Showing posts with label palani. Show all posts
Showing posts with label palani. Show all posts

Thursday, February 3, 2022

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் , palani,

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் 


தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தைப்பூச திருவிழா நடந்த களைப்பில் இருக்கும் பழனி தண்டாயுதபாணிக்கு எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் ஆயிரக்கணக்கான காவடிகளுடன் வந்து பல டன் பஞ்சாமிர்தம் செய்து குளிர குளிர அபிஷேகம் செய்து மருமகனை குளிர்வித்துள்ளனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் எப்படி மருமகன் அக முடியும் என்று கேட்கிறீர்களா? திருச்செந்தூர் முருகன் மீனவப்பெருமக்களுக்கு மாப்பிள்ளை சாமி, அதே போலத்தான் எடப்பாடி மக்களுக்கு முருகப்பெருமான் மருமகன் சாமி. வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள்.

மருமகனுக்காகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக காவடி சுமந்து கொண்டு பாதை யாத்திரையாக வந்து 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்தாக கொண்டுள்ளனர்.

360 ஆண்டு கால பாரம்பரியம் 
பருவத ராஜகுல காவடி குழுவினர்

தைப்பூசத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் சார்பில், சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவது வழக்கம். 

கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக வரும் எடப்பாடியை‌ சேர்ந்த பருவத ராஜகுல காவடி குழுவினர் பழனிகோவிலுக்கு வந்து இரவு நேரமும் பழனி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட செப்புப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டம் பாட்டம் 
பய பக்தியோடு விரதம்
பழனி மலை முருகனை தரிசிக்க செல்பவர்கள் மாலையில் கீழிறங்கி விட வேண்டும். ஆனால் எடப்பாடி பருவதராஜ குல மக்கள் மட்டும்தான் விடிய விடிய தங்கியிருந்து பல ஆயிரம் கிலோ பஞ்சாமிருதம் தயாரித்து வழிபடுகின்றனர். மலையை பல டன் மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அதிர வைத்து விடுவார்கள்.
பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும் எடப்பாடி கிராம மக்கள் பாதயாத்திரைக்கான காப்பு கட்டி, விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த கிராமமே விரதமிருப்பர்

கொண்டாட்டமாக வந்த பக்தர்கள்
பழனி ஆண்டவரைத் தரிசித்து, வீடு வந்து சேர்ந்ததும் படையல் போட்டப் பிறகுதான் அவர்களின் விரதம் நிறைவு பெறும். அந்தளவுக்குப் பக்தியுடன் விரதம் இருந்து தன் மருமகனை வழிபடுகிறார்கள் எடப்பாடி மக்கள்.
இந்த ஆண்டும் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் காங்கேயம், வட்ட மலை, தாராபுரம் வழியாக நேற்று பழனியை வந்தடைந்தனர். ஆயிரக்கணக்கான எடப்பாடி மக்கள் சர்க்கரைக் காவடி, கரும்புக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என்று விதவிதமான காவடியெடுத்து பெருங்கொண்டாட்டத்துடன் பழனியில் குவிந்தனர்.

படி பூஜை 
படிகளுக்கு பூஜை
மலைக் கோவிலில் படி பூஜை செய்து வழிபட்டனர். மலையில் தங்கியிருந்த மக்கள் ஓம் சரவண பவ என்று மலர்களால் அலங்காரம் செய்தனர். விபூதி படையல் போட்டு அரோகரா என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மலை முழுவதும் எதிரொலித்தது. எடப்பாடி காவடிக் குழுவில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன. எடப்பாடி பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரித்தனர்.

எடப்பாடி பக்தர்கள்
இதற்காக 10 டன் வாழைப் பழங்கள், 5 டன் சர்க்கரை, இரண்டரை டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 250 கிலோ தேன், 250 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. ராட்சத அண்டாக்களில் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் பழனியாண்டவருக்கு படைத்து, பின்னர் எடப்பாடி பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

மருமகனுக்கு அபிஷேகம் 
நோய் தீர்க்கும் திருநீறு
வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள். நோய் தீர்க்கும் பிரசாதமாக பழனி மலை விபூதியை கொண்டாடுகின்றனர். உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டால் முருகனை நினைத்து திருநீறு பூசினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான்தான் இவர்களுக்கு குல தெய்வம். தெய்வமாக பார்ப்பதை விட மருமகனாக பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்திருக்கிறது. அந்த பாசத்துடன்தான் தைப்பூசம் முடிந்து சீர் கொண்டு வந்ததோடு பல ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபட்டு வீடு திரும்புகின்றனர்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...