Showing posts with label Durgai Amman God praying Notes. Show all posts
Showing posts with label Durgai Amman God praying Notes. Show all posts

Sunday, September 19, 2021

Durgai Amman God praying Notes

#துர்க்கை_அம்மன்
#20_வழிபாட்டு_குறிப்புகள்

1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.

5. கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

6. மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.

8. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.

9. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

10. ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''.

11. ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

12. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

13. தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

14. தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

15. ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

16. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

17. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.

18. சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

19. துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.

20. துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.

ஓம் ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி தாயே 
போற்றி போற்றி 🙏

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...