டின். உலகிலேயே.முதன்.முதலில் சதுரங்கம் விளையாடியது


 நமது பாரத நாட்டின். உலகிலேயே.முதன்.முதலில் சதுரங்கம் விளையாடியது சிவபெருமானும்.பார்வதியும்தான்.நடந்த.இடம்.திருப்பூவனூர்...இறைவன்நாமம் ஸ்ரீ.சதுரங்கவல்லபேஷ்வரர்.🙏

பிரம்மாவுக்கு ஒரு நாள்!

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும் பரப்பியவருமான அகத்திய மகரிஷி விரும்பினார்;

எனவே,அவர் திருக்கையிலாய மலையில் இருக்கும் நந்தி பகவானிடம் சென்று கேட்டார்;

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை கூற இயலுமா? என்று கேட்கின்றார்;

இந்த கேள்வியை கேட்டதும் நந்திபகவானுக்கு கண்ணீர் வருகின்றது;அழுகின்றார்;அழுகின்றார்; அழுதுகொண்டே இருக்கின்றார்;எவ்வளவு காலம் தெரியுமா?

2000 கோடி பிரம்மாக்களுடைய ஆயுள் காலம் வரை! மற்றும் 3000 கோடி நாராயணர்களின் ஆயுள் காலம் வரை!!!

பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள்! அப்படி 100 வருடங்கள் ஆகி விட்டால் ஒரு பிரம்ம பதவி நிறைவடைந்துவிடும்;இன்னொருவர் பிரம்மா பதவிக்கு வந்துவிடுவார்;ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தால் அது ஒரு நாராயணரின் வாழ்நாளில் ஒரு நாளுக்குச் சமம் ஆகும்;

இப்படி 2000  
 கோடி பிரம்மாக்களின் ஆயுள் காலம் வரை நந்தி பகவான் அழுகின்றார்;அது ஆனந்த கண்ணீர்!

அகத்திய மகரிஷிக்கு வருத்தமாகிவிட்டது;ஏதும் தெரியாமல் கேட்டுவிட்டோமோ? என்று மனம் வருத்தப்பட்டுவிட்டார்;

அப்புறம் தான் தெரிகின்றது;

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அதுவரை யாருமே கேட்கவில்லை;அகத்திய மகரிஷி முதன் முதலில் கேட்டதால் உண்டான பூரிப்பால் அத்தனை காலம் நந்தி பகவான் அழுதிருக்கின்றார் என்று;

குருவி மூளை கொண்ட நம்மால் இச்சம்பவத்தை ஓரளவுக்கு மேல் ஜீரணிக்க முடியுமா? ஓவர் பில்ட் அப் என்றுதான் எண்ணுவோம்;ஆனால்,நாம் இயல்பாக யாராவது ஒரு ஆன்மீக உண்மையை சொன்னால் பின்பற்றுகின்றோமா?

அதன் பிறகு,நந்திபகவான் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அகத்திய மகரிஷியிடம் சொல்ல ஆரம்பிக்கின்றார்;இன்று வரையிலும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்;அவரது உபதேசத்தை அகத்திய மகரிஷி கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;அதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் படம்!!!

பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாக இருப்பது அண்ணாமலை!

யார் ஒரே பிறவியில் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடய அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன;அதனால், அவர்களுடைய சத்குருவை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது;அதன் பிறகு,மீண்டும் இந்த பூமியில் பிறவாத வரம் அண்ணாமலையாரால் கிடைக்கின்றது;

இந்த பிறவியிலேயே அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வரவே பிறவி எடுத்திருக்கின்றோம்;நமது 7 வது வயது நிறைவடையும் வரை மட்டுமே இந்த ஆன்மீக லட்சியம் நினைவில் இருக்கின்றது;அதன் பிறகு,இதை மட்டும் மறந்துவிடுகின்றோம்;

இன்றைய கால கட்டத்தில் யாரெல்லாம் அகில இந்திய அளவில் ஆன்மீக அமைப்புகளை நடத்திவருகின்றார்களோ,அவர்கள் அனைவருமே தமது 20 அல்லது 30 வது வயதிற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்தவர்கள் தான்!

