Showing posts with label ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை. Show all posts
Showing posts with label ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை. Show all posts

Monday, January 27, 2025

ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை

 சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...