Showing posts with label கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:. Show all posts
Showing posts with label கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:. Show all posts

Friday, April 22, 2022

கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

 கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

முருங்கை மரத்தை பாருங்கள். முருங்கை மரம் என்ன செய்தது அமைதியாக தான் இருந்தது. ஆனால் அதில் கம்பளி பூச்சிகள் ஏறி அந்த முருங்கை இலைகளையும் அந்த முருங்கை மரத்தையும் அழித்து விடுகிறது அல்லவா.
இதுவே நீங்கள் ரோஜா செடியை பாருங்கள் ரோஜா செடி ஒரு அன்பான நறுமண மணத்தை வெளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் உட்காரக்கூடிய பூச்சி இனத்தை பாருங்கள். ரோஜா செடி இனம் அவ்வளவு எளிதாக அழிந்து விடுவதில்லை.
இதுபோல நீங்கள் நல்ல குணம் கொண்ட மனிதர்களாக திகழ்ந்தாலும் கூட நீங்கள் ஒரு சில நேரத்தில் கோபப்பட்டு சண்டையிடும் பொழுதும், பொருந்தாத வார்த்தைகளை கூறி பேசிக்கொள்ளும் பொழுதும், உங்களது எதிரே இருக்கக்கூடிய நபரின் கோபம் சார்ந்த உணர்ச்சியை நீங்கள் சுவாசித்து அவரது மூச்சுக்காற்றுகுள் சிக்கிக்கொண்டு அந்த உணர்வுகளை சிறிது சிறிதாக உள்வாங்கி உள்வாங்கி உங்களுக்குள் கலக்கப்படுகிறது.
இது உங்களது இரத்தத்தில் கலந்து உங்களது உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் கலக்கிறது. இந்த அணுக்கள் விஷமாக மாறுகிறது. பிறகு நீங்கள் சண்டையிட்ட அந்த நபரை போன்ற கோபம் சார்ந்த மனிதனாக மாறி கொண்டு வருவீர்கள். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் கலக்கப்படுகிறது. இது உங்களுடைய நல்ல குணத்தை சிறிது சிறிதாக நாளடைவில் சிதைத்து விடுகிறது. இந்த கோபம், இன்னும் பெரிதாக வளர்ந்து உங்களுடைய மற்ற நல்ல நல்ல குணங்களை எல்லாம் சிதைத்து விடுகிறது.
இந்த எதிர்மறை உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இதுபோன்ற நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் எதிரே இருப்பவர் தவறு செய்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்.
அவர் நல்ல குணத்தை பெற வேண்டும்.
அவர் நல்ல உணர்வை பெற வேண்டும்.
அவர்கள் இறைவனின் ஆசியை பெறவேண்டும்.
அவரது உடலில் இருக்கக்கூடிய வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்க வேண்டும் இறைவா என்று உங்களது மனதில் ஏங்கி உணர்ந்து கூறிவிட்டு நீங்கள் கடந்து செல்லுங்கள்.
முருங்கை மரத்தின் உணர்வுகளின் தன்மைக்கு ஏற்ப தான் கம்பளி பூச்சிகள் வருகிறது. ஒரு ரோஜா செடியின் குணத்தின் தன்மைக்கேற்ப தான் அதற்கான பூச்சியினங்கள் வருகிறது. நீங்கள் எப்படி உங்களது குணத்தின் தன்மையை மாற்றுகிறீர்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு பொருந்தாத நபர்கள் விலகிவிடுவார்கள். பொருந்தக்கூடிய நபர்கள் உங்களிடம் கலந்து விடுவார்கள்.
உணர்வுகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு உயிரினங்களும் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரினங்களும் அழிக்கவும் படுகின்றன.
இப்படிப்பட்ட உணர்வுகளுக்குள் சிக்க கூடாது

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...