இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை பார்த்து நாம் நினைக்கக்கூடும்
ஈ எறும்பு கொசு என்று ஆரம்பித்து கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ உயிரினங்கள் தாவரங்கள் பல நேரங்களில் இவை எல்லாம் எதற்கு உலகத்தில் இருக்கின்றன என்றும் நாம்தான் இந்த உலகத்திற்கு அவசியமானவர்கள் என்றும் நினைத்து விடுகிறோம்
அனாவசியமாக தாவரங்களை வெட்டினால் அதற்கு கூட ஒரு நரகம் இருக்கிறது என்று நம் இந்து தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றது அசிபத்திர வனம் கோரம் என்கிறதுவிஷ்ணு புராணம்.
அசி என்றால் கத்தி கத்தியைப் போன்று நெருக்கமான இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களுக்கு நடுவில் எம பட்டர்கள் நம்மை அனுப்புவார்கள் என்கிறது.
அது உண்மையா இல்லையா என்று ஆராய்வதை விட தாவரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கு இப்படி வலியுறுத்தி சொல்கிறது தர்மங்கள்.
ஒரு சமயம் தேவதைகள் எல்லாம் காயத்ரி மந்திரத்தை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தார்கள்
24 எழுத்துகள் கொண்ட காயத்ரி மந்திரம் 3 பதங்களை உடையது ஒரு பதத்திற்கு எட்டு அட்சரங்கள். ஜெபத்தை முடித்துவிட்டு காயத்திரிக்கு இப்படி மூன்று பதங்கள் உண்டு என்று அங்கே அமர்ந்து கூடி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் இலைகள் வட்ட வடிவமாக இருந்தன இவர்கள் காயத்ரி தத்துவத்தை பேசின பிறகு அந்த மரத்தின் இலைகள் மூன்று மூன்று இலைகளாக தங்களை மாற்றிக் கொண்டன.
தேவதைகளுக்கு ரொம்ப ஆச்சரியம் எப்படி இந்த இலைகள் மாறின என்று...
ஆனால் த்ரீபத காயத்ரி என்று காயத்ரி மந்திரத்திற்கு மூன்று பதங்கள் என்பதை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததால் அவை மூன்று மூன்று இலைகளாக மாறின.
அது என்ன மரம் என்று யூகித்திருப்பீர்களே !
அதுதான் தர்வி என்று அழைக்கப்படும் பலாச மரம்
அந்த இலைகளால் ஹோமம் பண்ணினால் செய்பவன் அமங்கலமான வார்த்தைகளை கேட்க மாட்டான் என்கிறது வேதம் ஏனென்றால் அது உயர்ந்த காயத்ரி சம்பந்தம் உடைய இலைகளாக அமைந்திருப்பதால்.
நல்ல செவிப்புலன் அதற்கு இருந்ததால் ரகசியமாக தேவதைகள் பேசின காயத்ரியை கேட்டு வெளியிட்டது
அதனால்தான் பிரம்மச்சாரிகளுக்கு உபநயனம் செய்யும் பொழுது கையில் பலாச தண்டத்தை கொடுப்பார்கள்.
அதற்குள்ள நல்ல செவிப்புலன் இவனுக்கும் அமையட்டும் என்பதால்
அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் எழுதிக் கற்பது என்பதே இல்லை செவி வழியாக கேட்டு மனனம் செய்து கற்கும் முறை இருந்தது. வேதத்திற்கு கூட "எழுதாக் கிளவி" என்று பெயர் உண்டு அதனால் நல்ல செவிப்புலன் அமைய வேண்டும் என்பதை சிம்பாலிக்காக பலாச தண்டத்தை கையில் கொடுத்து சொன்னார்கள்.
உலகத்தில் உள்ள தாவர வர்க்கங்களை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு நம்மை காட்டிலும் அதீதமான சக்தி அவைகளுக்கு உண்டு.
மனிதனாக பிறந்த மாத்திரம் உயர்ந்த பிறவி என்று சொல்லிவிட முடியாது எல்லா உயிர்கள் இடத்திலும் யார் அன்போடு இருக்கிறார்களோ அவனே உயர்ந்த பிறவியாவான்
சாஸ்திரம் "நஹிம்சயா சர்வ பூதானி" என்கிறது.
ஒவ்வொரு நாளும் போர்டிகோவில் இருந்து எனது டூவீலரை இறக்கும் பொழுது வலிய ஐந்து ஆறு எறும்புகள் வரிசை கட்டிக்கொண்டு வண்டியின் சரிவு பாதை வழியாக கடக்கும் சற்று நிதானித்து பிறகு வண்டியை இறக்குவேன் நம்மை அறியாமல் எத்தனையோ உயிர்களை நாம் மிதிக்கிறோம் அழிக்கிறோம் தெரிந்து செய்யக்கூடாது என்பது தான் முக்கியம்.🌺 நன்றி 🙏