Friday, March 11, 2022

வேல் விருத்தம் : 04

வேல் விருத்தம் : 04

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
   அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
   அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
   தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
   கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

அருணகிரியாரின் வேல் விருத்தத்தின் இந்த‌ நான்காம் பாடலின் வரிகளோடு அதன் பொருளை காணலாம்

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
 அங்கியும் உடன்சுழலவே"

அதாவது "அண்டர் உலகம் சுழல" அண்டத்தில் இருக்கும் இந்த உலகம் சுழற்சி அடையவும், "எண் திசைகளும் சுழல" ... எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும், "அங்கியும் உடன் சுழலவே" அதாவது எல்லாவற்றையும் பொசுக்கி சாம்பலாக்கும் அக்கினி தேவனும் சுற்றவும் என்பது பொருள்

மிக பெரிய இந்த உலகம் சுழல்கின்றது, அதனால் எட்டு திக்கையும் தாங்கும் அஷ்டதிக் பாலகர்கள் சுழலுகின்றார்கள், எல்லாவற்றையும் சாம்பலாக்கும் அக்னி தேவனும் சுழல்கின்றான்

"அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே"

அதாவது "அலை கடல்களும் சுழல" அலை கொண்ட கடல்களே சுழல்கின்றன, " அவுணர் உயிரும் சுழல" அசுரர்களே தங்கள் உயிர் பயத்தால் அலறி சுழல, "அகில தலமும் சுழலவே", அவர்கள் இருந்த எல்லா பிரபஞ்சமும் சுழல்கின்றன‌

"மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்"

"மண்டல நிறைந்த இரவி சத கோடி மதி" இரவி என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன், சதம் என்றால் நூறு, ஆக நூறுகோடி சூரியன்களும் சந்திரன்களும் உதிரும் அளவு போர்முரசு அறையும் வண்ணம்

"மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்"

முந்தைய வார்த்தையில் இருந்து அணியும் எனும்வார்த்தை இந்த வரியின் முதலாகி வரும், "அணியும் மணி ஒலி" தான் அணிந்திருக்கும் மணி ஒலியால்

"சகல தலமும் மருள" எலல்லா உலகங்களும் மருட்சி அடையவும், "சிரம வகை வகையினில் சுழலும் வேல்" ப. புரிந்து கொள்ளமுடியா பல வகைகளில் உலகையே மிரட்டும்படி வரும் வேல் யாருடையது என்றால்..

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்

"தண்டமுடனும்" பெரிய தண்டாயிதத்துடனும், "கொடிய பாசமுடனும்" உறுதியான பாசகயிற்றுடனும், "
"க‌ரிய சந்தமுடனும்" கருத்த நிறத்துடனும் "பிறைகள் போல" நிலவின் பிறைகள் போல 

"தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்"

"தந்தமுடனுமும்" அதாவது சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், "தழலும் வெங்கணுடனும்" நெருப்பை உமிழின்ற கண்களுடனும் , "பகடு தன் புறம்" எருமைக் கடாவில் ஏறி வரும் "சமனை" எமனை

"கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்"

முந்தைய வரியின் யான் எனும் வார்த்தை சேந்து "யான் கண்டு குலையும் பொழுதில்" எமனை கண்டு நான் அஞ்சும்பொழுது, "அஞ்சேல் என". பயப்படாதே என்று, "மென் சரண கஞ்சம் உதவும் கருணைவேள்" த‌ன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி

"கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

கந்தன் , முருகன், குமரன் என்பவனும் "வண்குறவர் தம் புதல்வி" காட்டு குறவர் பெற்ற மகளின் கணவணின்
வலிமையான கையில் விளங்கும் வேல் அது

ஆக பாடலின் பொருள் இதுதான்

அண்ட சராசரமெல்லாம் சுழல, எண் திசையும் அதன் அஷ்ட பாலகர்களோடு சுழல, எல்லாவற்றையும் பொசுக்கும் அக்னி பகவானே சுழல, அலையாடும் கடல் சுழல, அரக்கரும் தன் அழிவு வந்ததென சுழல, அவர்கள் ஆண்ட பிரபஞ்ச அகிலமும் சுழல, நூறு கோடி சூரியனும் சந்திரனும் உதிரும் வண்ணம் போர்முரசு கொட்டியபடி தன்னில் அணிந்த மணிகள் ஒலிக்கும்படி எல்லா உலகமும் (14 உலகமும் 1008 அண்டமும்) சுழலும் படி புரியா வகையில் வரும் வேல் யாருடையது?

