Showing posts with label மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!. Show all posts
Showing posts with label மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!. Show all posts

Wednesday, July 5, 2023

மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


 மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


மெக்சிகோவின் வடமேற்கில் உள்ள சோனோராவில் அதிகளவாக 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நாட்டில் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீட்ஸ்ட்ரோக், நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நேரிட்டதாக மெக்சிகோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...