Showing posts with label நாட்டுமாடு நெய். Show all posts
Showing posts with label நாட்டுமாடு நெய். Show all posts

Saturday, November 25, 2023

நாட்டுமாடு நெய்

நாட்டுமாடு நெய்.

நாட்டுமாடு பாலில் இருந்து பாரம்பரிய முறைப்படி தயார் செய்யப்பட்ட சுத்தமான நெய் கிடைக்கும்.
நெய் காய்ச்சும் முறை:
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும்:
இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம். * அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும். * மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும். 

ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
நெய் உருக்கி மோர் பெருக்கி….
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

ஞாபக சக்தியை தூண்டும்,சரும பளபளப்பைக் கொடுக்கும்,கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே…
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். * கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும். 
நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். * நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது. * சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும். * உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது. 
நெய் நமக்கு ‘ஒஜஸ்’ என்கிற உயிர் சக்தியைக் கொடுக்கிறது.
நமது நினைவாற்றலுக்கும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
தேனைப் போலவே நெய்யும் நமது உடலின் திசுக்களுக்குள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்தது.
அனைத்து நோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி;
.ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை. இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...