Showing posts with label 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை. Show all posts
Showing posts with label 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை. Show all posts

Monday, June 12, 2023

10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை



தொழில் அதிபர் சையத் சமீர் உசேன் அவர்களின் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார்.

பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.

7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். 

தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன.

இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நிருபர்களை சந்தித்து காண்பித்து பேட்டி தருவதாக கூறினார் 


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...