Monday, July 17, 2023

தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள்

 பணக்கார மாவட்டங்கள் எவை ?


தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள் 

எவை என்று கேட்டாலே நாம் அனைவரும் முதலிடத்தில் #சென்னையோ அல்லது 

#கோவையோ தான் இருக்கும் எனச்

சொல்லத் தோன்றும். 


ஆனால் தமிழகத்தின் முதல் ஐந்து பணக்கார மாவட்டங்களின் பட்டியலிலும் இந்த இரண்டு மாவட்டங்கள் இல்லை !!!


வேறு எந்தெந்த மாவட்டங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன்ன என்று பார்ப்போமா?


இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 

தமிழ்நாடு இரண்டாம் இடத்தில்

உள்ளது ! தமிழ்நாடு ஒரு வளமான மாநிலமாக இந்தியாவில் இருப்பதற்கு

தொழில்துறை, ஏற்றுமதி, விவசாயம் என அனைத்திலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதுதான் காரணம்.


ஆனால் இந்த நற்பெயர் எல்லாமே தமிழகத்தின் மாவட்டங்களை தான் சேரும். தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி, விவசாயம் என மாவட்டத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த வருமானத்தையும் ஒன்று கூட்டி அதனை அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால் சராசரி தனி நபர் வருமானம் தெரிந்துவிடும். அதில் எது மிகுதியாக இருக்கிறதே அதுவே பணக்கார மாவட்டமாகும்.


முதலிடத்தில் ஏன் சென்னை இல்லை

பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், உற்பத்தி ஆலைகளும், மேலை நாட்டு கலாச்சாரத்துடன் அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே, ஏன் சென்னை முதலிடத்தில் வரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். 


சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் இங்கு வாழ்வதால் தனி நபர் வருமானமும் குறைகிறது.


தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களில்.......


#முதலிடம் வகிப்பது #கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழுகின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான், அதே மாதிரி இந்த மாவட்ட மக்கள் கேரள அரசுப் பணிகளிலும் நிறைய பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் இந்த ஊர் மக்கள் தான். ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுடன், மீன்வளம், விவசாயம், சுற்றுலா என எல்லாவற்றிலும் கன்னியாகுமரி கலக்கி வருகிறது. கன்னியாகுமரியின் தனிநபர் வருமானம் ரூ.81,094, இது தான் தமிழகத்திலேயே தனி நபர் வருமானம் ஆகும்.


#இரண்டாம்இடத்தில்

'#டாலர்_நகரம்' என்று பிரபலமாக அறியப்படும் 

#திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ளது. இந்தியாவின் இந்த பின்னலாடை தலைநகரில் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாக இருந்த திருப்பூர் இப்போது இரண்டாவது பணக்கார மாவட்டமாக வளர்ந்துள்ளது. திருப்பூரின் தனிநபர் வருமானம் ரூ.72,479 ஆகும்.


#மூன்றாம் இடத்தில் உள்ள

#திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நம்பியே உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில் சுமார் நாற்பத்தேழு சதவீதம் பேர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது மட்டுமே திருவள்ளூரின் வாழ்வாதாரம் இல்லை, ஆவடி, அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் இருக்கும் மெட்ராஸ் ரிஃபைனரீஸ், மெட்ராஸ் ஃபெர்டிளைசர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், MRF, அசோக் லெய்லேண்ட், பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற மாவட்டங்கள் திருவள்ளூரை மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது. ரூ.70,778 திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானமாகும்.


தமிழ்நாட்டின் #நான்காவது பணக்கார மாவட்டமாக #விருதுநகர் ரூ.70,689 தனி நபர் வருமானத்தை கொண்டுள்ளது. விருதுநகர் நான்காவது இடத்தில் நம்மில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ஆயில், காபி, தானியங்கள் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்வதுடன், ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகளுடன் விருதுநகர் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.


#ஐந்தாம் இடத்தில் இருப்பது #காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நீண்ட காலமாக இந்தியாவின் புனித நகரமாக கிட்டத்தட்ட ஆயிரம் கோயில்களைக் கொண்டுள்ளது, மெதுவாக அது ஒரு சாதகமான வணிக தலமாகவும் மாறி வருகிறது. முக்கியமாக விவசாயம் மற்றும் பட்டு தொழில் துறைகள் காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மற்றொரு முக்கிய தொழில் சுற்றுலாத் துறையாக இருக்கிறது. காஞ்சிபுரத்தின் தனிநபர் வருமானம் ரூ.70,667 ஆகும்.


#ஆறாம் இடம்: கோவை - ரூ.65,781, 


#ஏழாம் இடம்: திருச்சி - ரூ.65,011, 


ரூ 63,467 தனி நபர் வருமானம்

உள்ள தூத்துக்குடி #எட்டாம் இடம்பெறுகிறது


ஜவுளி நகராம் #ஈரோடு (ரூ.61,631)

#ஒன்பதாம் இடத்தைப் பிடிக்கிறது 


கைத்தறி நகராம் எங்கள் கரூர் (ரூ.61,181) 

பத்தாம்_இடத்தில் பத்திரமாக இருக்கிறது.


*நாமக்கல் (ரூ.58,133) பதினொன்றாம்

இடத்தில் பக்குவமாக இருக்கிறது.


