Showing posts with label மனக்கவலை. Show all posts
Showing posts with label மனக்கவலை. Show all posts

Friday, August 5, 2022

மனக்கவலை

*ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*
     *அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
     *மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*
     *பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.*
     *விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.*
     *கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*
     *தன் கூட்டத்தில் ஏதாவது உதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டது !!!*
     *ஆனாலும் எந்த குரங்கும் அந்த குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

     *"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு"*
     *"இது கொத்துனா உடனே மரணந்தான்"
     "குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்"*
     *இவன் தப்பிக்கவே முடியாது"*
     —> *என்றெல்லாம் மற்றகுரங்குகள், குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*
     *தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையில் அந்த குட்டிக் கரங்கிற்கு வேதனை சூழ்ந்துகொன்டது !!!*
     *எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பைப் பார்க்கப் பார்க்க பயம்தான் அதிகரித்தது !!!*
     *மரணபயம் குரங்கின் முகத்துக்கு முன்னால் விசுவரூபமாக காட்சியளித்தது !!!*

     *"ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே" !!!*
     *குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது !!!*
     *ஆனாலும் எந்த பயனும் நிகழவில்லை !!!*

     *நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.*
     *உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*
     *கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*
     *அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*
     *குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.*
     *குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில்,*
     *தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*
     *அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?*
     *அதைக் கீழே போடு" என்றார்.*
     *உடனே அந்த குட்டிக் குரங்கு, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.*
     *அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.*
     *அதைக் கீழே போட்டுவிடு".*
     *அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*
     *அட !!! நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது.*
     *அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.*
     *"இனிமேலாவது, இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.*

     *ஆம் !!! சகோதர சகோதரிகளே !!! கிட்டத்தட்ட நாம் அனைவருமே, "மனக்கவலை" என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ... விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்கிறோம்.*
     *வெளி வேஷத்திற்கு, மகிழ்ச்சியாக இருப்பது போல், சிரித்தபடி காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கதரிக் கொண்டிருக்கும் !!!*
     *ஆம் !!! நண்பர்களே !!! நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் !!! அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லையை கொடுக்கிறதோ அவற்றை மறக்க முயற்சி செய்யுங்கள் !!!*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ, அவற்றை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் !!!*
     *கவலைகள் தானாக விளங்குவதையும் மகிழ்ச்சிகள் தானாக நெருங்குவதை உணர்வீர்கள் !!!*

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...