Showing posts with label தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி. Show all posts
Showing posts with label தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி. Show all posts

Tuesday, January 10, 2023

தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி


தமிழகத்தின் பிதாமகனும், தமிழை வளர்த்தவனும் தமிழகத்துக்கு காவேரி முதல் பொருநை வரை கொடுத்தவனும், சிவபெருமானின் தூதனாக தென்னாட்டிற்கு வந்து சனாதன தர்மத்தினையும் தமிழையும் வளர்த்த சித்தர்கள் போற்றும் தலைவன் அகத்திய மாமுனியின் பிறந்தநாள் சித்த மருத்துவ தினமாக கொண்டாடபடும் என மத்திய( ஒன்றிய ?) அரசு அறிவித்துள்ளது
 இது மிகவும் நல்ல அறிவிப்பாகும்..

ஒவ்வொரு சித்தனும், ஒவ்வொரு தமிழனும் பெருமைபட வேண்டிய விஷயம் இது

அகத்திய மாமுனி சித்தர்களின் தலைமை குரு, எல்லா சித்தர்களும் அவரிடம் இருந்தே தீட்சை பெற்று சித்தபுருஷர்களாக உருவானார்கள், ஆன்மீகம், தமிழ், வாழ்வியல், மருத்துவம், வானியல், பிரபஞ்சம் என எல்லா போதனையும் அகத்தியரிடம் இருந்தே இங்கு கற்றுக்கொண்டனர்.

அவர் உண்டாகிய மருத்துவமே சித்த மருத்துவம் என்றானது, அவர் வழி சீடர்கள் அதனை இன்னும் வலுபடுத்தினர்....

அப்படிபட்ட அகத்திய மாமுனி மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார், அது இந்த ஆண்டு ஜனவரி 9ம் நாள் வருகிறது 

அந்நாள் *தேசிய சித்த மருத்துவ தினம்* என இந்திய அரசு அறிவித்து அகத்தியர் பெயரால் அதனை கொண்டாட அறிக்கை வெளியிட்டுள்ளது

இதனை தமிழக சித்தமருத்துவ மருத்துவமனைகளும்  கொண்டாட வேண்டும், 

அகத்தியரின் பணி எக்காலமும் இங்கு உண்டு , சித்த மருத்துவத்தில் அன்று தொடங்கி இன்று "கபசுர குடிநீர்" எனும் கொரொனா தடுப்பு மருத்துவநீரும் அவர் கொடுத்த மூலமே

அப்படிப்பட்ட அகத்தியரை, சித்த மருத்துவப்  பிதாமகனாக மத்திய அரசு அறிவித்துள்ளது

இதனில் என்ன சுவாரஸ்யம் என்றால திருநீறு இல்லாமல் கமண்டலமும் தண்டமும் ருத்திராட்சமும் இல்லாமல் அகத்தியனை நிறுத்தமுடியாது

அகத்தியர் வேறு அகஸ்தியர் வேறு, அவர் வழிபட்ட சிவன் வேறு இவர் வழிபட்ட சிவன் வேறு என்றெல்லாம் குழப்பியடிக்கவும் முடியாது

அவரை தொட்டுபார்க்கவே இவர்களால் முடியாது, அகத்தியரின் சக்தி அப்படி

இதனால் பல்லை வாயை கடித்து கொண்டு நடப்பதை பார்த்து சுவரில் முட்டுவதை தவிர வேறொன்றும் அவர்களால் செய்யமுடியாது

சித்தர்கள் அழிவில்லாதவர்கள், எப்பொழுதெல்லாம் தர்மம் அழியுமோ அப்பொழுதெல்லாம் தங்கள் சக்தியால் தர்மத்தை தாங்குபவர்கள்.

அந்த சித்தர்களின் தலமை சித்தனை மத்திய அரசு கொண்டாட தொடங்கியிருப்பது வரவேற்க தக்கது, வரலாற்றிலே இந்தியா முழுக்க தமிழக பாபநாச சித்தர் அறியப்பட தொடங்கியிருக்கின்றார்.

ஜனவரி 9 அதாவது மார்கழி ஆயில்ய நட்சத்திரம் அன்று காவேரி கரை தொடங்கி, ஈரோட்ட்டு நட்டாறீஸ்வரர் கோவில் நெல்லை பாபநாசம் கோவில் என எல்லா இடமும் அகத்தியரை கொண்டாடி வழிபட வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகின்றது

இந்துஸ்தானத்துக்கான அரசு எப்படி இருக்கவேண்டும் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டு, நல்ல அரசு ஏன் அவசியம் என்றால் இதற்காகத்தான்

"தமிழர் தந்தை" அகத்திய மாமுனியின் அவதார நாளை சிறப்பாக கொண்டாடுவோம், தமிழக தந்தை அவனேதான், அந்த மாமுனி மட்டும்தான்..

காசி துலங்க பாரதம் துலங்கும் என்பது இதுதான், இதோ துலங்கி கொண்டிருக்கின்றது

"தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி"

🙏🙏🙏🙏🙏

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...