Showing posts with label கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?. Show all posts
Showing posts with label கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?. Show all posts

Friday, March 3, 2023

கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

 


கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

சித்த மருத்துவத்தில் படுக்கைக்கும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைப் பாயில் படுக்கும்போதும் நமக்கு ஒருவித நன்மை கிடைக்கும். படுத்து ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே கயிற்றுக்கட்டில். தென்னை நார், பனை நாரால் திரிக்கப்பட்ட கயிற்றால் இது பின்னப்படுவதால், இதில் படுத்தால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். உடற்சூடு தணியும்.

சித்த மருத்துவ வகைப்பாட்டின்படி 4,448 நோய்கள் உள்ளன. அதில் 4,000 நோய்கள், பித்தம் அதாவது உடற்சூட்டால் உண்டாவது மூலநோய் முதல் சர்க்கரைநோய் வரை முதன்மைக் காரணமாக பித்தம்தான் இருக்கிறது. முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நார்களால், மரத்தால் ஆன நாற்காலிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமே உடலில் சூடு தங்கிவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால் உடலை, எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியக்களால் நமக்கு நன்மை கிடைக்கும்.

இலவம் பஞ்சைத் தவிர மற்ற வகைப் பஞ்சு மெத்தைகளில் படுப்பது நல்லதல்ல. இப்போது கிடைக்கும் ஸ்பிரிங் மெத்தைகளில் படுத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும். கயிற்றுக் கட்டிலில் படுத்தால், அது நம் உடலுக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும். ஆனால் ஸ்பிரிங் மெத்தைகளில், அதற்கு ஏற்றவாறு நாம் உடலை வளைந்து கொடுக்க வேண்டும். தண்டுவடப் பிரச்னைகள், சூடு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்கு மெத்தைகள்தாம் முக்கியக் காரணம்"

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...