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்;வாரம் ஒரு நாள் அல்லது 15 நாட்கள் ஒருமுறை என்று அண்ணாமலையாரை கிரிவலம் வர திட்டமிடவேண்டும்;இந்த 5 ஆண்டுகள் வரை அசைவம்,மது இரண்டை மட்டும் தவிர்த்தால் போதும்;வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது;

அப்படி 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவின் தரிசனம் கிடைக்கும்;அவரது அருளால்,அடுத்த மூன்று உலகங்களிலும் அவரது ஆன்மீக வழிகாட்டுதல் கிடைக்கும்;

ஒரே ஒருமுறை "அண்ணாமலை" என்றோ "அருணாச்சலம்" என்றோ "சோணாச்சலம்" என்றோ சொன்னால் 3 கோடி முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சலேஸ்வரர் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;

கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அண்ணாமலையில் "பவுர்ணமி கிரிவலம்" பிரபலம் ஆகியிருக்கின்றது;

பவுர்ணமி அன்று மட்டும் தான் அண்ணாமலை கிரிவலம் செல்வார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;

ஒவ்வொரு தமிழ் மாதம் 1 ஆம் தேதி அன்றும் கிரிவலம் செல்வது சைவர்களின் வழக்கமாக இருக்கின்றது;

முதன் முதலில் அண்ணாமலையை கிரிவலமாக வலம் வந்தது நம் அனைவருக்கும் தாயாக இருக்கும் பார்வதி தேவி;தேய்பிறை சிவராத்திரி திதி அன்றுதான் அன்னை கிரிவலம் வந்தாள்;நமது அன்னைக்கு பக்கபலமாக வந்தது நம் அனைவருக்கும் முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷி தான் கிரிவலம் வந்தார்;

காஷ்மீர் முதல் கண்டி வரையிலும்,குஜராத் முதல் வியட்னாம் வரையிலும் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்துக்குடும்பத்திலும் திருமணம் ஆன தம்பதியர்கள் மணமான மறுநாளே குடும்பமாக வாழ மாட்டார்கள்;

மணமான ஓராண்டுக்குள் மணமகனின் பெற்றோர்+உடன் பிறந்தோரும்;மணமகளின் பெற்றோர்+உடன் பிறந்தோரும் அண்ணாமலைக்கு வருவர்;வந்து தம்பதியாக கிரிவலம் வருவார்கள்;கிரிவலம் நிறைவடைந்த பிறகு,அண்ணாமலையாரையும்,
உண்ணாமுலையையும் வழிபட்டுவிட்டு அவர்களுடைய ஊருக்கு திரும்புவர்;அதன் பிறகுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்!!! இந்த நடைமுறையை இன்றும் சில சமுதாய மக்கள் மட்டும் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகின்றார்கள்;

கணபதி லோகம், இந்திர லோகம்,எம லோகம்,பைரவ லோகம்,ஸ்ரீசக்கர லோகம், ஸ்ரீவைகுண்டம்,சத்திய லோகம்,
  கந்தர்வ லோகம்,நாக லோகம்,வாயு லோகம்,அக்நி லோகம்,முனி லோகம் என்று ஏராளமான உலகங்கள் இருக்கின்றன;இங்கே வாழ்பவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய்ய்ய்ய்ய தெரியும்;ஆனால்,அங்கே இருந்து அண்ணாமலை கிரிவலம் செல்ல அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது;

நமக்கோ நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமைகின்றது;சரியாக பயன்படுத்திக் கொள்வோம்;

விண்ணுலகங்களில் பித்ருக்கள் உலகம் என்ற ஒன்று இருக்கின்றது;அங்கே நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் பல லட்சம் ஆண்டுகள் தவம் இருந்தால்,இங்கே அவர்களுடைய பேரன்/பேத்தியாகிய நமக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று நாடிக்கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;

