Thursday, April 21, 2022

வாழைகிழங்கு_குடிநீரை_பயன்படுத்தும்_முறை

#வாழைகிழங்கு_குடிநீரை_பயன்படுத்தும்_முறை"

உயிர் ஆற்றலை அதிகரிக்கும்
உன்னத குடிநீர் "#வாழைக்கிழங்கு_குடிநீர்"
குலை விட்டு வெட்டிய நாட்டு வாழை மரத்தின் கிழங்கு பகுதியை வீணாக்காமல் தரையிலிருந்து அரை அடிக்கு மேல் சமமாக அறுத்து சுத்தம் செய்து அரை அடி ஆழம்வரை தண்டுப் பகுதியை குடைந்து எடுத்துவிட்டு பத்திரமாக மூடி வைத்தால் மறுநாள் காலையிலிருந்து ஊறிவரும் வாழை கிழங்கு குடிநீரை ஊறஊற எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். மீண்டும் மாலைப் பொழுதில் குடைந்த பகுதியை நீக்கி சமமாக அறுத்துவிட்டு கிழங்கின் தோல் பகுதியில் ஒரு அங்குலம் விட்டு மீண்டும் குடைந்து எடுத்துவிடவும். மீண்டும், மீண்டும் ஊற்றெடுக்கும் குடிநீரை சேமித்து முன்பு பத்திரப்படுத்திய தண்ணீருடன் சேர்த்து கை பொறுக்கும் அளவிற்கு இளம் தீயில் சூடேற்றி ஆற வைத்து பத்திரப்படுத்தினால் குறைந்தது ஆறு மாதங்கள் கெடாமல் பயன்படுத்தி வரலாம். மேலும் மீதமான குடிநீரை வண்டல் நீங்க இறுக வடித்து மீண்டும் இளம் தீயில் சூடேற்றி பத்திரப்படுத்தி வர மீண்டும் ஆறு மாதங்கள் சிறப்பாக பயன்படுத்தி வரலாம் என்பதை நினைவில் கொள்க.
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் 50 மில்லி வாழைக்கிழங்கு குடிநீரில் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து ஊறவைத்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர சிறுநீரகக் கற்கள் உடைந்து வெளியேறிவிடும். உடன் 4, 5 மிளகுடன் ஒரு ரணகள்ளி இலையை சேர்த்து நன்றாக மென்று தின்று வருவது கூடுதல் சிறப்பு. அதேபோல வாழைக்கிழங்கு சாறுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பருகலாம். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாழைக்கிழங்கு உடலில் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. உடல் எடையை குறைக்கிறது. வயிற்றுக் கழிச்சலையும், சீதபேதியையும் தடுத்து நிறுத்துகிறது. குடல் புண்களை விரைவில் ஆற்றும் தன்மையும் வாழைக்கிழங்கு சாற்றுக்கு உண்டு. எலும்புருக்கி நோயை குணமடையச் செய்கிறது. சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும். அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள சாறைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக் கட்டுவதால் விரைவில் வீக்கமும், வலியும் குறையும். வாழைக்கிழங்கு உணவில் எடுத்துகொள்ளும்போது சருமம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், உடல் பருமன் உள்ளவர்களும் வாரத்தில் மூன்று, நான்கு நாட்களுக்கு வாழைக்கிழங்கினை குடிநீராகவோ, உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே, அனைவரும் துணை உணவாக எடுத்து கொள்வது நலம்.

#வாழைகிழங்கு_குடிநீரின்_நன்மைகள்:
1. சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது.
2. சிறுநீரக செயல்பாடுகளை சீராக்குகிறது.
3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.
4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
5. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
6. முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கிறது.
7. வயிற்றை சுத்தப்படுத்துகிறது.
8. வாயு பிரச்சினைகளை குறைக்கிறது.
9. வயிற்றுக்கழிவுகளை அகற்றுகிறது.
10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
11. வயிற்று புண்ணை குணப்படுத்துகிறது.
12. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
13. சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்
 Interesting read....short story....படித்ததில் பிடித்தது......

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்

நாம் கறிவேப்பிலையை சர்வசாதாரணமாக சாப்பாட்டிலிருந்து எடுத்து தனியே வைத்துவிடுகிறோம். 

ஆனால் இந்த கறிவேப்பிலை தான் ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தனித்தனியாக திருமலையிலும், திருச்சானூரிலும் பிரித்து வைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?

ஆகாச ராஜன் தன் மகளான பத்மாவதி தாயாரை ஏழுமலையானுக்கு திருமணம் செய்து கொடுத்தான். இந்த திருமண நிகழ்ச்சி சித்தூர் மாவட்டம் நாராயணவனத்தில் முக்கோடி தேவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

பின்னர் திருமாலும் பத்மாவதி தாயாரும் திருமலை நோக்கிச்சென்றனர். அங்கு ஸ்ரீனிவாசமங்காபுரம் என்னும் ஊரில் கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சிறிது காலம் தங்கினார்.

இந்த நிலையில் பத்மாவதி தாயார் தனது தாய் வீட்டு சீதனத்தில் உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பெருமாளுக்கு கொடுத்து உள்ளதாகவும், ஏதேனும் குறைகள் இருந்தால் கூறும்படியாகவும் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமால் கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களும் சீதனமாக வந்திருப்பதாகக் கூறினார்.

இதனால் பத்மாவதி தனது தாய் வீட்டிற்கு சென்று கறிவேப்பிலை எடுத்து வருவதாக திருமாலிடம் தெரிவித்தார். 

அதற்கு திருமால் சூரிய உதயத்திற்கு முன் திரும்பி வருமாறும் இல்லையேல் தான் தனியாக திருமலை சென்று விடுவதாகவும் கூறினார்.

தாய் வீட்டிற்குச் சென்ற பத்மாவதித்தாயார் கருவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் தொடங்கிவிட்டது.

சூரிய உதயத்தைக் கண்ட பத்மாவதி தாயார் திருச்சானூர் அருகே தனியே நின்று விட்டார். பத்மாவதி சூரிய உதயத்திற்குள் வராததால் ஸ்ரீனிவாசனும் தன்னந்தனியே திருமலைக்குச் சென்று தங்கி விட்டார். 

இதன் காரணமாக இன்றுவரை ஏழுமலையானின் நைவேத்தியத்தில் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை...

படித்ததில் பிடித்தது......

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...