Showing posts with label கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?. Show all posts
Showing posts with label கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?. Show all posts

Friday, April 22, 2022

கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?

 கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?

கண்ணாடி எதற்கு? இது என்ன கேள்வி கண் நன்றாக தெரிவதற்கு என்று பதில் வரும். சரி இவ்வளவு நாள் நன்றாக தெரிந்த கண் என்ன ஆனது?
கண் பார்வை சரியாக இல்லை என்பது விளைவா? மூலமா? பிரச்சினையின் வேர் பகுதி எது? உடலில் உள்ள உள்உறுப்புகளில் கழிவுதேக்கம் , இயக்க சக்தி குறைபாடு தான் கண்பார்வை பிரச்சினைக்கு மூலம் குறிப்பாக கல்லீரல் ,பித்தப்பை சரியாக இயங்கினால் கண்பார்வை நன்றாக தெரியும் என்பதை அறிந்து சிகிச்சை அளித்தால் பிரச்சினை தீருமா?
இல்லை கண்ணில் தான் பிரச்சினை என்ற கோணத்தில் சிகிச்சை அளித்தால் பிரச்சினை தீருமா?
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஆணிவேரை சரிசெய்தால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று உலகில் ஏதேனும் உண்டா?
கண்ணாடியின் பவர் கூட கூட கண்ணாடியை மாற்றும் போது கண்ணின் பவர் குறைந்து கொண்டே வருகிறது. நன்றாக கவனித்து பார்த்தால் நீங்கள் முதன் முதலில் கண்ணாடி அணியும் முன்பு தெரிந்த கொஞ்சம் பார்வை கூட கண்ணாடி அணிந்து பழகிய பிறகு தெரியாமல் போயிருக்கும் ஏனென்றால் உடலிற்கு செயற்கையாக கண்ணாடி அணிவதன் மூலம் கண் தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொள்கிறது. அதனால் தான் கண்ணாடி அணிபவர்கள் அவர்களின் கண்ணாடியை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் கண்ணாடியின் பவர் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும்.
கண்ணாடியின் பவரே மாறும் போது கண்ணின் பவர் மாறி ஏன் கண் நன்றாக தெரியாது?

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...