கிரிவலம் செல்லும் முறைகள் மட்டும் 1,00,008 விதங்கள் இருக்கின்றன;

ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் கணபதி கிரிவலம் வருகின்றார்;கண்பதியின் அருளைப் பெற ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் நாம் கிரிவலம் வரலாம்;

ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராகி அன்னை கிரிவலம் வருகின்றாள்;

ஒவ்வொரு அஷ்டமி அன்றும் பைரவர் கிரிவலம் வருகின்றார்;பைரவ சித்தர்களும் கிரிவலம் வருகின்றார்கள்;கடுமையான கஷ்டங்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு அஷ்டமி அன்றும் கிரிவலம் வர நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;

ஒவ்வொரு திருவாதிரை அன்றும் முனி கிரிவலம் வருகின்றார்;முனி கணங்கள் கிரிவலம் வருகின்றன;

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஈசனின் துணைவியும்,நம் அனைவருக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி கிரிவலம் வருகின்றாள்;

அருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறுவோம்;

கீழே தாங்கள் பார்ப்பது நந்தி பகவான்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை அகத்திய மகரிஷிக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்;

அண்ணாமலைக்கு அருகில் (விழுப்புரம், திண்டிவனம்,செங்கல்பட்டு,கிருஷ்ணகிரி,
 பாண்டிச்சேரி,கடலூர்,விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி,திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை மற்றும் பல ஊர்களில்) வாழ்ந்து வரும் சிவ பக்தர்கள் இந்த பொன்னான வாயப்பினை பயன்படுத்தி இப்பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்;

அடுத்த 5 ஆண்டுகள் எல்லாவிதமான பொழுதுபோக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய முயற்சி செய்யலாம்;

இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் அண்ணாமலையைச் சென்றடையும் வாய்ப்பு இயல்பாகவே கிட்டியிருக்கின்றது;

மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம்+நேரம் அதிகமாக தேவைப்படும்; 

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ 
ஹரி சிவனடியார் திருமடாலயம் இராமேசுவரம்

