Saturday, December 10, 2022

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர்

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர் வந்தார்.அவர் ஆயிரம் பொற்காசுகளை ராமகிருஷ்ணரிடம் கொடுத்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாக கேட்டார்.

 இது எனக்குத் தேவையில்லை. ஆனாலும் உன் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அதனால் வாங்கிக் கொள்கிறேன் என்றார் ராமகிருஷ்ணர்.

 பின்னர் இதோ பார் இது எல்லாம் என்னுடையது தானே என்றார்.

 ஆமாம் எல்லாம் உங்களுடையது தான் என்றான் வந்தவன்.

சரி இப்போது நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றார்.

 என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்றான்.

 இந்த நாணயங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் கங்கை நதியில் எறிந்து விட்டு வா என்று சொன்னார்.

 இவனுக்கு அதிர்ச்சி என்ன செய்வது இனிமேல் அது முடியாது என்றும் சொல்ல முடியாது. நாணயங்களை எல்லாம் அவருக்கே கொடுத்தாகிவிட்டது. பேசாமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனான் . அவன் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் என்ன ஆயிற்று இவனுக்கு காசுகளோடு கங்கையில் குதித்து விட்டானா? போகும் போதே ஒரு மாதிரியாகத்தான் போனான். போய் என்ன நடந்தது என்று பார்த்து விட்டு வா என்று அங்கிருந்த ஒருவரை அனுப்பினார்.

 அவர் போனார். பார்த்தார். திரும்பி வந்து விபரத்தைச் சொன்னார். அவன் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நாணயமாக எண்ணி வீசிக் கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவனை தடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

இதைக் கேட்டதும் ராமகிருஷ்ணரை புறப்பட்டு அங்கே போனார். ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் நானும் உன்னை அந்த நாணயங்களை கங்கையில் வீசி எறியச் சொன்னேனே . நீ ஏன் எண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

 அவனோ பழக்கம்தான் காரணம். நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சேமித்து வைத்தேன். இன்றைக்கு என்னிடம் நிறைய இருக்கிறது .உங்களுக்கு ஆயிரம் நாணயங்களை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று சொன்னான்.

 இப்போது ராமகிருஷ்ணன் சொன்னார். ஒரே நேரத்திலே உன்னிடம் இருக்கின்ற அனைத்து நாணயங்களையும் சம்பாதித்திருக்கிறாய் என்றால் நீ எண்ணுவது பொருத்தமாக இருக்கும்.

எல்லாத்தையும் இழக்கும்போது எண்ணிக்கொண்டு இழப்பது என்பது சரியான மூடத்தனம் ஒரே தடவையாக எல்லாத்தையும் தூக்கி எறிந்து விடு என்று சொன்னார்.

 இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு கொடுக்க விரும்பினால் அல்லது கொடுத்தால் அதை மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு அது என்னுடையது அல்ல என்கிற எண்ணம் நம் மனதில் பதிய வேண்டும். கொடுத்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த நாணயத்தை எண்ணி எண்ணி ஒவ்வொன்றாக ஆற்றில் போடுபவன் கதிதான் நமக்கும்.


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...