Showing posts with label அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:. Show all posts
Showing posts with label அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:. Show all posts

Saturday, March 12, 2022

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

விராட பருவத்தில் நபும்ஸகனாக இருந்த அர்ஜுனருடன் உத்திரன் கவுரவ சேனையை எதிர்க்ககிளம்பி அவர்களின் பலம் கண்டு திகைத்து நிற்கையில் பேடியாக இருந்த அர்ஜுனர் உத்திரனை தேற்றி வன்னி மரத்தில் தங்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க சொன்னர்... அந்த ஆயுதங்களை எடுத்து பார்த்த உத்திரன் பயத்தினால் நடுங்க, அதுகண்ட அர்ஜுனர் தாங்கள் யார் என்பதை அவனுக்கு கூறினார். ஆனால் , உத்திரன் அர்ஜுனருக்கு மஹேந்திரரால் 10 பெயர்கள் உருவாயின என்றும் அதை சொன்னால் தான் நீங்கள் அர்ஜுனர் என்பதை நம்புவதாக கூற.... அர்ஜுனரும் தன்னுடைய 10 பெயரையும் அதன் காரணத்தையும் விளக்கி கூறினார்....

 அதன் சுருக்கம்...

1) எல்லா தேசங்களையும் ஜெயித்து எல்லாப்பக்கங்களிலிருந்தும் தனத்தை கொள்ளையடித்து கொண்டு வந்து அந்த தனத்தின் நடுவே நின்றதனால் தனஞ்செயன்.🦋🦋🦋

2) யுத்தத்தில் மதங்கொண்டவர்களை யுத்தத்தில் தான் வெல்லாமல் திரும்பாத காரணத்தால் விஜயன்.🦜🦜🦜

3) பகைவர்களுடன் போர்புரிகின்ற தேரில் வெள்ளைக்குதிரைகள் கட்டப்பட்டிருப்பதால் ஸ்வேதவாகனன்.🦢🦢🦢

4) யுத்ததில் மத்தியில் யாரலும் உடைக்கமுடியாததும் அருமையானதுமான சூர்யனுக்கும் அக்னிக்கும் ஒப்பானதுமான தேவேந்திரரால் கொடுக்கப்பட்ட கிரீடத்தை தரித்ததால் கிரீடி.🦌🦌🦌

5) போர்புரிகின்ற யான் ஒருகாலும் அருவருக்கதக்க செய்கையை செய்கின்றதில்லை ஆதலால் தேவர்களாலும் மனிதர்களலாலும் அழைக்கும் பெயர் பீபத்ஸு🦁🦁🦁

6) போரில் என் இருகைகள் காண்டீவத்தை இழுக்கும் விசயத்தில் ஒத்த செய்கையுடையனவாகவும் பகைவர்களின் படையை அழிப்பவைகளாகவும் இருக்கின்றன.அவ்விரண்டு கைகளில் இடக்கையானது வலக்கையை விட மேலாகியிருக்கிறது. அதனால் ஸவ்ஸயாசி.🐅🐅🐅

7) என்னுடைய நிறமானது கடல் சூழ்ந்த பூமியில் அடைவதற்கு அருமையானதும் இசைந்ததுமாக இருப்பதால் அர்ஜுனன்.💮💮💮

8) இமயமலையின் மேற்கு பக்கத்தில் பகலிம் உத்திரபல்குனி பூர்வபல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் பல்குனன்.🦉🦉🦉

9) யுதிஷ்டிரருடைய தேகத்தில் எவன் காயத்தை உண்டு பண்ணுகின்றானே அவனுடன் போர்புரிந்து குலத்தை அவமதிப்பேன்.அவர்களேடனைவருடனும் போர் புரிவேன். இதனால் தேவர்களுள்ளும் மனிதருள்ளும் நான் ஜிஷ்ணு.🦅🦅🦅

10) என்னுடைய தாயானவள் ப்ருதை என்று அழைக்கப்படுவதால் அவளுடைய மகனான என்க்கு பார்த்தன் என்றும் பெயர்....🦚🦚🦚

மேலும் , காண்டவ வனத்தில் அக்னியை திருப்தி செய்யும் பொருட்டு கிருஷ்ணரோடு சேர்ந்து தேவராஜரை எதிர்த்து போர் செய்து நான் மூர்ச்சை அடைந்தேன். பின்னர் பிரம்மர்,மஹேஸ்வரரும் வந்ததால் எழுந்திருந்தேன். என்னுடைய வீர்யத்தினாலும் செய்கையாலும் மகிழ்ந்து அவர்களிருவரும் அப்போது எனக்கு 'க்ருஷ்ணன்' என்று பதினோராவது பெயரையும் வைத்து பல திவ்யாஸ்திரங்களை வழங்கினர்.

😇😇😇இந்த பெயர்களை தினமும் சொல்லுபவனை துஷ்ட பிராணிகள் அணுகமாட்டா.பகைவர்கள் துன்பம் செய்யமாட்டார்கள் என்று கூறினார்.🥰🥰🥰

காண்டீபத்தின் சிறப்பு :⚡⚡⚡🌈🔱🤴🎠

மஹாபலம் பொருந்திய காண்டீபமானது தெய்வ சம்பந்தம் பொருந்தியது.

 தர்பாக்கினி போல ஜ்வலிக்கின்றதும் காந்தியுள்ளதும் தங்கமயமானதும் 100 தாமரை புஷ்பங்கள் தனித்தனியாக உள்ளதும் நான்கு பக்கம் ரத்தினம் சேர்க்கப்பட்டதும் பின்னால் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஸுர்ய ப்ரபை சந்திர ப்ரபை பொற்றாமரை மலர்களுடன் கூடியதுமான இந்த வில்லுக்கு காண்டீபம் என்று பெயர்

இது லக்‌ஷம் ஆயுதங்களுக்கு சமமானது. தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.

இதை ப்ரம்ம தேவர் 1000 வர்ஷகாலம் வைத்திருந்தார். பின்பு முறையே சிவபெருமான் 64 வர்ஷமும் இந்திரன் 85 வர்ஷமும் சந்திரன் 5000 வர்ஷமும் வருணன் 100 வர்ஷமும் வைத்திருந்தார்.

மங்களகரமான அந்த வில்லை அக்னியானவர் வருணரிடம் இருந்து வைத்திருக்கும் காலத்தில் அதை என்னிடம் குடுத்தார். 

அந்த காண்டீபத்தை நான் 65 வருஷகாலம் தரிக்க போகின்றேன் என்று உத்திரனுக்கு காண்டீப வரலாற்றை அர்ஜுனர் கூறினார்.

#மஹாபாரதம்
#காண்டீபம்
#அர்ஜுனர்
#அர்ஜுனரின்10பெயர்கள்

ராம ராம ராம

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...