இயற்கையோடு நாம் பேசலாம்

முதலில் இதை நான் நம்பவில்லை. 
என் முக நூல் தோழி ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை இது.
இந்தப் பெண் கணவனோடு சென்னையில் வசிப்பவள்.
கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாதவள்.
வழக்கம் போல கணவன் வீட்டின் ஏச்சும் பேச்சும். குறிப்பாக மாமியாரின் குத்தலும்.
ஒருமுறை கணவனின் சொந்த ஊருக்கு கணவனோடு போய் இருக்கிறாள். மதுரை அருகே ஒரு சின்னஞ்சிறு கிராமம். அவர்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு சில மாமரங்கள். அதில் ஒரு மரம் பல வருஷ காலமாக காய்க்கவில்லை.
ஒரு நாள் மாலை. மாமியார் தன் மகனிடம், இவள் கணவனிடம் சொல்லி இருக்கிறாள்:
“ஏம்பா, அடுத்த மாசம் இந்த மரத்தை வெட்ட சொல்லி விடலாம்பா.”
“ஏம்மா ?”
“பின்னே என்னப்பா ? இது கூட சேர்ந்த மரங்கள் எல்லாம் காய்ச்சு தள்ளுது. இது மட்டும் ஒரு காயும் காய்க்கலை. அதனாலே ஆளை வரச் சொல்லி வெட்டிடலாம்னு இருக்கேன்.”
கணவன் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் இந்தப் பெண்ணுக்கு மனம் பொறுக்கவில்லை. உடனேயே அந்த மாமரத்தை தேடிப் போய் இருக்கிறாள். கண்ணீரோடு அந்த மாமரத்தை கட்டிப் பிடித்திருக்கிறாள். கண்களில் நீர் வழிய அந்தப் பெண் இப்படி சொல்லி இருக்கிறாள் : “அட மாமரமே, நான்தான் காய்க்காத மரம். பிள்ளை பெறாத மலடி. என்னைத்தான் எல்லோரும் திட்டுகிறார்கள். நீயும் ஏன் என்னைப் போல் காய்க்காமல் இப்படி நிற்கிறாய் ? என்னையாவது திட்டுகிறார்கள். உன்னை வெட்டப் போகிறார்கள். தயவு செய்து நீயாவது காய்த்து விடு. நீயும் என்னைப் போல் மலட்டுப் பட்டம் வாங்காதே...” என்று கேவி கேவி அழுதிருக்கிறாள்.
அப்புறம் இவள் கணவனோடு சென்னை புறப்பட்டு வந்து விட்டாள். ஆனால் ஒவ்வொரு நாளும் மனசுக்குள் அந்த மரத்தை வெட்டும் காட்சி தெரிய தனியாக போய் உட்கார்ந்து அழுது தீர்த்திருக்கிறாள்.
ஆனால் இதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.
அத்தனை வருட காலம் காய்க்காத அந்த மாமரம் , அதற்குப் பின் பூத்து காய்த்து , இப்போது மற்ற மாமரங்களைப் போல செழிப்பாக நிற்கிறதாம். மரத்தை வெட்ட வேண்டாம் என மாமியார் முடிவு செய்து விட்டாராம்.
முதலில் நான் இதை நம்பாவிட்டாலும் விஞ்ஞானபூர்வமாக சில விஷயங்கள் விளங்கிய பிறகு இப்போது அதை முழுமையாக நம்புகிறேன்.
ஆம். இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும். 
நம்மாழ்வார் வாழ்விலும் கூட இதைப் போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயியின் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நம்மாழ்வார். அந்த விவசாயி, "ஐயா, இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு. ஆனால் இது நாள் வரை ஒரு பழம் கூட தரல. இந்த மரத்தின் நிழலால், மற்ற பயிர்களும் வளர்வதில்லை. அதான், வெட்டிடலாம்னு இருக்கேன்" என்கிறார்.
“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே ?”என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.
“இல்லைங்கய்யா. நமக்கு இந்த மரத்தால எந்த பயனும்
இல்லை.” 
இதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார். ஓவென்று அழுகிறார். பின்பு மரத்திடம்,“உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற ?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதை பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார். 
ஆனால் இத்துடன் இது முடியவில்லை. ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா,அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.
(இது விகடனில் வெளிவந்தது )
ஆம். இயற்கை நம்மோடு இணைந்து வாழவே விரும்புகிறது.
இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்.

சிவனைத்_தவிர_வேறு_எதையும்_கேட்காத_பக்தி

#சிவனைத்_தவிர_வேறு_எதையும்_கேட்காத_பக்தி

ஒரு அரசன் தன்னுடைய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான் அவன் தன்னுடைய மக்களுக்கு தேவையானதை, அவர்கள் கேட்கும் தருணத்தில் ‘இல்லை’ என்று கூறாமல் கொடுத்து வந்தான் அதனால் அவன் மீது மக்களுக்கு அதிக அன்பு உண்டு மன்னனுக்கும் மக்களின் மீது பெரும் பாசம் இருந்தது.

ஒரு நாள் மன்னனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது எது ஒன்று வேண்டும் என்றாலும் மக்கள் என்னை சந்தித்துதான் பெற்றுச் செல்கின்றனர் அப்படி அவர்கள் என்னை சந்திந்து, அதற்கான விளக்கத்தை அளித்து அந்தப் பொருட்களை பெற்றுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே தலைநகரில் ஒரு பொருட்காட்சியை அமைத்து, அதில் எல்லா பொருட்களையும் வைத்துவிடுவது, யாருக்கு எந்த பொருள் வேண்டுமோ அதை மக்கள் இலவசமாக அவர்களின் தேவைக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தான்.