தலைநகர்_சென்னை - ரூ.57,706 தனிநபர் வருமானத்துடன் 12 ஆம் இடத்தில்

தடுமாறிக்கொண்டிருக்கிறது. 


பாவம் பிற மாவட்டங்கள் முன்னும்

பின்னும் அல்லாடிக்கொண்டுள்ளன.


மாவட்டங்கள் வளமாக இருக்கட்டும்,

ஆனால், அனைத்து மக்களும் சமமான

வருமானத்துடன் வளமாக வாழ்கிறார்களா

என்பது பெரிய கேள்விக்குறியாகவே

இருக்கிறது !!!???

KiteSurfing Courses From Beginner to Advanced-Aqua out pack

From Beginner to Advanced

Aqua Outback is the perfect venue to progress your kiteboarding skills to the next level.

Tuticorin is one of India's best situated spots for wind based water sports
 Consistent Strong winds & shallow, flat blue waters of the lagoon.

Top Quality kite gear from North, Ozone, Cabrinha, f one, duotone   & Mystic.

The Team are well experienced IKO certified instructors, including National Championship Winners.
India's only IKO affiliated school

Modern Teaching Methodologies using Helmets, flotation impact vest. Photo and Go-Pro services.

Safety is a Priority, with well trained support staff & rescue boats on standby.

Individual or Small Group Kite Courses and Lessons.

Special Discounted Room Rates available with Kite Surf courses

 Book this season

Use promo code AQUA10 AND GET DISCOUNTS ON YOUR KITESURFING STAY
     

Warm Regards,
Team Aqua Outback
Veppalodai
Thoothukudi
Tamilnadu
India
+91 96007 88789
 info@aquaoutback.com


சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி..



*சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி..*

*அம்மன் கோவில்களில் கொண்டாட்டம்.. என்னென்ன விஷேசங்கள் :-*

*மிகவும் சக்தி வாய்ந்த ஆடி மாத சிறப்புகளை இரத்தின சுருக்கத்தில் இதோ உங்களுக்காக...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



ஆடி மாதம் தமிழ் மாதங்களில் நான்காவது மாதம்.

சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். 

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் என்னென்ன சிறப்பான திருவிழாக்கள் எந்த நாளில் கொண்டாடப்பட உள்ளது என்று பார்க்கலாம்...

💜💙🩵🩷❤️🧡💛🤍🩶🤎💜

*ஆடி புராண கதை:-*

ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்...

சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். 

தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார்...

அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

🌳🌳🌳🌴🌴🪴🌴🌴🌳🌳🌳

*வேப்பமரம்:-*

மேலும்... அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. 
எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார். அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும்...

அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்...

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது.!

நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை....

🍎🍏🍊🍋🥥🍍🥭🍇🫐🍓🍑

*ஆடி மாத பிறப்பு:-*

ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. உயிர்களைக் காக்கும் சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிக் கொள்கிறார். 

ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். 

ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை உள்ளது.!

பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். 

ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்...

எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்...

🌐🌀💠❇️⚜️🔱⚜️❇️💠🌀🌐

*ஆடி பண்டிகை:-*

 தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது.

அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.!

மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்...

ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔

*திருமண வரம்:-*

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். 

ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். 

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். 

அதே போன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். 

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.

🌕🌖🌗🌑🌑🌑🌓🌔🌕

*ஆடி அமாவாசை: -*

ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்ந வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனுடன் தொடர்பு ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும். 

அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆடி 1 ஜூலை 17, 
ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆடி 30ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த 2023 ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது.

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*ஆடிப்பூரம்:-*

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்...

*இந்த ஆண்டு ஆடிப்பூரம்:-*

ஜூலை 22 ஆம் நாள் ஆடி 06ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

*ஆடி பதினெட்டாம் பெருக்கு:-*

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். 

காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகஸ்ட் 3 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

🏮🏮🏮🏮📿📿📿🏮🏮🏮🏮

*ஆடி கிருத்திகை:-*

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. 

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். 

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். 

இந்த மாதம் ஆடிக்கிருத்திகை 
ஆடி 24, ஆகஸ்ட் 09ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

🐘🐘🐄🐄🦚🦜🦚🐄🐄🐘🐘

*ஆடி தபசு:-*

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இன்றைக்கும் பாரம்பரியமாக இந்த விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 

ஆடி 16 ஆகஸ்ட் 01ஆம் தேதி பௌர்ணமி பூஜை கொண்டாடப்படுகிறது.

🌐🌀💠✳️🔆🔱🔆✳️💠🌀🌐

*கடைசி ஆடி:-*

 ஆடி மாதம் முதல்நாள் எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆடி மாத கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை. 
இந்த ஆண்டு ஆடி 32 நாளாகும். ஆகஸ்ட் 17ஆம் நாள் கடைசி ஆடி கொண்டாடப்படுகிறது.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    

*ஆடி மாதம் முன்னிட்டு...*
*ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் உருகி வழிபாடுகள் செய்வோம்...!!!*

🍎🍏🍊🍋🥥🍍🥭🫐🍇🍓🍑

*வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.!*

*ஓம் சக்தி பராசக்தி*
*ஓம் சக்தி ஆதிபராசக்தி*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...