Monday, January 31, 2022

Terminalia chebula-kadukkai-கடுக்காய்

 கடுக்காய் கல்பம்


கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும். 
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம். 


கடுக்காய் லேகியம்
கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும். முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். 

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும். 

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.


English,

1,

Half a kilo (yellow) mustard, half a liter of cow's milk is required for mustard fermentation. Put the mustard in the milk and bake in the oven for a quarter of an hour. When it cools down, remove and let the mustard dry in the sun. After drying for three days, grind it in a mixer with the seeds and place in a glass bottle. Mustard seed is poisonous. However, by distilling it with milk, the toxin is removed and it becomes fermented.Take a teaspoon of this mustard paste and mix it with hot water and drink it after dinner. Unlike other kalpas, only mustard kalpas can be eaten for many years.

2,

You may have heard of mustard legume. There are some who say this as a joke. In fact, eating mustard legumes will make even gray hair grow thicker. Histories say that the buildings built in the past were built with mustard to be sure. Mustard is mentioned in paranormal medical texts about four thousand years ago. This should be used after removing the seed.There are many types of mustard. Pinch mustard in it will cure constipation. Loosen the stool; Aromatizing and polishing the body. Red sorghum can cure tuberculosis (TB)and beautify the lean body. Varicose veins repel various diseases; Increases sperm count.Take five grams of mustard powder and mix it with hot water and drink it before going to bed at night. Eating a zone (48 days) of ginger, zucchini and mustard eliminates digestive disorders; Constipation is cured. Add a little anise (fennel) to the mustard powder, add water to a clay pot and distill well. If you mix pure one with it and drink it twice a day, you will lose weight. Grind the required amount of ginger, chilli, tamarind, black gram with three mustard skins in ghee, add salt and wash. If it is mashed and eaten with asparagus, the digestive power will increase; Constipation recedes;Gain physical strength.Mustard, which cures various diseases like this, will cure physical ailments; Removes male cell defects and gives a youthful appearance.


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...