Monday, July 31, 2023

இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள்

இன்று பிரதோஷம் !எப்போது பிரதோஷம் என்றாலும் சிவபுராணம் அவசியம் அனைவரும் ஓத வேண்டும் !பிரதோஷ வேளையில் இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள் அன்று அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம் இந்த ஒரு பாடலுக்கு சிவபெருமான் மகிழ்ந்து நம் அடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை அருளி செய்வார் !முக்தி அருள்வார் !
சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

 
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபெருமானின் தந்தை யார்

சிவபெருமானின் தந்தை யார்? 
மகாதேவன் பிறக்காதவர் . அவர் நித்தியமானவர். அவருக்கு பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. அவர்தான் அனந்த். யாரும் அவருடையதந்தையும் அல்ல, அவருடைய தாயும் அல்ல. அவர் அனைவருக்கும் தந்தை ஆனால் யாரும் அவருக்கு தந்தை இல்லை.
சிவபெருமானின் தாய் யார்?
சிவன் சுயம்பு (அவன் தன்னை உருவாக்கினான்).

சிவனுக்கு தாய் யார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சிவனுக்கு அம்மா இருந்திருந்தால்

சிவனின் கழுத்தில் பாம்பை அணிவதை அவள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள், அதற்குப் பதிலாக சிவன் அணிந்திருக்கும் புலித்தோலை விட விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆடைகளை சிவனுக்கு அணிவிப்பாள்!
சமுத்திர மந்தனிலிருந்து கசிந்த விஷத்தை சிவபெருமான் குடிக்க ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
அழகிய சிவனின் உடலில் சாம்பலைப் பூச அனுமதிப்பதை விட, அவள் சந்தனப் பொடியைப் பூசியிருப்பாள்!
சிவனை ருத்ர_க்ஷேத்திரத்தில் (புதைகுழியில்) உறங்க விடாமல், தினமும் அவருக்கு தாலாட்டுப் பாடி, அவரை தொட்டிலில் தூங்கச் செய்திருப்பார்.
அகதௌ_பிதரவ் வந்தே பார்வதி பரமேஸ்வரம்

பிரபஞ்சத்தின் தந்தையும் தாயுமான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நான் வணங்குகிறேன்.

பிறந்தவருக்கு அப்பா அல்லது அம்மா இருப்பார்கள், இல்லையா?

ஆனால் சிவன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்காததால் பிறக்காதவர், எனவே அவருக்கு தந்தை அல்லது தாய் இல்லை.

சிவன் சுயம்புவாக இருப்பதால் (அவர் தன்னை உருவாக்கினார்) மற்றும் நினைவு வடிவில் பழங்காலத்திலிருந்தே (ஆதி, அனந்த்) இருக்கிறார். ஆக, சிவன் எதுவும் இல்லாதபோதும் இருப்பார், எல்லாம் இல்லாமல் போனாலும் கூட.

10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில்



சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.🍂 *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு 🍂.சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம் பொறுமையாக படித்து சிவத்தின் பெருமை பற்றி தெரிந்து கொள்வோம் 

சிவார்ப்பணம்

சிவனின்றி அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகளாவிய அமைப்பு.

🍂 சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்
*🍂 " ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப..." என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

* 🍂 மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன்

நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

* 🍂தென்னக சிவாலயங்களில் இருப்பவை, ஓங்கோல் ரக மாடுகளின் தோற்றமுடைய சிற்பங்களே. கவர்ச்சியும் மிடுக்கும் மிக்க இந்த ஓங்கோல் ரக மாடுகள் ஆந்திர மாநிலத்தின் பெருமைக்குரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

*🍂சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.

* 🍂நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

*🍂 சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

*🍂 நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

* 🍂மராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோயிலில்தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது. நாட்டிலேயே இங்குள்ள சிவனுக்குத்தான் நந்தி தேவர் இல்லை.

* 🍂தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்.

* 🍂சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமாந்தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் வணங்க வேண்டும்.

* 🍂பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

*🍂 பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

* 🍂பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

* 🍂சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால்தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...