Sunday, April 17, 2022

இறைவனுக்கு**நன்றி*

*இறைவனுக்கு*
*நன்றி*
 
*பசிக்கு உணவை குப்பைத்தொட்டியில் தேடுபவனை கண்டால்.. நமக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*ஆடையின்றி நிர்வாணமாக தெருவில் திரியும் மனநலம் பாதித்தவர்களை கண்டால்,*

*நம்மை அறிவோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*யாரேனும் நோயுற்றிருக்க கண்டால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரின் இறுதி ஊர்வலத்தை கண்டால்,நம்மை உயிரோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*

*மரணமடைந்தவரால் மட்டும்தான் இறைவனுக்கு நன்றி செலுத்த முடியாது.*

*உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் இறைவனை நினைத்து அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவோம்.*

*நன்றி மறவா மனிதாக வாழ்ந்து மறைவோம்..*

*சர்வம் சிவமயம்

🌹 விசேஷ தர்மம்

🌹 விசேஷ தர்மம்! 

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் கூற, அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? 

மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், 

முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலை அந்தக் கண்ணபிரான், நமக்குத் தந்தருள்வார்!!!

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...