அது தண்டாயுதமும், கொடிய பாசகயிறும், சந்திரன் பிறைபோல் வளைந்த பல்லும், நெருப்பை உமிழும் கண்களும், கரிய நிறத்துடனும் எருமைமேல் வரும் எமனை கண்டு நான் அலறும்பொழுது, அஞ்சாதே நான் இருக்கின்றேன் என சொல்லி வருவதும், கந்தன் முருகன் குமரன் என்பவனும், கானகத்து குறமகளின் கணவனுமான முருகனின் திருக்கையில் இருக்கும் வேல் என்பது பொருள்

இதன் ஞானமறைபொருள் என்ன?

ஒவ்வொருவனுக்கும் அவன் உடலில் உயிர் இருக்கும் வரைதான் வாழ்வு, அந்த வாழ்வினை முடித்து கொள்ள யாரும் தயாரில்லை. உலகிலே எல்லோருக்கும் இருக்கும் ஒரே பயம் மரண பயம்

எவ்வளவு பெரும் ஞானியென்றாலும் அவனும் வாழ்வை நீட்டிக்க விரும்புவானே ஒழிய இந்த உலகில் வாழ்வினை முடிக்க ஒருவரும் விரும்புவதில்லை

ஆனால் வாழ்வு முடியும் நேரம் உடலை விட்டு உயிர் நீங்கும் நேரம் மனம் கலங்கும், கண்கள் மங்கும் , காது கேட்கும் திறனை இழக்கும் இன்னும் உடல் கலங்கி உள்ளம் கலங்கி என்னென்ன சுழற்சிகளோ நடக்கும்

அதைத்தான் அருணகிரியார் இங்கு சொல்கின்றார், உலகம் கலங்கிற்று அண்டம் கலங்கிற்று கடல் கலங்கிற்று அக்னி தேவன் கலங்கினான் என்பதெல்லாம் கடைசி நேரத்தில் உடலும் மனமும் படும் அந்த கலங்கிய நிலை போராட்டத்தை கையறு நிலை போராட்டத்தை குறிப்பதே

இங்கு சூரிய சந்திரன் என்பது இரு நாசி மூச்சினை குறிப்பது, அக்னி என்பது உடல் சூட்டை குறிப்பது சூடற்ற உடல் பிணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, அண்டம் என்பது எல்லையில்லா மனதை குறிப்பது, அசுரர்களின் அலறல் என்பது சாகும் நேரம் ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களை எண்ணி கலங்குவதை குறிப்பது

அந்நிலையில் எமன் வரும் நிலை என்பது சாவு நெருங்கும் நிலை, அந்நேரம் முருகனை நினைத்து சரணடைந்தால் அந்த பயம் நீங்கும் சாவை வெலலாம் என்பது இங்கு சொல்லபடும் மறைபொருள்

சாவை வெல்லலாம் என்றால் சாகாவரம் என்று பொருள் அல்ல, பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறப்பது விதி யாரும் தப்பமுடியாது, மாறாக முருகனை வழிபட்டால் ஞானம் பெருகும் அந்த ஞானம் மரணம் என்பது ஆன்மாவுகான விடுதலை, அந்த ஆன்மா இனி இறைபாதத்தில் நிம்மதியாகும் எனும் தெளிவு வரும்

அந்த தெளிவில் தைரியம் வரும் அந்த தைரியம் சாவையோ எமனின் வருகையினையோ பார்த்து புன்னகைக்க வைக்குமே தவிர அஞ்ச வைக்காது கதற வைக்காது அலறி ஓட வைக்காது