தனக்கு தோன்றிய அந்த யோசனையை தன்னுடைய அமைச்சர்களிடம் பேசி கருத்து கேட்டான் அவர்களும் மனம் மகிழ்ந்து ஒப்புக்கொண்டனர் இதை அடுத்து தலைநகரில் பிரமாண்டமான ஒரு பொருட்காட்சி மையம் உருவாக்கப்பட்டது அதில் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மன்னன் ஏற்பாடு செய்திருந்தான் அதுவும் அனைவருக்கும் போதும் என்னும் அளவுக்கு அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மக்களுக்கு இதுபற்றி முரசறைந்து சொல்லப்பட்டது பின் நல்லதொரு நாளில் அந்த பொருட்காட்சியை மன்னன் திறந்து வைத்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்றபடி எடுத்துச் சென்றனர் சிலர் பொன், சிலர் உடை, சிலர் வீட்டு உபயோகப் பொருட்கள், சிலர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான தேவைக்குரியவற்றை கொண்டு சென்றனர்.

அந்த பொருட்காட்சிக்கு ஒரு மூதாட்டியும் வந்திருந்தார் அவர் அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர எந்தப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை அங்கிருந்த அரண்மனை அதிகாரிகள், அந்த மூதாட்டியிடம் வந்து அம்மா.. உங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் ஏன் தயங்கி நிற்கிறீர்கள் மன்னனை நேரில் சந்தித்து நீங்கள் கேட்க தயங்குவீர்கள் என்பதால்தான் மன்னன் இதுபோன்ற ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார் எனவே தயக்கம் இன்றி உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர்.

அதற்கு அந்த மூதாட்டி இங்கிருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை. ஆனால் எனக்கு அரசனைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

அரண்மனை அதிகாரிகள் மூதாட்டியின் விருப்பத்தை அமைச்சர்களிடம் கூறினர் அவர்கள் வந்து மூதாட்டியிடம் பேசியும் கூட, அவர் எனக்கு எந்தப் பொருட்களும் வேண்டாம் அரசனைத்தான் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டார் இதைஅடுத்து அந்தத் தகவல் மன்னனுக்கு சொல்லப்பட்டது அவர் தன்னுடைய யானையின் மீது ஏறி அந்த இடத்திற்கு வந்தார்.

யானையின் மீது அமர்ந்தபடியே பாட்டியிடம், “தாயே.. உங்களுக்கு என்ன வேண்டும் நான் வந்து விட்டேன் வேண்டியதைக் கேளுங்கள் என்றார்.

அதற்கு அந்த மூதாட்டி, “மன்னா.. எனக்கு நீதான் வேண்டும்” என்றாள்.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. “தாயே.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அதை தெளிவாகக் கூறுங்கள்” என்றான்.

 மன்னா.. எனக்கு இந்தப் பொருட்காட்சியில் இருந்து எந்தப் பொருளும் தேவையில்லை எனக்கு நீதான் வேண்டும். நான் உனது தாய் உன்னை என் மகனாக அடைந்தால் நான் இந்த நாட்டையே அடைந்தவளாக ஆகிவிடுவேன் என்றாள்.

அதைக் கேட்ட மன்னன் அந்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று அவளை தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் அவளது கடைசி காலம் வரை அவளை எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டான்.

இந்தக் கதை நமக்கு ஒரு உண்மையை உரக்கச் சொல்கிறது இது ஒரு ஆன்மிகம் சார்ந்த கதை. ஆம்.. இங்கே அரசன் என்பவன் இறைவன் அவன் இந்த உலக மக்களுக்காக இந்த உலகத்தில் ஏராளமான பொருட்களையும் பணம் பதவி போன்றவற்றையும் படைத்து வைத்திருக்கிறான் பலரும் இறைவன் படைத்த இந்த உலகத்தையும், அதில் உள்ள பொருட்களையும் கண்டு மயங்குகின்றனர் ஆனால் வெகு சிலரே இந்த உலகத்தைப் படைத்த இறைவன் யார் என்று ஆராய்கின்றனர் அவனை அடைய வழி தேடுகின்றனர் அப்படிப்பட்ட பக்திக்கு ‘அனன்ய பக்தி’ என்று பெயர் அது இறைவனைத் தவிர வேறு எதையும் கேட்காத பக்தியாகும்.

#திருச்சிற்றம்பலம்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...