முருகனின் வேல் ஞானவடிவம், அதை சரணடைந்தோர் மரணத்துக்கு அஞ்சமாட்டார்கள், மரணத்துக்கு பின்னும் அவர்கள் வாழ்வும் புகழும் நிலைத்திருக்கும்

ஆம், உலகில் எல்லா மானிடரும் அஞ்சி ஒடுங்கும் மிகபெரிய பயம் மரண பயம். இந்த உலகத்தின் இயக்கமே மரணத்தை கண்டு மானிடன் ஓடும் ஓட்டத்திலும் சாவு வந்துவிட கூடாது என எடுக்கும் பெருமுயற்சியில்தான் இருக்கின்றது ஆனால் அதையும் தாண்டி அந்த பயம் ஒரு காலமும் மனதை விட்டு நீங்குவதே இல்லை

முருகனை வழிபட்டால் அவனின் ஞானவேல் அந்த பயத்தை அகற்றும், வாழ்வு ஒரு விளையாட்டு மைதானமாக தோன்றும், விளையாட்டை முடிக்கும்படி அவன் உத்தரவிட்டால் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முருகன் கூடவருவான் எனும் நம்பிக்கையினை கொடுக்கும்

மானிட வாழ்வு முடிவதை தவிர்க்க யாராலும் முடியாது எனும் பெரும் ஞானமும் அமைதியும் மனதில் கிட்டும் மரணத்துக்கு பின் ஆன்மா இறைபாதத்தில் அமைதிகொள்ளும் எனும் பெரும் நம்பிக்கை உருவாகும் அந்த அமைதியும் நம்பிக்கையும் காலனை நோக்கி புன்னகைக்க வைக்கும்

ஆம், முருகனை மனமார வழிபட்டால் மரணபயம் இல்லை, வராது என இந்த நான்காம் விருத்தத்தில் அழுத்தி சொல்கின்றார் அருணகிரிநாதர்

அப்படியே யோகம் என்பது சாதாரணம் அல்ல மனம் ஒருமிக்கும் யோகத்தின் பொழுது மனம் எனும் பெரும் உலகம் சுழலும் , பெரும் அலையடிக்கும் பெரும் பிரளயமே ஏற்படும், மனதை அடக்கி யோகத்தில் நிறுத்துதல் என்பது உலகையே சுழற்றி அடக்குவதற்கு சமம்

ஐம்புலன்களையும் கட்டுபடுத்துவது என்பதும் எட்டு வகை உணர்ச்சிகளையும் அடக்குதல் என்பதும் ஆசை அலைமோதும் மனதை அடக்குதல் என்பதும் சாமான்யம் அல்ல‌

மனம் என்பதும் எல்லையில்லாத பிரப்ஞ்சம் போன்றது, யோகம் என்பது தொடங்கும்பொழுது அது பிரளயமாகும் பெரும் குழப்பமெல்லாம் அடைந்துதான் தெளியும்

முருகபெருமானின் ஞானத்தால் அந்த மனம் முழு தெளிவடையும், எக்குழப்பம் வந்தாலும் அவரின் ஞானம் அதை அடக்கி மனதை அமைதியாக்கும், அந்த ஞானம் பெற்ற மனம் மரணத்தை விரட்டும், முழு ஞானம் அடைந்த யோகி அரூபியாய் நிலைப்பான், காலன் எனும் எமன் அவனிடம் தோற்பான் என்பதும் பொருளாகும்

gst for land purchase in tamilnadu

 GST is not applicable to the sale of land because it is neither treated as supply of goods nor the supply of services as per Schedule III of the CGST Act, 2017. Land is identified as immovable property, and so, it does not attract GST.

வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " #இப்பழக்கம்_சரியா

#வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " 

#இப்பழக்கம்_சரியா....????

#தவறான_வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . 

#இறப்பு_நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . #இடைச்_செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை
ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு 
,அக்குடும்பத்தினருக்கு
எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்து விடும்
 இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . 

#பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும்.. 

#கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .

#தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி


How to call to Tamilnadu from Karnataka in mobile number?

 codes 81,82,83,+ Numper 

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...